
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் மனம்போல தேவைப்படுவோருக்கு தேடிச் சென்று உதவுவதில், தான் சம்பாதித்த பணத்தை மற்றவருக்கு கொடுத்து உதவும் "தர்மவான்" திரு. பாலம் கல்யாணசுந்தரம் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். இவரைப் பற்றி......
இவரின் சொந்த ஊர் ஏர்வாடியில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கருவேலங்குளம். இவரது தந்தை பெயர் பால்வண்ணன். அந்த ஊர் மக்களின் நாட்டாமை. இவர்
* "பாலம் ஐயா" அவர்கள் நெல்லை மாவட்டத்துக்காரர். ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் கலைக்கல்லூரியில் நூலகராக பணியாற்றியவர்.
* கற்பனை செய்துகூட பார்க்கவியலாத கனவு மனிதராக காணப்படுகிறார்.
* தனக்கு வந்த பென்ஷன் தொகை 11 லட்சம் ரூபாயை அப்படியே குழந்தைகள் நல நலநிதிக்காக தந்தவர்.
அமெரிக்கா வழங்கிய 30 கோடி ரூபாயை உலக குழந்தைகள் நலனுக்காக கொடுத்தவர்.
* ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து அதன் வருமானத்தை மற்ற நற்பணிகளுக்காக கொடுத்தவர்.
* சூப்பர் ஸ்டார் ரஜினி இவர் நற்பண்புகளை கண்டு "இவரை தந்தையாக" தத்து எடுத்து வீட்டில் வைத்திருந்தார். தன்னை சந்திக்க வரும் அறிஞர் பெருமக்களை சுதந்திரமாக சந்திக்க முடியவில்லை என்று ஒரு சிறிய அறையில் தங்கி உள்ளார்.
இவருடைய பொது சேவைகள்
1) ஏழை எளிய மாணவர்களை தத்து எடுத்து கொள்ளுதல்
2) மாணவ மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்குதல்
3) 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.
4) பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நல் ஒழுக்கம், பொது அறிவு, அதிக மதிப்பெண் ஆகியவற்றுடன் தேர்வு அடையும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.
பாலம் ஐயா அவர்கள் உரை: - (அல்லது வேண்டுகோள்)
தமிழக அரசு ஊழியர்கள் நிலுவை தொகை பெறுவோர் தொகை 1150 கோடி. தங்களது நிலுவை தொகையினை அரசு வழங்கும்போது அவர்கள் புதிய சம்பளத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு பைசா அளித்தாலே ஒரு ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி கிடைக்கும்.
மத்திய அரசு 6வது ஊதியக்குழு அமுலானது அவர்களும் 17 சதவீதம் கொடுத்தாலல் ரூ. 4,000 கோடி கிடைக்கும்.
இந்த 3000 கோடியை, மக்கள் வரிபணத்தின் மூலம்தான் அரசு ஊதியம் மற்றும் நிலுவை தொகை அளிக்கிறது. வரி செலுத்தும் கோடிக்கணக்கான ஏழை மக்கள் பிள்ளைகள் படிக்க நமது வருவாயில் ஒரு சிறு பகுதியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே, இதை முழுவதும் கல்விக்கு பயன்படுத்தினால் அனைவருக்கும் ஏற்ற தாழ்வு இல்லா கல்வி கிடைக்கும்.
கல்வியில் ஒரு நாடு தன்னிறைவு பெற்றால் எல்லா வளங்களும்தானே வந்து சேரும். இது அரசு ஊழியர்களின் காதில் ஏறுமா?
இவரை பற்றி அறிஞர்கள் கூறும் கருத்தை தெரிந்து கொள்ளலாமா?
மாண்புமிகு டாக்டர் சா. ஜெகத்ரட்சன் எம்.ஏ., டி. லிட்.,
பாலம் ஐயா அவர்களை போல் ஒரு மனிதரை காண்பது அரிது. அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்று பெருமை கொள்கிறேன். சாதனையாளர்களின் சாதனையாளர் அவர்.
பாரத ரத்னா ஏ.பி. ஜே. அப்துல்கலாம், முன்னாள் குடியரசு தலைவர்
தன்னலம் இல்லாமல் வாழ்வது சிறப்பான பெருவாழ்வாகும். இறைவன் பா. கல்யாண சுந்தரத்திற்கு அந்த அரும்பெறும் வாழ்க்கையை கொடுத்திருக்கிறார். அவர் நிழலில் பலர் சிறப்படைந்துள்ளனர்.
பெருந்தலைவர் முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்கள் - (1-5-1963)
இந்தியாவிலே தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை அளித்த முதல் மாணவன் என்ற வகையில் நமது நாட்டின் பாதுகாப்பு நிதிக்கு தங்கம் வழங்கிய மாணவர் கல்யாண சுந்தரம் தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார்.
ஆளுநர் பாத்திமா பீவி (முன்னாள் தமிழக ஆளுநர்) (15.8.99)
நீதி மிகுந்த உங்கள் வாழ்க்கை மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கலைஞர்:(முன்னாள் தமிழக முதல்வர்)
அறிவு பரப்பும் ஆக்க பணியில் அயராது உழைக்கும் திரு கல்யாண சுந்தரனாரின் கடமை உணர்வு பாராட்டுதற்குரியது.
நீதிபதி நடராஜன் (உச்சநீதிமன்ற நீதிபதி) (ஓய்வு)
நல்ல தலைமை பண்புகளுடன் ஏராளமான இளைஞர்களையும் மாணவ மாணவிகளையும் ஒருங்கினைத்து பா. க., செய்து வரும் சேவைகள் நிச்சயம் ஒரு சமுதாய மாறுதலை எற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.
நீதிபதி மோகன் (உச்ச நீதிமன்ற நீதிபதி) - (ஓய்வு)
பிறப்பாலே தமிழன், தொழிலால் கொடை வள்ளல், இமயம் போன்ற உயர்ந்த உள்ளம் கொண்ட கல்யாண சுந்தரம் 21ம் நூற்றாண்டின் சாதனை சக்கரவர்த்தி என்றால் மிகையல்ல.
இப்படி பல அறிஞர் நீதியரசர்கள், அரும்பெரும் தலைவர்களால் பாராட்டு பெற்ற போதும், மிகவும் எளிமையாக, அடக்கமாக, ஊருக்கு உழைக்கும் உத்தமனாக, உயர்ந்து மற்றவருக்கு பாடமாக வாழும் பா. கல்யாண சுந்தரம் அவர்களை வாழ்த்துவோம்.
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் :
இவரை பற்றி, விக்கி பீடியா வில் வலைபதிவு செய்ய இன்னும் முழுமையான தகவல்கள் தேவைபடுகின்றன.
இவரின் தொலைபேசி/செல்பேசி அல்லது முகவரி கிடைப்பின் தயவு கூர்ந்து மின்னஞ்சல் செய்க.
4 comments:
இதுபோன்ற மனிதரைக் காட்டிலும் உயர்ந்தவர் வேறொருவர் இருப்பரோ' எனும் ஒரு பிரம்மிப்பு ஏற்படுகிறது. இத்தனைப் பெரிய மனதுள்ள ஒரு மனிதர் இருப்பதை எண்ணித்தான் மழை கூட பொழிகிறதுபோல். வாழ்வின் பேரானந்தம் ஒன்று இருக்குமெனில் இதுபோன்ற மனிதர் ஒருவரை காணும் தருனமாகவே இருக்கும். இறையருள் அவருக்கு மேலும் நிறையட்டும்..
குறிப்பாக அவர் குறிப்பிடும் லட்சியமேனும் நாம் கவனத்தில் கொள்ளத் தக்கது:-
//என்றும் இன்பமுடன் இனிது வாழ எதன் மீதும் பேராசை கொள்ளாது இருப்போம்!
பத்தில் ஒன்றையேனும் தானம் செய்வோம்!
தினமும் ஒரு உயிருக்கேனும் நன்மை செய்வோம்!!
எனும் கருத்து நிறைந்த இத்தகைய உயர்ந்த ஒரு மனிதரை அறியத் தந்தமைக்கு பெருநன்றிகளும் வணக்கமும்!!
வித்யாசாகர்
Please visit "RightMantra.com" - you will get the contact details about
Thiru. Balam Kalyanasundaram sir.
வாழும் மகாத்மா இவர்தான். கைதொழுகிறேன் ஐயா...
கடவுள் மனித உருவில் வாழ்கிறார் என்பதற்கு ஐயா அவர்களே ஒரு உதாரணம்
Post a Comment