உண்மைசுடும்

Saturday, 4 February 2012

குடும்ப ஆணவ மதவாத அரசியலில் சிக்கி தவிக்கும் தமிழகம்

குடும்ப அரசியல்: திமுக பொதுக்குழுவில் ஸ்டாலினா, அழகிரியா என்ற விசயத்தில் பெரும் சர்ச்சை நடந்தது. அதனால் கருணாநிதி மிகவும் மனம் உடைந்து பேசினார்.

பெரியாரால், அண்ணாவால் பாராட்டுப் பெற்றவன் நான். தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என ஒருக்காலும் விரும்பியவனல்ல. என்று சொன்னார் தமிழ் இன (ஈன) தலைவர் கருணாநிதி.

இவர் எப்படி? அண்ணாவிற்கு பின் கட்சியில் இருந்த மூத்த தலைவர்களை புறம்தள்ளி முன்னுக்கு வந்தார் என்பது யாவரும் அறிந்ததே. கட்சிக்காக மாடாய் உழைத்த எத்தனையோ உண்மையான தலைவர்கள் இருக்க மகன் அழகிரி, ஸ்டாலின், மகள் கனிமொழி, பேரன் மாறன் என்று மொத்த குடும்பத்தையும் கொண்டு வந்தார்.

மஞ்சள் பையோடு அரசியலுக்கு வந்த கருணாநிதியின் குடும்பம் இப்போது ஆசியாவிலே பெரும் பணக்காரர்கள் வரிசையில் உயர்ந்து நிற்கிறது. இதுவெல்லாம் யார் பணம்? நிச்சயமாக உழைத்து சம்பாதித்தது இல்லை எல்லாமே மக்கள் பணம்.

ஆணவ அரசியல்: ஜெ தளுக்கி, குலுக்கி உடலை காட்டி நடித்து பணம் சம்பாதித்து, எம்.ஜியாரை மயக்கி அரசியலுக்கு வந்தவர். இவர் பார்பனர் என்பதால் இயல்பான ஜாதி வெறி. நடிகை என்பதால் எல்லோரையும் தொட்டு நடிக்க வேண்டும் அதில் தீட்டு பார்க்க முடியாது.


அதனால் அரசியலுக்குள் வந்ததும் தனது ஆஸ்தான பார்பன குருக்கள் சொல்வதை கேட்டு சட்டமன்ற கட்டிடத்தை மாற்றினார். அமைச்சர்கள் எல்லோரையும் காலில் விழுந்து நமஸ்காரம் செய்யவைத்தார். அமைச்சர்களையும் அதிகாரிகளையும் இங்கும் அங்கும் பந்தாடினார்.

தனது அரசியல் குருக்களாக கோமாளிகளான சோவையும், சுப்பிரமணிய சுவாமியையும் நியமித்தார். இப்போது தனது கூட்டணியில் உள்ள எதிர்கட்சி தலைவரையும், M.L.A களையும் தனக்கு அடங்கி போகச்சொல்லி ஆணவம் செய்கிறார். கேள்விகள் கேட்கத்தான் எதிர்கட்சி என்பதை மறந்து தனக்கு அடிமை சாசனம் எழுதச்சொல்கிறார்.

வெத்து வெட்டு விஜயகாந்து: ஈழத்து இனஅழிப்பு, கூடங்குளம், தமிழக மீனவர் படுகொலை, எதிலும் வாய்திறக்காத எதிர்கட்சி தலைவர். பஞ்சாயத்து தேர்தலில் அம்மா கலட்டி விட்டதால் கடும் தோல்வியை சந்தித்தார். ஜெ சொன்னமாதிரி இவர் ஆதிமுக உடன் கூட்டு சேர்ந்ததால்தான் இத்தனை சீட்டுக்களும், எதிர்கட்சி தலைவர் அந்தஸ்தும் என்பது உண்மையே.

சினிமாவில் கைநீட்டி, நாக்கை கடித்து ரவுடி மாதிரி வசனம் பேசிய இவர் அதை அட்ச்சாரம் பிசகாமல் சட்டமன்றத்திலும் செய்து முடித்துள்ளார். இவரது சினமா வசனம் எல்லாம் அங்கே பலிக்கவில்லை. இவருக்கு ரவுடி மாதிரி பேசத்தானே தெரியும் ஆனால் திமுக, அதிமுகவில் இருப்பதில் பெரும்பான்மையினர்கள் ரவுடிகல்தானே. அதனால் இவரது பேச்சு அங்கே எடுபடவில்லை.

காங்கிரஸ் கோமாளிகள்: இந்த கட்சியில் தொண்டர்களே கிடையாது என்கிற அளவுக்கு தலைவர்கள் நிறைந்த கட்சி. அதிமுகாவுக்கு அடுத்து அடிமைகள் நிறைந்த கட்சி என்று இதை சொல்லலாம். சோனியா எந்த திசையில் கையை காட்டினாலும் ஓடும் மாடுகள்தான் இவர்கள்.

இந்த மாடுகளோடு, மாட்டை வைத்து கட்சி நடத்தும் ஹிந்துத்துவா மாடுகளும் ஒன்றாய் சேர்ந்து கூடங்குளம் அணு மின்நிலையத்தை திறக்க சொல்லி போராட்டம் நடத்துகிறார்கள். காங்கிரஸ்காரர்களுக்கு சோனியா தெய்வம், அதிமுக.காரர்களுக்கு ஜெ தெய்வம். மற்றபடி இவர்களுக்கு மக்களை பற்றி எந்த கவலையும் கிடையாது.

   நன்றி:    http://www.sinthikkavum.net/2012/02/blog-post_03.html

பரிணாம வளர்ச்சியின் ஒரு வினோதமான பக்கம்


பரிணாம வளர்ச்சி என்பது அனைத்து உயிரினங்களிலும் நடைபெற்றுவருமொன்றாகும். இந்த அரிய செயன்முறையின் காரணமாகவே நாம் இன்று மனிதர்களாய் இவ்வுலகில் வலம் வருகிறோம். இப் பரிணாம வளர்ச்சி எம்மில் இன்னும் நிகழ்நது கொண்டே இருக்கிறது. இவ்வாறு குரங்கில் இருந்து மனிதன் உருவாகுவதற்கு காரணமாகயிருந்த இந்த பரிணாம வளர்ச்சியின் வினோதமான பக்கமொன்றும் உள்ளது. அதுவே இங்கு உங்களுக்கு முன்வைக்கப் பட்டுள்ளது.








இந்திய தேசத்தின் முகமூடியைத் கிழித்த புதுவையில் நாள் முழுவதும் பரபரப்பு


கூடங்குளம் அணுஉலை: மின்சாரம் தயாரிக்கவா? அணுகுண்டு தயாரிக்கவா? அல்லது தமிழர்களைச் சாவு கொடுக்கவா? முல்லைப் பெரியாறு : மலை யாளிகள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல! தமிழர்களின் முதன்மை எதிரியே இந்திய அரசு தான்! – எனும் கருத்துக்களை விளக்கிப் பரப்புரைப் பயணம் 22.12.2011 அன்று புதுச்சேரி மாநிலப் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் நடை பெற்றது.
பரப்புரைப் பயணம் காலை ஒன்பது மணியளவில் புதுவை அண்ணா சிலையருகே துவங்கியது. பரப்புரைப் பயணத்தின்போது கூடங்குளத்தில் அணுமின் நிலையம் திறந்தால் ஏற்படும் தீமைகளையும், முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முயற்சிக்கும் மலையாளி களின் அடாவடித்தனத்தைக் கண்டிக் காத உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற வக்கற்ற இந்தியாவைக் கண்டித்து கருத்துரை வழங்கப் பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் தங்கள் ஈருருளியில் வந்து பரப்புரைப் பயணத்தில் கலந்து கொண்டனர். அதில் நான்கு பேர் பெண்கள் ஆவர். பரப்புரைப் பயணத்தின்போது முல்லைப் பெரியாறு உரிமையை மீட்டெடுத்தல் மற்றும் கூடங்குளம் அணு உலையின் ஆபத்தை விளக்கும் துண்டறிக்கை பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆபத்தை விளக்கித் தோழர் முத்துக்கிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்ட நூல் குறைந்த விலைக்கு (ரூ.10) விற்கப்பட்டது. புதுச்சேரி வாழ் மக்கள் பரப்புரையினை ஆர்வமுடன் கேட்டதுடன் நூலையும் வாங்கிப் படித்தனர்.
பரப்புரையின்போது கூடங்குளம் அணுஉலையை மூடச் சொல்லியும், நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழ் நாட்டிற்கே வழங்கக் கோரியும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமுல்படுத்தக் கோரியும், இந்தியாவின் தமிழர் விரோதப் போக்கினைக் கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால் இந்தியா உடையும் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பரப்புரைப் பயணம் புதுவை சாரத்திலுள்ள ஜீவா சதுக்கத்தில் நிறைவுற்றது. நிறைவுரையில் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பலர் உரையாற்றினர். இறுதியாக லோகு அய்யப்பன் உரையாற்றினார்.
குளிரையும் பொருட்படுத்தாமல் பொது மக்கள் உரைகளைக் கேட் டனர். பரப்புரை நிறைவடையும் போது இரவு பத்தே முக்கால் மணி ஆனது.
பரப்புரை நடைபெற்ற இடங்கள்:
காலை – அண்ணாசிலை, சின்ன மணிக்கூண்டு, காந்தி வீதி அமுத சுரபி, நாராயணன் கோவில் சமீபம், அண்ணா சாலையிலுள்ள ஆனந்தா இன் எதிரில், முத்தியால்பேட்டை மணிக்கூண்டு, முத்தியால்பேட்டை சந்தை.
மாலை – திலாசுப்பேட்டை, கொட்டுப்பாளையம், ராஜீவ் காந்தி சிலை அருகில், சண்முகாபுரம் மீன் சந்தை, மேட்டுப்பாளையம், மூலக்குளம், கம்பன் நகர், சாரம்.