உண்மைசுடும்

Monday, 13 February 2012

கறுப்புப் பணம் பதுக்குவதில் உலகிலேயே முதலிடம் இந்தியர்களுக்குதான்!

ரூ 24.5 லட்சம் கோடி அளவுக்கு கறுப்புப் பணம பதுக்கி வைத்துள்ளதன் மூலம், இந்த விஷயத்தில் உலகிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளனர் இந்தியர்கள்.

இந்தத் தகவலை சிபிஐயின் இயக்குநரே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஊழல் ஒழிப்பு மற்றும் சொத்து மீட்பு பற்றிய சர்வதேச அளவிலான திட்டம் குறித்து சர்வதேச போலீஸ் அமைப்பின் முதலாவது மாநாடு நேற்று டெல்லியில் நடந்தது. 19 நாடுகளை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள், நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் சி.பி.ஐ. இயக்குனர் அமர் பிரதாப் சிங் பேசுகையில், "இந்தியர்கள் வரி ஏய்ப்பு செய்து, சுவிட்ஸர்லாந்து, மொரீஷியஸ், பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள் நாடு, லிச்டென்ஸ்டைன் போன்ற வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் ரூ.24றி லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. குறிப்பாக சுவிட்சர்லாந்து வங்கிகளில் அதிக அளவில் கறுப்பு பணம் பதுக்கியவர்களில் இந்தியர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

53 சதவீத நாடுகளில் மிக சொற்ப அளவிலேயே ஊழல் நடப்பதாகவும், அங்கு சர்வதேச பண பரிமாற்றம் வெளிப்படையாக நடப்பதாகவும் கூறுகின்றன. மிக, மிக குறைந்த ஊழல் நடக்கும் நாடுகளில் நிïசிலாந்து முதலிடத்திலும், சிங்கப்பூர் 5-வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 7-வது இடத்திலும் உள்ளன. ஆனால், அந்த நாடுகள்தான் சட்ட விரோதமாக கறுப்பு பணத்தையும், ஊழல் பணத்தையும் பதுக்கி வைக்க இந்தியர்களுக்கு புகலிடம் கொடுத்து ஆதரிக்கின்றன.

அந்த நாடுகளிடம் இருந்து இந்த சட்டவிரோத பணத்தை மீட்பது தொடர்பான தகவல்களை பெறுவதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது. அந்த நாடுகளுக்கு இடையே போதிய அரசியல் ஒத்துழைப்பு இல்லாததும், ஏழை நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களது கறுப்பு பணத்தை அங்கு பதுக்கி வைப்பதால், அதற்கு இடம் கொடுக்கும் நாடுகளின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதாலும் இந்த கால தாமதமும், சிரமும், வீண் செலவும் உண்டாகிறது.

மேலும், அந்த கறுப்பு பணத்தை கண்டுபிடிப்பதிலும், முடக்குவதிலும், பறிமுதல் செய்வதிலும், மீட்பதிலும் சட்ட ரீதியான சவால்கள் உள்ளன. சட்டவிரோத பணம் பற்றி விசாரிப்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. நீண்ட காலம் பிடிக்கிறது. மிக அதிக அளவில் செலவு பிடிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, நிபுணத்துவமும், அரசியல் உறுதியும் தேவைப்படுகிறது.

2ஜி ஊழல் பணம்
India
சி.பி.ஐ. சமீபத்தில் விசாரணை நடத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், மதுகோடா ஊழல் போன்ற வழக்குகளில் சட்ட விரோதமான பணம் துபாய், சிங்கப்பூர், மொரிஷியஸ் போன்ற நாடுகளுக்கு முதலில் சென்று, அங்கிருந்து சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு கொண்டு போய் பதுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

சட்ட விரோதமாக பணம் பதுக்கும் கிரிமினல்கள் குட்டி, குட்டி கம்பெனிகளை தொடங்கி, ஒரு கணக்கில் இருந்து இன்னொரு கணக்குக்கு ஒரு சில மணிகளிலேயே அந்த சட்ட விரோத பணத்தை மாற்றி, பதுக்கி விடுகிறார்கள். வங்கி பரிமாற்றத்துக்கு எல்லை கிடையாது என்பதால் இந்த சட்ட விரோத பண பரிமாற்றம் லகுவாக நடக்கிறது. நாடு விட்டு நாடு பணம் கொண்டு செல்லப்பட்டு பதுக்கப்படுகிறது.

கிரிமினல் நடவடிக்கைகள் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு சட்ட விரோதமாக ரூ.50.5 லட்சம் கோடி கொண்டு செல்லப்பட்டு பதுக்கப்படுவதாக உலக வங்கி மதிப்பிட்டு உள்ளது. இதற்காக வளரும் நாடுகளில் மட்டும் அரசு ஊழியர்களுக்கு ரூ.40 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டதாகவும் உலக வங்கி மதிப்பிட்டு உள்ளது. இந்த சட்ட விரோத பணத்தில் கடந்த 15 ஆண்டுகளில் 25 ஆயிரம் கோடி ரூபாய்தான் மீட்கப்பட்டு இருப்பதாகவும் உலக வங்கியின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது," என்றார்.

நன்றி :http://www.vivasaayi.com

சினிமா வன்முறை காட்சிகள்தான் என்னை கத்தி எடுக்க வைத்தன! – ஆசிரியையைக் கொன்ற மாணவன் வாக்குமூலம்



வருத்தமா இருக்கு… எங்க டீச்சர் செத்துடுவாங்கன்னு நினைக்கவே இல்ல.. போலீஸ் வந்து கைது பண்ணுவாங்கன்னும் தெரியாது, என அப்பாவியாக வாக்குமூலம் அளித்துள்ளான், சமீபத்தில் தனது வகுப்பு ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற மாணவன்.
மேலும் ஆசிரியையை கொல்ல கத்தி எடுக்கத் தூண்டியதே தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் வரும் வன்முறைக் காட்சிகள்தான் என அந்த மாணவன் கூறியுள்ளான்.
சென்னை நகரை மட்டுமல்ல, பள்ளி கல்வி முறையையே உலுக்கியுள்ளது, வகுப்பு ஆசிரியையை அவரது மாணவனே குத்திக் கொன்ற சம்பவம்.
கடந்த வியாழக்கிழமை பாரிமுனையில் உள்ள ஆர்மேனியன் தெருவில் இருக்கும் செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இந்த கொலை நிகழ்ந்தது. அந்த பள்ளியின் ஆசிரியை உமா மகேஸ்வரி வகுப்பறையில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரிடம் படிக்கும் 9-வது வகுப்பு மாணவனே இந்த கொடூரத்தை செய்துவிட்டான்.
அந்த பள்ளி மாணவன் தற்போது கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான். அவனது பிஞ்சு மனது நஞ்சாகி கொலை செய்யும் அளவுக்கு அவன் எவ்வாறு தூண்டப்பட்டான் என்பது அவனது வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது.
சிறுவர் சீர்திருத்த இல்லத்தில்…
அந்த மாணவன் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு தற்போது புரசைவாக்கம் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான். அதே சீர்திருத்த இல்ல வளாகத்தில் செயல்படும் சீர்திருத்த நீதிமன்றம் அவன் மீதான வழக்கை விசாரிக்க உள்ளது.
அந்த சீர்திருத்த இல்லத்தில் பல்வேறு குற்றங்களில் மாட்டியுள்ள 60 சிறுவர்களும், 2 சிறுமிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் இருவருக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் 60 பேரும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் ஒரு பிரிவாகவும், 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இன்னொரு பிரிவாகவும் தனித்தனியாக அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். 15 வயது நிரம்பியவன் என்பதால், 10 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் அந்த இல்லத்தின் முதல் மாடியில் தங்க வைக்கப்பட்டுள்ளான்.
பொதுவாக அறியாத வயதில் புரியாமல், தெரியாமல் சிறுவர்- சிறுமிகள் குற்றங்களில் ஈடுபட்டு இந்த இல்லத்தில் அடைக்கப்படுகிறார்கள். பெற்றோர்கள் விரும்பிய நேரத்தில் இவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
பாரிமுனை பள்ளி மாணவனையும் முதல் நாளன்று அவனது பெற்றோரும், 3 அக்காள்களும் மற்றும் உறவினர்களும் பார்த்து பேச அனுமதிக்கப்பட்டனர்.
சிறுவர் இல்லத்தில் அடைக்கப்பட்டவுடன் அவன் மனதளவில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 3 பெண் அதிகாரிகள் அவனிடம் அன்பாக பேசினார்கள். அவனது மனம்கோணாத வகையில் நடந்த சம்பவம் பற்றி அவனிடம் அன்பாக பேசி கேட்டறிந்தார்கள். முதலில் இல்லத்துக்கு சென்றவுடன் மாணவன் வருத்தத்தோடும், மனஇறுக்கத்தோடும் காணப்பட்டான். பெண் அதிகாரிகளின் அரவணைப்பான பேச்சால், இயல்பான அவன் நடந்த சம்பவம் பற்றி விளக்கி கூறியுள்ளான்.
கொலை செய்தது ஏன்?
அவனது வாக்குமூலத்தின் ஒரு பகுதி:
ஆசிரியை உமா மகேஸ்வரி மிகவும் நல்லவர். அதே நேரத்தில் கண்டிப்பாக பேசுவார். முதலில் அவரை கொலை செய்யவேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. வீட்டில் நான் ஒரே பிள்ளை. அப்பா-அம்மா, என்னை செல்லமாக வளர்த்தார்கள்.
வீட்டில் எனக்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருக்கும். நான் அந்த அறையில் இருந்துதான் படிப்பேன், படுத்து தூங்குவேன்.
மனசைக் கெடுத்த சினிமா
கொலை, வெட்டுக்குத்து, வில்லனை கதாநாயகன் அடித்து நொறுக்கும் சண்டைக்காட்சிகள் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில படங்களையே நான் விரும்பி பார்த்தேன். கடைசியாக `அக்கினி பத்’ என்ற இந்தி படத்தை நான் பார்த்தேன்.
அதில், கதாநாயகன், வில்லனை கத்தியால் நெற்றியில் குத்துவான். அந்த காட்சி எனது மனதில் ஆழமாக பதிவானது.
ரிப்போர்ட் கார்டில் தவறாக எழுதினார்
நான் இந்தி பாடத்தை சரியாக படிக்கவில்லை என்பதற்காக ஆசிரியை உமா மகேஸ்வரி அடிக்கடி என்னை கண்டிப்பார். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 3 முறை எனது `ரிப்போர்ட்’ கார்டில் என்னைப்பற்றி தவறாக எழுதிவிட்டார். என்னிடம் பாசத்தை கொட்டும் எனது தந்தைகூட இதை பார்த்துவிட்டு என்மீது கோபப்பட ஆரம்பித்தார்.
எனக்கு தினமும் செலவுக்காக நான் கேட்கும் பணத்தை என் அப்பா கொடுப்பார். ரிப்போர்ட் கார்டில் ஆசிரியை எழுதியதை பார்த்தவுடன் எனக்கு செலவுக்கு பணம் கொடுப்பதை இனிமேல் தரமாட்டேன் என்று எனது தந்தை கண்டிப்பாக கூறினார்.
இது, மனதுக்கு ஒரு கஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆசிரியை மீது கோபத்தை ஏற்படுத்தியது. கடந்த புதன்கிழமை அன்று இந்தி பாடம் சரியாக படிக்காத என்னைப் போன்ற 7 மாணவர்களை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சிறப்பு வகுப்புக்காக ஆசிரியை உமா மகேஸ்வரி வரச்சொன்னார். அப்போது அவர் என்னை திட்டினார். இனி ஒழுங்காக படிக்காவிட்டால், பெயிலாகி விடுவாய் என்று சொன்னார். இது, எனது மனதில் ஏற்கனவே இருந்த கோபத்தோடு பயத்தையும் உண்டாக்கியது.
மாணவர்கள் கிண்டல்
ஆசிரியை இவ்வாறு சொன்னதை பார்த்து, எனது சகமாணவர்கள் என்னை கிண்டல் செய்தனர். இது, எனக்கு அவமானத்தையும், மேலும் கோபத்தையும் தூண்டியது.
அப்போதுதான் இந்தி படத்தில் வரும் காட்சியைப்போல, ஆசிரியையை கத்தியால் குத்தவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், ஆசிரியை செத்துப்போவார். போலீசார் பிடிப்பார்கள். நம்மை இப்படி இல்லத்தில் அடைப்பார்கள் என்று எதுவும் எனக்கு தெரியாது. இப்போது வருத்தமாக உள்ளது,” என்று கூறியுள்ளான்.
அந்த மாணவனுக்கு கவுன்சலிங் கொடுத்து இயல்பாக இருக்க வைத்துள்ளனர் போலீசார்.
நேற்று காலையிலும், நேற்று முன்தினம் காலையிலும் அவனுக்கு ஒரு மணி நேரம் யோகா சொல்லிக்கொடுக்கப்பட்டது. மற்ற மாணவர்களோடு விளையாடவும் அனுமதிக்கப்பட்டான்.
டிவி பார்க்கவும், விளையாடவும் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவன் தொடர்ந்து படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் தெரிந்த 2 ஆசிரியைகள் அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பார்கள். அந்த மாணவனுக்கு புதிய சீருடை தைத்து வழங்கப்பட்டது.
ஒரு குற்றவாளி என அந்த மாணவனுக்கு நினைப்பு வராத அளவுக்கு பார்த்துக் கொள்கின்றனர் அந்த இல்லத்தில். அவனுக்கு என்ன தண்டனை என்பதை சீர்திருத்த நீதிமன்றம்தான் முடிவு செய்யும்.
நன்றி :http://yarlosai.com

இளைய தளபதி விஜய்யின் ஓடாத படத்துக்கு நூறு நாள் போஸ்டர் ?



வேலாயுதம் நூறாவது நாள் போஸ்டரைப் பார்த்த போது ‌ரீல் விடுவதில் சினிமாக்காரர்களை மிஞ்ச ஆளில்லை என்பது தெ‌ளிவாகப் பு‌ரிந்தது. 
நான்காவது வாரத்திலேயே இழுத்து மூடப்பட்ட இந்தப் படம் நூறு நாட்கள் - அதுவும் பதினைந்து தியேட்டர்களில் ஓடியதாக போட்டிருக்கிறார்கள். இதில் அனேகமாக எல்லா திரையரங்குகளிலிருந்தும் இந்தப் படத்தை நூறு நாட்களுக்கு முன்பே தூக்கிவிட்டார்கள். பிறகேன் இந்த வீண் ஜம்பம்?


விஜய்யின் வேலாயுதம் மட்டுமின்றி அமோக வெற்றி என்று சொல்லப்பட்ட காவலனும்கூட பலருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய படம்தான். அதற்கு முந்தைய வில்லு, அழகிய தமிழ்மகன் போன்ற அரை டஜன் ப்ளாப்கள் அனைத்துத் தரப்பின‌ரின் பாக்கெட்டையும் கிழித்தது. இத்தனைக்குப் பிறகும் தயா‌ரிப்பாளர்கள் விஜய்யை பாக்ஸ் ஆஃபிஸ் ஹீரோவாகதான் பில்டப் கொடுத்து வருகிறார்கள். வேலாயுதம் போஸ்ட‌ரில் இது வெட்ட வெளிச்சம்.

ர‌ஜினிக்குப் பிறகு அனைவருக்கும் லாபம் தரக்கூடிய ஹீரோவாக விஜய்யே இருந்தார் என்பது தொலைதூர உண்மை. தோல்வியடைந்த வேலாயுதம், காவலன்கூட பெ‌ரிய வெற்றியை‌ப் பெற்றிருக்க வேண்டியது. அதனை தடுத்தது சந்தேகமில்லாமல் விஜய்யின் சம்பளம். நாற்பது கோடி பட்ஜெட்டில் பதினைந்து பதினெட்டு கோடி விஜய்யின் சம்பளத்துக்கே ச‌ரியாகிவிடுகிறது. இந்த சம்பளத்தைக் குறைத்தால் பட்ஜெட்டும் முப்பதுக்குள் வந்துவிடும். லாபமும் அனைவரையும் சென்றடையும்.

ஹீரோக்களின் தகுதிக்கு மீறிய சம்பளத்தால் தயா‌ரிப்பாளர் அதிக விலைக்கு படத்தை விநியோகிக்க வேண்டியுள்ளது. தியேட்டர்க்காரர்கள் ஒரு லட்சம் வசூலிக்கும் படத்துக்கு ஐந்து லட்சம் அழுகிறார்கள். இதனை ஈடுசெய்ய முதல் ஒருவாரம் டிக்கெட் ராக்கெட் விலைக்கு விற்கும். ரசிகனுக்கு வேறு வழியில்லை, திருட்டு விசிடி தான் ஒரே விமோசனம்.


திரைப்பட வர்த்தகத்தை சீட்டுக்கட்டாக கலைக்கும் ஹீரோக்களின் சம்பளத்தை குறைக்காமல் அவர்களுக்கு தயா‌ரிப்பாளர்கள் வெற்றி நாயகன் பெயி‌ண்ட் அடிக்கிறார்கள். இதனால் அவர்களின் சம்பளம் படத்துக்கு படம் ஏறுகிறது. இவர்களுக்கே இவ்வளவா என்று தொழிலாளிகளும் உழைப்புக்கு மீறிய சம்பளத்தை எதிர்பார்க்கிறார்கள்.

நண்பன் படம் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் தரக்கூடிய படம்தான். அதனை விஜய்யின் சம்பளமும், ஷங்க‌ரின் சம்பளமும் பதம் பார்த்திருக்கிறது. பட்ஜெட்டில் பாதிக்கு மேல் இவர்களின் சம்பளம் என்றால் லாபத்துக்கு எங்கே போவது. நகரங்களில் அதுவும் மல்டிபிளிக்ஸில் லாபம் தந்த இப்படம் தனி திரையரங்குகளில் இரண்டாவது வாரமே காற்று வாங்கியது. சி சென்டர் பற்றி சொல்லத் தேவையில்லை. கன்னியாகும‌ரி மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டி இருக்கும் ஊர் பனச்சமூடு. இங்குள்ள திரையரங்கில் நண்பனை ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கி வெளியிட்டார்கள். முதல் நாள் நூறு ரூபாய் வைத்து ஓட்டியதால் பதினேழாயிரம் ரூபாய் வசூல். அடுத்த நாள் டிக்கட் விலையை குறைத்தும் கலெக்சன் பணால். முப்பதாயிரம் ரூபாய் வரை நஷ்டம் வரும் என புலம்பிக் கொண்டிருக்கிறார் திரையரங்கை லீசக்கு எடுத்து படத்தை ஓட்டியவர். இதே நிலைதான் பல இடங்களில்.


இந்த நிலையில் நண்பனைவிட சுமார் வெற்றியான வேலாயுதத்துக்கு நூறு நாள் பாசாங்கு போஸ்டர் எதற்கு? விஜய் அடுத்தப் படத்தில் இன்னும் சில கோடிகளை அதிகமாக பெறுவதற்கா? விஜய் என்ற மாஸ் ஹீரோவின் நிலையே இப்படி என்றால் யங் சூப்பர் ஸ்டார், புரட்சி தளபதி, சின்ன தளபதி படங்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். மேக்கப்பில் முகத்தை மறைப்பவர்கள் போஸ்ட‌ரில் தோல்வியை மறைக்கப் பார்க்கிறார்கள். தெய்வத்திருமகள் சென்னையில் மட்டும் நன்றாகப் போனது. அதுவும் புறநக‌ரில் புலம்பல்தான். அனேகமாக எல்லோருக்கும் தோல்வியை தந்த இந்தப் படத்திற்கு பதினைந்து நாட்களில் மூன்று வெற்றி விழாக்களை எடுத்தார்கள். எதற்கு இந்த பொழப்பு?

ஓடாத படத்துக்கு நூறு நாள் போஸ்டர் அடிப்பது, வெற்றிவிழா எடுப்பது என்று கற்பனையில் காலம் தள்ளுகிறார்கள் நமது கதாநாயகர்கள். இவர்கள் படங்களின் பட்ஜெட்டையும் படத்தின் கலெக்சனையும் தியேட்டர் வா‌ரியாக வெளியிட்டு இவர்களின் போஸ்டர் பிம்பத்தை கலைத்தால் தானாக திரையுலகம் உருப்படும்.


நன்றி :http://www.gnanamuthu.com