உண்மைசுடும்

Tuesday, 7 February 2012

கர்நாடக சட்டசபையில் இரண்டு அமைச்சர்கள் செல்போனில் ஆபாசபடம் பார்த்தனர்

 
Shame: Two Karnataka BJP ministers caught watching porn in assembly
கர்நாடக சட்டசபையில் இரண்டு அமைச்சர்கள் செல்போனில் ஆபாசபடம் பார்த்ததாக சர்ச்சை  ஆளும் பிஜேபி க்கு நெருக்கடி 



  

சாரு நிவேதிதா-எக்ஸைல் விமரிசனக் கூட்டம்-வீடியோ

Charu+writer
பிரபல எழுத்தாளர்  சாறு நிவேதிதா ரஜினியை பற்றி கடும் விமர்சனம்  செய்ததாக  இளக்கிய வட்டாரங்கள் மத்தியில் பெரும் பரபரப்பு.



அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை


 தன்னால் கற்க முடியாமல்போன கல் வியைத் தமிழகத்தின் தலை முறைகள் கற்பதற்கு வழியமைத்தவர் பெருந் தலைவர் காமராஜர். தான் கற்ற கல் வியையும் அதன் மூலம் பெற்ற அறி வையும் தமிழகத் தின் தலைமுறைகள் நலன் பெற பயன்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா.
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி முதன்முதலில் அந்த மாநிலத்தின் ஆட்சியைக் கைப்பற்றிய து என்றால் அது அண்ணா தலைமையி லான திராவிட முன்னேற்றக் கழகம் தான். 1967ல் ஆட்சிக்கு வந்த அண்ணா, ஓராண்டு பத்து மாதங்கள் மட்டுமே முதலமைச்சராக இருந்தார்.
அந்தக் குறுகிய காலத்திற்குள் இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்றபெயரைச் சூட்டினார். அதற்கு முன் சென்னை மாகாணம் என்றுதான் அழை க்கப்பட்டது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை (தமி ழும் ஆங்கிலமும்) நடைமுறைப்படுத்தினார். சுயமரியா தைத் திரு மணத்திற்கு சட்ட ஏற்பளிப்பு கிடைக்கச் செய்தார். இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை முன்னின்று நடத்தி னார். பேருந்துகளை அரசு டைமையாக் கினார். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய் க்கான பரிசுச்சீட்டுத் திட்டம் ஆகியவையும் அண்ணாவால் கொண்டு வரப்பட்டவையாகும்.
1969 பிப்ரவரி 3ஆம் நாள் அண்ணா மறைந்தபோது அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்குச் சாதனைமிகு எண் ணிக்கையாக அமைந்தது.
அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையார். இவர்களுக்குப் பிள்ளை கள் கிடையாது. அண்ணா தனது அக்காள் மகள் சௌந்தரி யின் பிள்ளை களான பரிமளம், இளங்கோவன், கௌதமன், ராஜேந் திரன் ஆகியோரை வளர்ப்பு மகன்களாக்கிக்கொண்டார்.
தமிழகத்தின் மிகப்பெரும் தலைவராக வும், முதல்வராகவும் இருந்த அண்ணா வுக்குச் சொந்தமான சொத்துகள் என்றால் காஞ்சிபுரத்தில் ஒரு வீடு. ஒரு ஏக்கர் நிலம். சென்னை நுங்கம்பாக்கம் அவென்யூ சாலையில் ஒரு வீடு ஆகியவையாகும். அண்ணா முதல்வரானதும் அரசு அதி காரிகள் அவரது வீட்டில் கொண்டு வந்து வை த்த ஃப்ரிட்ஜ், சோபா செட்டுகள் ஆகிய வற்றை அப்புறப்படுத்தச் சொல்லிவிட் டார். அண்ணா மறைந்தபோது அவர் சேமித்து வைத்த தொகை என்பது நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கிக் கிளையில் 5000 ரூபாயும், மயிலாப்பூர் இந்தியன் வங்கிக் கிளையில் 5000 ரூபாயும்தான்.
தனது குடும்பத்தினருக்கு அரசியலில் பதவி எதையும் அண்ணா தர வில்லை. அவரது குடும்பத்தினர்கள் அரசியலிலோ அரசாங்கத்தி லோ பொறுப்புகளை எதிர்பார்க்கவில் லை. கலைஞர், எம்.ஜி.ஆர். போன்றவர்கள் அண்ணா குடும்பத்தின ருக்குப் பொறுப்புகளைக் கொடுக்க முன் வந்த போது கூட அண்ணாவின் வளர்ப்புப் பிள்ளைகள், அதனை இயக்க த்தில் வேறு யாருக் கேனும் கொடுங்கள் என்று சொன்ன நிகழ்வுகள் உண்டு. அண்ணா வின் துணைவியார் ராணி அம்மையார் சட்டமேலவை உறுப்பினராக எம்.எல்.சி.) கலைஞர் ஆட்சியின்போது இருந்திருக்கிறார். அண்ணாவின் நூல் களை செல்வி. ஜெயலலிதா அரசு நாட்டுடைமை யாக்கி அவரது குடும்பத் தாருக்கு 75 லட்ச ரூபாய் வழங்கியது. அண்ணா நூற்றா ண்டை யொட்டி (2009) அண்ணா வின் வளர்ப்பு மகன்களின் குடும்ப ங்களு க்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கியது கலைஞர் அரசு.
 அண்ணாவின் முதல் மகன் பரி மளம், மருத்துவம் பயின்றவர். டாக் டர் அண்ணா பரிமளம் என்றழை க்கப்பட்ட இவர், அரசு தோல் மருத் துவராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அண்ணா பேரவை என்ற அமைப்பை நிறுவி அண்ணாவின் படைப்புகள் அச்சில் வருவதற்கு பாடுபட்டு, வெற்றியும் கண்டார். அண்ணாவைப் பற்றிய தகவல் களைப் பதிவு செய்வதற்காகவேwww.arignaranna.info என்ற இணையதளத்தை உருவாக்கினார்.தற்போதும் அந்த இணையதளம் மாதமிரு முறை பதிவேற்றம் செய்யப்படுகிறது. அண் ணாவுக்குப் பெருமை சேர்க்கும் பணிகளைச் செய்வதற்காகவே மருத்துவப்பணியைக் கை விட்ட பரிமளம், சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.
பரிமளத்தின் மனைவி சரோஜா பரிமளம். இத் தம்பதியரின் மூத்த மகன் மலர்வண்ணன், மலர் அச்சகம் நடத்தி வருகிறார். அவருடைய துணைவியார் ஜெயஸ்ரீ பாலர் பள்ளி நடத்தி வருகிறார். இவர் களுக்கு அகிலன், ஆதித்யன் என்ற இரு மகன்கள். பள்ளியில் படித்து வருகிறார்கள். டாக்டர் பரிமளம்-சரோஜா தம்பதி யரின் மகள் இளவரசி. இவரது கணவர் முத்துக்குமார் வணிகத்தில் ஈடுபட்டுள் ளார். இவர்க ளுடைய மகள்கள் சுருதி, ப்ரீத்தி ஆகியோர் பள்ளியில் பயின்று வருகிறார்கள். பரி மளம்-சரோஜா தம்பதியரின் இரண்டா வது மகன் அ.ப.சௌமியன் கட்டுமானத் தொழி லில் ஈடுபட்டுள்ளார். இவரது துணைவியா ர் பெயர் சரளா. இத்தம்பதியருக்கு அரவிந்த், அர்ஜூன் என இரு மகன்கள். இவர்கள் பள்ளிப்படிப்பு பயில்கிறார்கள்.
 அண்ணாவின் இரண்டாவது மகன் சி. என்.ஏ.இளங்கோவன். இவர் அண்ணா வின் காஞ்சி பத்திரிகையில் பணியா ற்றியதோடு, அச்சுத் தொழிலையும் மேற் கொண்டவர். முதியோர் இல்லத்தின் ஆலோசகராகவும் இருந்த இவர், கால மாகிவிட்டார். இவரது துணைவியார் விஜயா இளங்கோவன். இவர்களின் மகள் பெயர் கண்மணி. இவரது கணவர் ரமேஷ்பாபு, பொறியாளராக இருக்கி றார். இத்தம்பதியரின் மகள் பிரிய தர்ஷினியும் பொறியாளராக உள்ளார்.
சி.என்.ஏ.கௌதமன். இவர் அண்ணா வளர்த்த மூன்றாவது மகன். நூல் வெளியீடு மற்றும் அச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது துணைவியார் துளசி கௌதமன் காலமாகிவிட்டார். இத்தம்பதி யரின் மகள் சரிதா. இவரது கணவர் சிவக்குமார். இத்தம் பதியருக்கு ப்ரித்வின் என்ற மகன் உள்ளார்.
அண்ணாவின் நான்காவது மகன், பாபு என்கிற சி.என்.ஏ. ராஜேந்திரன். இவர் அரசு தகவல் தொடர்புத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மனைவி பெயர் சாந்தா. இத்தம்பதியரின் மகன் ஆனந்தன் பொறியாளராவார். இவர்களது மகள் ராஜாமணியின் கணவர் வெங்கடேஷும் பொறியாளர். ராஜா மணி-வெங்க டேஷ் தம்பதியரு க்கு ஸ்ரீஹரிஹரன் என்ற மகன் உள்ளார்.
 அரசியலில் ஆர்வம் செலுத்தாமல் அண்ணா குடும் பத்தினர் தங்க ளுக்கு விருப்பமான துறைகளில் பணி யாற்றி வருகின்றனர். அண் ணாவுக்குப் பிறகு அரசிய லுக்கும் ஆட்சிக்கும் வந்தவர்கள் அண்ணா குடும்பத் தினரைப் புறக்கணித்துவிட்டனர் என்றெல்லாம் அரசியல் தளங் களில் விமர்சனம் எழுகின்ற போதும், அண்ணா குடும்பத்தினர் அரசியல் இயக்கங்களிடமிருந்தோ ஆட்சியாளர்களிடமிருந்தோ எதிர் பார்ப்பதில்லை. தங்களுக்குக் கிடைக்கும் வருவாயைக் கொ ண்டு வாழ்வதிலேயே மகிழ்வும் பெருமையும் கொள்கிறார்கள்.


கடவுள் இருக்கிறாரா...? - சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதை!

Rajinikanth
நேற்றைய விழாவில் 'கடவுள் இருக்கிறாரா... இல்லையா...' என்பது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன குட்டிக் கதை, அனைவரையும் கவர்ந்தது.

மேலும் கண்ணதாசன் நாத்திகராயிருந்து ஆத்திகராக மாறியது குறித்து ரஜினி சொன்ன ஒரு காரணம் இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம். அதை எழுத்தாளர்கள் பலரும் வியப்புடன் கேட்டனர். 

அந்தக் கதை:

"ஆண்டவன் இருக்கான்... இல்லேன்னு யுகம் யுகமா பேசிக்கிட்டிருக்காங்க. வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் சண்டை வருது. வசிஷ்டர் வாயால நான் பிரம்ம ரிஷி பட்டம் வாங்கறேன்னு. விஸ்வாமித்திரர் ஒரு அகோரி. கடவுள் நம்பிக்ககை இல்லாதவர். வசிஷ்டர் சாஸ்துவோக்தமா... கடவுள், கைலாசம், வைகுந்தம், வேதம் அப்டி போறவரு. விஸ்வாமித்திரர் கடவுளை நம்பாதவர், பஞ்ச பூதங்களை நம்புறவர். அப்படிப்பட்ட விஸ்வாமித்திரர் வசிஷ்டரிடமிருந்து பிரம்ம ரிஷி பட்டம் வாங்கினார். ஆக அந்த காலத்திலேருந்தே கடவுள் இருக்கானா இல்லையான்னு விவாதம் நடந்துகிட்டுதானிருக்கு.

இப்ப ரீசன்டா, டிடி ரங்கராஜனோட டிஸ்கோர்ஸ் பார்த்தேன். அவர் ஒரு சம்பவம் சொல்றார். அவர் அமெரிக்காவில் ஒரு ட்ரெயின்ல ஒரு சயின்டிஸ்ட். அவருக்கு முன்னால கொஞ்சம் சின்ன வயசு... பைபிள் படிச்சிக்கிட்டிருக்கார். 

உடனே சயின்டிஸ்ட் அந்த இளைஞரிடம், 'என்ன பண்றீங்க'ன்னு கேக்கறார். உடனே பைபிள் படிச்சிக்கிட்டிருக்கேன்னு சொல்றார். 

'இல்ல, என்ன வேலை செய்யறீங்கன்னு' கேக்கறார். 

உடனே 'சயின்டிஸ்ட்' என்கிறார் இளைஞர்... 

'ஓ.. சயின்டிஸ்டா, சரி என்ன படிச்சிக்கிட்டிருக்கே'...

'பைபிள்'.. அப்படீன்னு இளைஞர் சொல்றார்.

உடனே, 'ஏம்பா, அறிவிருக்கா... இது சயின்டிபிக் யுகம், சயின்டிபிக் காலம், எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோம்... நீயும் சயின்டிஸ்ட் என்கிறாய். இன்னும் நீ மதம், கடவுள், பைபிள், கிறைஸ்ட்டுனு படிச்சிக்கிட்டு உட்காந்திருக்கியே, நாமளே இப்படி உட்கார்ந்துட்டா, எப்படி நாடு முன்னேறும். மக்கள் என்ன ஆவறது. கொஞ்சமாவது அறிவை வளத்துக்க வேண்டாமா.. இனிமேலாவது இந்த புக்கு, பைபிளையெல்லாம் தூக்கி போடு, கடவுளு, மண்ணாங்கட்டின்னு' சொல்லிட்டார். 

'சரி'..ன்னு கேட்டுக்கிட்டார்.

'நீ ப்ரீயா இருக்கும்போது என்னை வந்து பார். இந்தா என் கார்டு... பேசலாம்ட-னு சொல்றார் சயின்டிஸ்ட். 

ஸ்டேஷன் வந்ததும், இறங்குறாங்க. கிளம்பும்போது, 'சரி, நான் என்னை உன்கிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டேன். நீ உன்னை என்கிட்ட அறிமுகப்படுத்திக்கவே இல்லையே'ன்னு கேட்டார் சயின்டிஸ்ட்.

உடனே, அந்த இளைஞர் தன் கார்டை கொடுக்கிறாங்க. அதை திருப்பி பார்த்தா, அது தாமஸ் ஆல்வா எடிசன்!

உடனே அந்த சயின்டிஸ்ட், 'சார் மன்னிக்கணும்... நீங்க எனக்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுக்கணும். உங்களைப் பார்க்கணும்னு', கேட்கிறார். 

'சரி வாங்கன்னு' சொல்லி டைம் கொடுத்தார் எடிசன். அந்த டைமுக்கு தாமஸ் ஆல்வா எடிசன் லேபுக்கு இந்த சயின்டிஸ்ட் போறாங்க. 

அந்த லேபுல, ஒரு பெரிய சோலார் சிஸ்டம் மாடல் ஒன்றை தாமஸ் ஆல்வா எடிசன் செஞ்சு வச்சிருக்கார். அதைப் பார்த்துவிட்ட சயின்டிஸ்ட், 'என்ன சார்.. இவ்வளவு அருமையா இருக்கு, இதை யார் செஞ்சாங்க, எத்தனை பேர் செஞ்சாங்க, பார்ட்ஸ் எங்கே கிடைச்சது'.. ன்னு கேட்டார்.

அதற்கு தாமஸ் ஆல்வா எடிசன், 'திடீர்னு ஒரு நாள் கதவைத் திறந்து பார்த்தேன். இந்த மிஷின் இருந்துச்சி'ன்னு சொல்றார்.

'சார், தமாஷ் பண்ணாதீங்க. நான் சீரியஸா கேக்கறேன். இதை எப்படி செஞ்சீங்க'ன்னு கேக்கறார் சயின்டிஸ்ட்.

'இல்லப்பா.. உண்மையிலேயே நான் ஒண்ணும் பண்ணல. திடீர்னு கதவை திறந்து பார்த்தேன். இது இங்கே இருந்தது'...ன்னு எடிசன் சொன்னாங்க. 

'சார்... சீரியஸாவே நான் கேக்கறேன்.. நான் தெரிஞ்சிக்க ஆசைப்படறேன்... சொல்லுங்க'ன்னு கேட்டார் சயின்டிஸ்ட்.

'ஏம்ப்பா... நீங்க சயின்டிஸ்ட்டுங்க.. திடீர்னு ஒரு நாள் காஸ்மோஸ் (பிரபஞ்சவெளி) உருவாச்சின்னு சொல்றீங்க. திடீர்னு காஸ்மோஸ் உருவாகும்போது, இது உருவாகக் கூடாதா? கிரியேஷன்... Where there is a creation there should be a creator... படைப்பு இருந்தா, படைப்பாளி இருந்துதான் ஆகணும். Without the creator there is no creation. So கடவுள் இருக்கார்!', சயின்டிஸ்ட் சைலன்ட் ஆகிட்டார். 

இதை ஏன் சொல்றேன்னா... இது வந்து நடந்ததா இல்லையா என்பது வேறு.. தாமஸ் ஆல்வா எடிசன் அங்கே இருந்தாரா இல்லையான்றது டிஃப்ரன்ட்... சொன்னவர் இதை எங்கேயாவது படிச்சிருப்பார் டெபனிட்டா...

ஆனா, இதை எழுதினவர் என்ன சொல்ல விரும்பினார்... கடவுள் இருக்கார்னு சொல்றதுக்கு, இவர் இந்த சப்ஜெக்டை எடுத்துக்கிட்டார். இதுக்கு இந்த சிச்சுவேஷன் கிரியேட் பண்ணார். இதுக்கு ரெண்டு சயின்டிஸ்டை உருவாக்கினார். தாமஸ் ஆல்வா எடிசனை கொண்டு வந்தார். அவர் வாயால சொல்ல வச்சதாலதான், இது இந்த அளவு ஆழமா இது போகுது. இதான் ரைட்டருடைய வேலை. அந்த எழுத்தோட்டம் இருக்கு பாருங்க... அது ப்யூட்டிபுல். 

இந்த மாதிரி ஒரு ஓட்டத்தை நான் ராமகிருஷ்ணனிடம் பார்த்தேன். புதுசா இருக்கு. கண்டுபிடிக்கிற சிச்சுவேஷன்ஸ் டிஃபரெண்டா இருக்கு. பாத்திரங்கள் வித்தியாசமா இருக்கு. ஒண்ணொன்னும் வித்தியாசமா இருக்கு. எழுத்துங்கறது எவ்வளவு பவர்புல்னு நான் சொல்லி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய நிலை இல்லை!

கம்ப ராமாயணத்தை கொளுத்த முயன்ற கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில் கம்பராமாயணம்... கொளுத்த வேண்டியதுதான் பாக்கி. ஒரு நிமிஷம் யோசிச்ச கண்ணதாசன், சரி... அப்படி என்னதான் இருக்கு இதுல. ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னு, படிக்க முயன்றார். பின்னர் அவர் அந்த புத்தகத்தை வைக்கவே இல்லை. முழுவதுமாக படித்து முடித்த பிறகு, அந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்து வணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறிட்டார்!

படைப்பாளி கஷ்டப்படக் கூடாது!

எழுத்துக்கு, வார்த்தைக்கு அவ்வளவு சக்தி உள்ளது. படைப்புகளுக்கே இவ்வளவு சக்தி என்றால், படைப்பாளிகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கும். நாம் படைப்பாளிகளை நன்றாக வைத்திருந்தால், அவர்கள் பல நல்ல படைப்புகளை தந்து கொண்டே இருப்பார்கள். ராமகிருஷ்ணன் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன். படைப்பாளி கஷ்டப்படக்கூடாது. அவர்களா நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல சூழலில் இருக்க நாமெல்லாரும் துணை நிற்க வேண்டும்," என்றார்.


உண்மை ஆதாரங்கள் : 



My mind is incapable of conceiving such a thing as a soul. I may be in error, and man may have a soul; but I simply do not believe it. [Thomas Edison, Do We Live Again?]


All Bibles are man-made. [Thomas Edison]


So far as religion of the day is concerned, it is a damned fake... Religion is all bunk. [Thomas Edison]


I have never seen the slightest scientific proof of the religious theories of heaven and hell, of future life for individuals, or of a personal God. [Thomas Alva Edison, Columbian Magazine]


I do not believe that any type of religion should ever be introduced into the public schools of the United States. [Thomas Edison]


To those seaching for truth - not the truth of dogma and darkness but the truth brought by reason, search, examination, and inquiry, discipline is required. For faith, as well intentioned as it may be, must be built on facts, not fiction - faith in fiction is a damnable false hope. [Thomas Edison]

ரஜினியை தாக்கும் சாரு நிவேதிதா(காணொளி )

சென்னை: சினிமா நடிகர்களை வைத்து இலக்கியக் கூட்டங்களை நடத்தும் போக்கு அதிகரித்து விட்டதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சாடியுள்ளார் சர்ச்சை எழுத்தாளரான சாரு நிவேதிதா.

ஒரு பெண்ணிடம் சாட்டில் சாரு நிவேதிதா அநாகரீகமாக பேசினார் என்று முன்பு சர்ச்சை வெடித்தது. இதனால் அவரது ரஜினி விமர்சனம் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
Rajinikanth 
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கனடா நாட்டின் இயல் விருது பெற்றிருக்கிறார். இதற்கான பாராட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் எழுத்தாளர்கள், திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்டார். மிகச் சிறப்பான உரையையும் அவர் கொடுத்திருந்தார்.

ஆனால் தற்போது ரஜினியை கடுமையாக சாடியுள்ளார் சாரு நிவேதிதா. அவர் எழுதிய ஒரு புத்தகத்தின் விமர்சனக் கூட்டத்தை சென்னையில் நடத்தினர்.இந்த விழாவில் நிவேதிதா பேசுகையில், ஒரு எழுத்தாளன் அதிக வாசகர்களைக் கொண்டு கூட்டம் நடத்தி விட்டார். அவரை மிஞ்சி நிற்க வேண்டும் என்ற நோக்கில், நூல் வெளியீட்டுக் கூட்டங்களையும், விமர்சனக் கூட்டங்களையும் நடத்தும் போக்கு, தமிழ் இலக்கியவாதிகள் மத்தியில் நிலவுகிறது. அதற்காக, சினிமா நடிகர்களைக் கொண்டு பாராட்டுக் கூட்டங்களை நடத்திக் கொள்கின்றனர்.

தமிழ் இலக்கியங்களைப் படியுங்கள் என, சினிமா நடிகர் சொல்லும் அளவுக்கு, நிலைமையை மோசமாக்கி வருகின்றனர். இது ஆரோக்கியமான போக்கை, தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்தவில்லை.

காமத்தை மையமாகக் கொண்டு நாவல்களை எழுதுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. இன்றைய இளைஞர்கள், காமத்தால் சீரழியும் போது அதை எழுதாமல் இருக்க முடியாது.

ஆங்கிலப் புனை கதைகளுக்கு இருக்கும், வரவேற்பு தமிழ் புனை கதைகளுக்கு இல்லை. இந்த நிலை மாற வேண்டும் என்று சமூகத்திற்குத் தேவையான பல கருத்துக்களைத் தெரிவித்தார் நிவேதிதா.

சாரு நிவேதிதா எப்போதுமே சர்ச்சையாகப் பேசக் கூடியவர், சர்ச்சையான எழுத்துக்களை எழுதுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிய சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.

கருணாநிதி முன்னிலையிலே மோதிக்கொண்ட அழகிரியும்,ஸ்டாலினும்...வீதிக்கு வந்த குடும்ப சண்டை......


அண்ணா ஆரம்பித்த கட்சி இன்று அண்ணன் தம்பி சண்டையால் பிளவுபட்டு நிற்கிறது.....இதுவரை வெளிப்படையாக மோதாத அழகிரியும்,ஸ்டாலினும் திமுக பொதுகுழுவில் மோதி கத்தரிக்காய் முற்றினால் தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும் என்பதை வெளிக்காட்டியுள்ளனர்....


கட்சி தலைவரான கருணாநிதி முன்னிலையிலே அழகிரி ஆதரவாளர்களும் ஸ்டாலின் ஆதரவாளர்களும் ரகளையில் ஈடுபட்டு ஜோராக நடத்தி முடித்து இருக்கின்றனர் திமுக பொதுக்குழுவை....


ஸ்டாலினுக்கு துணை தலைவர் பதவி,கனிமொழிக்கு துணை பொதுசெயலாளர் பதவி என பத்திரிக்கைகள் ஏகத்துக்கும் திமுக தொண்டர்களுக்கு எதிர்பார்ப்பை தூண்டிவிடபரபரப்பான சூழ்நிலையில் திமுக பொதுகுழு கூடியது.....காலையில்அதிமுக அரசுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன....அதற்கு பிறகுதான் நடந்தது கிளைமாக்ஸ் .....

கருணாநிதி இருக்கும்போதே கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என பேச்சு ஓட துவங்கியது பொதுக்குழுவில்....பாவம் தொண்டர்கள் ..அவர்களும் எத்தனை நாட்கள்தான் ஒரே தலைவரையே பார்த்து கொண்டு இருப்பார்கள்?ஸ்டாலினுக்கு ஆதரவக பலரும் பேசிய நிலையில் பேச ஆரம்பித்தார் அழகிரி ஆதரவாளரான வீரபாண்டி ஆறுமுகம்...

கலைஞர் ஆரோக்கியமாக நம்மை எல்லாம் வழிநடத்தி கொண்டு இருக்கும்போது!! அடுத்த தலைவர் என்ற பேச்சு இப்போது நல்லதல்ல....கலைஞர் குடும்பத்தில் இருந்து யார் தலைவராக வந்தாலும் ஏற்றுகொள்வோம் என வீரபாண்டி ஆறுமுகம் பேசிக்கொண்டு இருக்கும்போதே அவருக்கு எதிராகவும்,ஸ்டாலினுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் கிளம்பின....உடனே அழகிரி கோஷ்டியினர் அவருக்கு ஆதரவாக கோஷமிட துவங்கினர்...


மேடையில் இருந்த தலைவர்களாலும், இவர்களை அடக்க முடியவில்லை...இறுதியில் கருணாநிதி பேசித்தான் அடக்க முடிந்தது....

கடைசியில் பேசிய அவர் பொதுகுழு அமைதியாக நடப்பதை விரும்பாத சிலர், வேண்டும் என்றே பிரச்சினைகளை தூண்டி கட்சியை பிளவுபடுத்த சதிசெய்வதாக குற்றம் சாட்டினார்....அண்ணன் தம்பி இரண்டு பேர் இருக்கும்போது வேறு யாரும் கட்சியை உடைக்க தேவை இல்லை என யாராவது அவருக்கு சொல்லுங்கப்பா.....



இந்த பொதுகுழுவில் ஸ்டாலினுக்கு துணை தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த அவரின் ஆதரவாளர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது....பதவி எதுவும் ஸ்டாலினுக்கு கிடைக்காததில் அழகிரி ஆதரவாளர்களுக்கு சந்தோசம்...


அண்ணா ஆரம்பித்த கட்சியில் ஏதோ தங்கள் குடும்ப சொத்தை பிரிப்பதுபோல அரங்கேறியுள்ளது தலைவர் பதவிக்கான சகோதர யுத்தம்....விடுதலைபுலிகளின் தோல்விக்கு சகோதர யுத்தத்தை காரணமாக சொன்ன கருணாநிதி இப்போது கழகத்தை கலகமாக்கி கொண்டிருக்கும் சகோதர யுத்தத்தை பற்றி என்ன சொல்ல போகிறார்?

நன்றி:http://nkshajamydeen.blogspot.com

வறுமையில் வாடும் பாரதியார் குடும்பமும், கண்டு கொள்ளாத தமிழக அரசும்...


காணி நிலம் வேண்டும் என அன்று பாடினார் பாரதியார்.....இன்றோ அவரின் நெருங்கிய உறவினர் தனது வாழ்வாதாரத்துக்காக தமிழக அரசிடம் கோரிக்கை மனு போட்டு காத்திருக்கிறார்....

இவர் அரசுக்கு மனு போட்டு காத்திருப்பது இது முதல் முறையோ,இரண்டாவது முறையோ அல்ல....கிட்டத்தட்ட முப்பத்தியேழு வருடங்களாக காத்திருக்கிறார்....ஆனால் அரசுதான் கண் திறக்கவில்லை....அவர் பெயர் சங்கரராமன் ..வயது 88 ...இவர் ஒரு சுதந்திர போராட்ட வீரரும் கூட....

பாரதியார் எட்டயபுரத்தில் உள்ள தனது தாய்மாமன் தான் வசித்தார்..பாரதியாரின் தாய்மாமன் மகன்தான் இந்த சங்கரராமன்...
.கடந்த 1975ம் ஆண்டு, தி.மு.க., ஆட்சியில், கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பாரதி வாழ்ந்த இந்த வீடு, நினைவிடத்திற்காக அரசால் கையகப்படுத்தப்பட்டது.

முறையான அறிவிப்பின்றி இந்த வீட்டைக் கையகப்படுத்தியதை எதிர்த்து, சாம்பவசிவத்தின் மகன் சங்கரராமன், கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அதற்கு இழப்பீடாக அரசு சார்பில், 5,000 ரூபாய் மட்டும் அப்போது கோர்ட்டில் செலுத்தப்பட்டது. இத்தொகை போதாது என, அவர் அரசிடம் முறையிட்டார். ஆனால், எந்தப் பயனுமில்லை. (நன்றி ..பத்திரிக்கைகள்...)

அட வீட்டை எடுத்த அரசு அதற்க்கு ஈடான தொகையை வழங்கி இருக்க வேண்டாமா?சுதந்திரத்துக்காக ,தமிழுக்காக பாடுபட்ட ஒரு மகாகவியின் குடும்பம் என்று கூட நினைக்கவில்லையா அரசு?

தன்னுடைய ஏழ்மை நிலையை எடுத்துக்கூறி, சுதந்திரப் போராட்ட வீரரின் வழித்தோன்றல் என்ற அடிப்படையில் மாதாமாதம் தனக்கு அரசு ஏதாவது உதவித்தொகை வழங்கவேண்டுமென, கடந்த 37 ஆண்டுகளாக, தமிழக அரசுக்கு அவர் மனு அனுப்பி வருகிறார். தி.மு.க., - அ.தி.மு.க., என மாறிமாறி ஆட்சிக்கு வந்தபோதும், இவரது கோரிக்கை நிறைவேறியபாடில்லை.


வார்த்தைக்கு வார்த்தை தமிழ் என கூறும் கருணாநிதியும் கண்டுகொள்ளவில்லை....அவருக்கு அவர் குடும்பத்திற்கு நிதி சேர்க்கவே நேரம் இல்லை....அவர் எப்படி இவருக்கு நிதி கொடுப்பார்?

ஜெயலலிதாவுக்கு சசிகலா குடும்பம் சேர்த்த சொத்துக்களை பிடுங்கவும், அவர்களை சிறையில் அடைக்கவுமே நேரம் போதவில்லை....பாரதியாரின் உறவினருக்கா உதவ நேரம் இருக்க போகிறது.....?


வாழ்க பாரதியார்.....வளர்க அவரது புகழ்....வேற என்னத்த சொல்ல....!

நன்றி:http://nkshajamydeen.blogspot.com/2012/02/blog-post_07.html