உண்மைசுடும்

Saturday, 11 February 2012

மூன்றுஅமைச்சர்களும் ரசித்து பார்த்த பாலான‌ வீடியோ இதுதான் !! (வீடியோ இணைப்பு)




கர்நாடக சட்டசபையில் இருந்த போது நேற்றுமுன்தினம் அமைச்சரின் செல்போனுக்கு ஆபாச படங்கள் எம்எம்எஸ்சில் அனுப்பப்பட்டுள்ளன.

அதில் உள்ள காட்சிகளை பார்க்க எம்எல்ஏக்கள் உள்பட அனைத்து தரப்பினருமே ஆர்வம் காட்டினர்.

இந்நிலையில், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து 3 அமைச்சர்களும் வேறு வழியின்றி தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.

பதவி பறிபோக காரணமாக இருந்த ஆபாச காட்சிகள் இப்போது மற்றவர்களுக்கு செல்போன் மூலமாகவும் இணையதளம் மூலமாகவும் பரவி வருகின்றன. இதனால் கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

   நன்றி       http://yaavarukkum.blogspot.in

தோனி – திரை விமர்சனம்

பிரகாஷ் ராஜ் ஒரு சாதாரண அரசாங்க ஊழியராக பணியாற்றுகிறார். இவருடைய மகனாக கார்த்திக் தன் தாய் வளர்ப்பின்றி அப்பாவான சுப்ரமணியத்திடம் வளர்கிறான். பல கஷ்டங்களை தாங்கிக் கொண்டு, தன்னுடைய மகனுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்க நினைக்கிறார் சுப்ரமணியம்.ஆனால், இதை பற்றி கவலைப்படாமல் கார்த்திக் படிப்பின் மீது ஈர்ப்பு இல்லாமல் இருக்கிறான். சிறு வயதிலிருந்தே தனக்கு பிடித்தமான கிரிக்கெட் விளையாட்டின் மீது அளவற்ற ஆர்வம் கொள்கிறான்.
இதனால் எப்போதும் படிப்பில் பின் தங்கிய மாணவனாக இருக்கிறார். இதை அறிந்த சுப்ரமணியம் தன்னுடைய மகனின் எதிர்காலத்தை நினைத்து கவலைக்குள்ளாகிறார். இருந்தாலும், மகன் பெரியவனாக வளரும் போது உணர்ந்து கொள்வான் என்று நினைக்கிறார்.


ஒரு சூழ்நிலையில், கார்திக்கின் படிப்பை பற்றி ஆசிரியர் சுப்ரமணியத்திடம் புகார் கூறுகிறார். இதற்கிடையில் சுப்ரமணியத்தின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவராக நளினி (ராதிகா ஆப் தே) அறிமுகமாகிறார். இவர் தன் குழந்தைகளுடன் தனியாக வாழ்கிறார்.


கால கட்டத்திற்கு ஏற்ப சுப்ரமணியம் தன்னுடைய மகனின் கிரிக்கெட் ஆர்வத்தை புரிந்து கொண்டு, மகனை ஊக்கப்படுத்துகிறார். பிறகு மாணவ செல்வங்களுக்கு, எந்த துறையில் ஈடுபாடு உள்ளது என்று அறிந்து அவர்களை அந்த வழியில் பயணிக்க வேண்டும் என்ற கொள்கையோடு, தற்போதைய கல்வி துறையின் குறைபாடுகளை நீக்க போராடுகிறார்.


அவர் தன்னுடைய போராட்டத்தில் ஜெயித்தாரா..? அல்லது கார்த்திக்கின் கிரிக்கெட் கனவு நிறைவேறியதா..? என்பது தான் கிளைமாக்ஸின் கதை.


படத்தின் நிறை – குறைகள் :


பிரகாஷ் ராஜின் நடிப்பு படத்திற்கு பக்க பலமாக உள்ளது. பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத்தின் மகன் ஆகாஷ், தன்னுடைய சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் இசைஞானி இளையராஜாவின் இசை படத்துக்கு வலு சேர்த்திருக்கிறது. பிரகாஷ் ராஜ் இயக்குனராக தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார்.

சில காட்சிகளில் பிரகாஷ் ராஜின் நடிப்பு பேசப்படும் அளவிற்கு இல்லாத்து, படத்திற்கு குறையாக அமைந்தது. கல்வித்துறையின் மீதுள்ள குறைபாடுகள் பற்றி சுப்ரம்ணியம் பாத்திரம் பேசும் வாதங்கள், ஒரு தலையாகவே இருக்கின்றன.


நன்றி :http://www.muruganandam.in

நினைவு கூறுவோம் டார்வின் நாள் பிப்ரவரி 12



வணக்கம் ந்ண்பர்களே,
உயிர்களின் தோற்றம் பற்றிய இப்போதைய அறிவியல் கொள்கையான பரிணாம் கொள்கையின் பிதாமகன் திரு.சார்லஸ் டார்வின் அவர்களின் பிறந்த நாளான பிப்ரவர் 12 ஐ அவருடைய தினமாக உலக முழுவதும்  அறிவியலாளர்கள்,கொள்கை கற்கும் மாணவர்கள்,ஏற்பாளர்கள் பலரும் கொண்டாடுகிறோம்.அவரை பெருமைப் படுத்தும் விதமாக முனைவர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் தயாரித்த சார்லஸ் டார்வினின் உன்னத அறிவு என்ற ஆவணத் திரைப்படம் வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி.

டார்வின் வெளியிட்ட இயற்கைத் தேர்வின் மூலம் உயிர்களின் தோற்றம் என்ற புத்தகம் உலக முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி அதன் தாக்கங்கள் இன்னும் எதிரொலிக்கின்றது.அறிவியல் தேடல் உள்ள ஒவொருவரும் படிக்க வேண்டிய அரிய புத்தகம்.கடந்த 150+ வருடங்களாக டார்வினை எங்கும், எப்போதும் எதற்கும் விமர்சிக்கும் மதவாதிகளின் கூக்குரலே இதற்கு அத்தாட்சி!!!!!!!!!!!!!

இக்காணொளி மூன்று பகுதிகளை உடையது.முதல் பகுதியில் ஒரு பள்ளிக்கு செல்லும் ரிச்சர்ட் டாகின்ஸ் அங்குள்ள மாணவர்களுடன் உரையாடி,அவர்களை சுற்றுலா போல் அழைத்து சென்று படிமங்கள் சேகரிக்க ,ஆய்வு செய்ய கற்று தருகிறார்.அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.இயற்கைத் தேவின் மூலம் டார்வின் பரிணாம் வளர்ச்சி என்னும் கொள்கையை எப்படி வடிவமைத்தார் என்பதையும் விள்க்குகிறார்.

இரண்டாம் பகுதியில் கென்யா செல்லும் டாக்கின்ஸ் அங்கு மனித  பரிணாம  வளர்ச்சி பர்றிய சான்றுகள்,மத குருக்களுடன் உரையாடல்,சமுக டார்வினியம் என்னும் தவறான் பயன்பாட்டு முயற்சி பற்றியும் விளக்குகிறார்.

மூன்றாம்& இறுதி பகுதியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தோன்றிய பரிணாம எதிர்ப்பு பற்றி விளக்குகிறார்.

HAPPY DARWIN DAY!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!











ஊழலுக்கு புரோக்கர் வேலை செய்யும் சோ!


FEB 11: ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக செயல்பட்டு வருபவர் ஆச்சார்யார். இவரை கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞராக கடந்த ஆகஸ்ட் மாதம் பாரதிய ஜனதா கட்சி நியமித்தது. 

இந்த நிலையில் அவர் அந்த பதவியில் இருந்து 08.02.2012 அன்று ராஜினாமா செய்தார். இது குறித்து அவர் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் ’’ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகுமாறு கர்நாடக அரசு என்னை தொடர்ந்து வற்புறுத்தியது.

அதாவது இவருக்கு அரசின் தலைமை வழக்கறிஞ்சர் பதவியை லஞ்சமாக கொடுத்து விட்டு அதற்க்கு பதிலாக ஜெயாவின் சொத்து குவிப்பு வழக்கின் சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யும்படி பாரதிய ஜனதாகட்சி நெருக்கடி கொடுத்துள்ளது. நேர்மையான ஆச்சாரியார் தனக்கு கொடுக்கப்பட்ட அரசின் தலைமை வழக்கறிஞசர் என்ற மணி மகுடம் தேவையில்லை என்று தூக்கி எரிந்து விட்டார்.

முதல்வர் ஜெயாவிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கறிஞசர் என்கிற பதவியே போதும் என்றும் அந்த வழக்கை நேர்மையாக செய்தது முடிப்பேன் என்றும் சூளுரைத்துள்ளார். நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொத்து குவித்த ஜெயா மற்றும் அவரது கூட்டம் இப்போது முழி பிதுங்கி நிற்கிறது. இந்த கேவலமான காரியத்திற்கு ஜெயாவுக்கும் BJPக்கும் இடையில் தூது போன புரோக்கர் யார் தெரியுமா? அவர்தான் நமது திருவாளர் துக்ளக் சோ. இவர் தன்னை மிஸ்டர் கிளீன் என்று சொல்லிக்கொண்டு இதுபோல் புரோக்கர் வேலை செய்து வருகிறார்.