உண்மைசுடும்

Wednesday, 24 October 2012

இன்றைய தேவை வல்லரசா? நல்லரசா?


இன்றைய தேவை வல்லரசா? நல்லரசா?


Oct 08: கடற்படை, விமானபடை இரண்டிலும் பயன்படும் அதி நவீன பிரம்மோஸ் ஏவுகணை இன்று வெற்றிகமாக பரிசோதிக்கப்பட்டது. இது 300 கிலோ எடை கொண்ட எரி பொருளை சுமந்து 290 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றுதாக்கும் வல்லமை கொண்டது.

* இனிமேல் என்ன? நாம வல்லரசு ஆயாச்சி, இனி ரேசன் கடை கியூவில் கால்கடுக்க நிக்க வேண்டாம். அரசே ரேசன் பொருட்களை வீடுகளுக்கு டோர் டெலிவரியில் கொடுத்துவிடும்.
* பெண்கள் குடிதண்ணீர் வரவில்லையே என்று கவலைப்பட வேண்டாம், இனிமேல் குடிநீர் குழாயை திறந்தாள் தண்ணீருக்கு பதிலா பாலும், தேனும் வரும் நீங்கள் அள்ளி பருகலாம்.
* கேஸ் விலை கூடிவிட்டதே என்று இல்லத்தரசிகள் கவலைப்பட வேண்டாம். மூன்று வேலை உணவும் உங்கள் வீடுதேடிவரும், இனி வீடுகளில் நீங்கள் சமைக்க தேவையில்லை.
* மின்சாரம் இல்லாமல் தவிக்க வேண்டாம், இனி மின்வெட்டு என்பதே இருக்காது. மன்மோகன் சிங் வீட்டில் சுவிட்ச் போட்டால், உங்கள் வீடுகளில் லைட் எறியும். 
* இனிமேல் அவசர மருத்துவ உதவிக்கு போன் செய்தால், ஆம்புலன்ஸ் வேனுக்கு பதில் ஹெலிஹாப்ட்டர் வரும், உயர் தரம் வாய்ந்த மருத்துவ மனைகளில் உங்களுக்கு சிகிச்சை கொடுக்கப்படும்.
* காவேரி நதிநீர் கேட்டு நீங்கள் நீதிமன்றங்களை அணுக வேண்டாம், இனிமேல் காவேரி நதிநீர் உங்கள் கொல்லைபுறம் வழியாக பெருக்கெடுத்து ஓட அரசே வழிவகை செய்யும்.
* இனிமேல் நீங்கள் கம்மாகரையிலும், காடுகளிலும் மலம் சலம் கழிக்க ஒதுங்கவேண்டாம், உங்கள் வீடுகள் தோறும் அரசே அதிநவீன கழிப்பறைகளை கட்டி கொடுக்கும்.
* பிள்ளைகளை படிக்க வைக்க இனி நீங்கள் செலவு செய்யவேண்டாம், அதை அரசே செய்யும், எல்லோருக்கும் கல்வி இலவசமாகும், இனியாரும் கல்வியை காசுக்கு விற்க முடியாது என்ற நிலை உருவாகும்.
ஏவுகணை விட்டாச்சி, வல்லரசு ஆயாச்சி! இனிமேல் என்ன? மக்களுக்கு எல்லாம் கிடைக்கும். இந்தியா ஒளிர்கிறது நம்புங்கள்.
சிந்தியுங்கள்: எது மகிழ்ச்சி கொடுக்க கூடியது? பலத்த பாதுகாப்பா? வளமான வாழ்வா?
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை!


மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை!


புதுடெல்லி: இந்தியாவின் பிரபல செல்வந்தரும் கிங்ஃபிஷர் விமான நிறுவனம், கிங்ஃபிஷர் சாராய நிறுவனம் ஆகியவற்றின் உரிமையாளர்  விஜய் மல்லையா வங்கிகளில் இருந்து வங்கிய கடன்தொகை 7,௦௦௦ கோடி ரூபாய்க்கு நாமம் போட்டார்.
இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக விமானிகள் மற்றும் ஊழியர்களுக்கு சரிவர சம்பளம் கொடுக்காததால் பெரும்பான்மையான விமானிகள் பணிக்கு வரவில்லை. இதனால் இந்த மாதம் 1 ம் தேதி முதல் கிங் ஃபிஷர் நிறுவனம் விமானங்களை இயக்கவில்லை.
இந்நிலையில் விமானங்களை இயக்காதது குறித்து விமான போக்குவரத்து ஆணையம் விளக்கம் கோரியிருந்தது. இதற்கு கிங் ஃபிஷர் நிறுவனத்தின் விளக்கம் திருப்தி அளிக்காததால் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் விஜய் மல்லையா கொடுத்த கிட்டத்தட்ட இருபது லட்சம் டாலருக்கான காசோலைகள் அவரது வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாத காரணத்தால் திருப்பி வந்த விவகாரம் தொடர்பில் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் தொடுத்துள்ள வழக்கின் பேரில் விஜய் மல்லையாவுக்கு தென்னிந்திய நீதிமன்றம் ஒன்று பிடிவாரண்டு பிறபித்து இருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
சிந்திக்கவும்: மக்களின் பணம் 7000 கோடி ரூபாயை வங்கிகளில் கடனாக பெற்று அதை கொண்டு சொகுசுவாழ்க்கை நடத்தினார் விஜய் மல்லையா. இவருக்கு அமெரிக்காவில் பெரும் செல்வந்தர்கள் வசிக்கும் பெவர்லி கில்ஸ் (Beverly Hills, California ) சொகுசு பங்களா உள்ளது. மக்களை கொள்ளையடிக்கும் இவர்களை போன்ற பணக்கார்களுக்குத்தான் வங்கிகள் கடன் கொடுக்கும். டாட்டா, பிர்லா போன்ற பணக்காரகளின் வியாபாரங்கள் எல்லாம் அரசு கொடுக்கும் மாநியத்தில்தான் நடக்கின்றன. மானியம் எல்லாம் மக்களின் வரிப்பணமே.