உண்மைசுடும்

Tuesday, 31 January 2012

மாவட்ட செயலாளராக முப்பது லட்சமா?


ம்மாவிற்கும் சசிகலா கூட்டத்திற்கும் நடக்கும் "நீ கொடுத்த நான் கெடுத்தேன்" போராட்டம் நாளொரு வழக்கும் பொழுதொரு கைதுமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.



அதில் ஒரு கட்டமாக சசிகலாவின் உறவினர் ராவணன் மீது கொலை வழக்கு பாய்கிறதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

நீலகிரி மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தான் மீண்டும் மாவட்ட செயலாளராக முப்பது லட்சம் ரூபாய் ராவணனுக்கு கொடுத்ததாகவும், ஆனால் அந்த பதவி வேறொருவருக்கு கொடுக்கப்பட்டதால் பணத்தை திருப்பிக் கேட்டபொழுது ராவணன் அதை கட்சி நிதியாகத்தான் தந்திருக்கிறாய் ஆதலால் திருப்பி தரமுடியாது என்று சொல்லியிருக்கிறார்.

செல்வராஜ் மேலிடத்தில் புகார் கொடுப்பதாக சொன்ன பொழுது, ராவணன் உயிருடன் ஊரு போய் சேர மாட்டாய் என்று மிரட்டிய நிலையில் செல்வராஜ் விபத்தில் உயிரிழந்திருக்கிறார்.

இதுதான் இப்பொழுது ராவணன் மீது பாயும் வழக்கிற்கு முகாந்திரம்.

ஒரு கட்சியின் மாநில செயலாளராக முப்பது லட்சம் செலவு செய்ய முன் வருகிறார்கள் என்றால், அந்த பதவி வந்தவுடன் அவர்கள் மீண்டும் அதை வட்டியும் முதலுமாக சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் தானே செலவழிக்கிறார்கள்.

இது எப்படி சாத்தியம் என்று என்னுடைய நண்பனிடம் கேட்டேன், அவர் மச்சான் ஒரு ஒன்றிய தலைவர்.

அவன் சொன்ன பதிலை கேட்டவுடன் எனக்கு திகைப்பு.

ஒன்றியமே பதவிக்கு பதினைந்து லட்சம் வரை செலவு செய்கிறார்களாம். போட்ட காசை ஒரு வருடத்திலேயே எடுத்து விடுவார்களாம். அந்த ஏரியா ரோடு, மற்ற மராமத்து லொட்டு லொசுக்கு எல்லா கான்ட்ராக்டுகளும் இவர்கள் வசம்தானாம். ஒவ்வொன்றிலும் இருபது விழுக்காடு வரை இவர்களுக்கு பணி செய்யாமலே வருதாம்.

அப்புறம் அந்த திட்டம், இந்த திட்டம் என்று வருவதெல்லாம் “போனஸ்” தான்.

அப்படியென்றால் இந்த சட்டசபை உறுப்பினர், மந்திரி, பாராளுமன்ற உறுப்பினர் இதற்கெல்லாம் எவ்வளவு முதல் போட்டு எவ்வளவு எடுப்பார்கள்? அப்பப்பா!!!!!!!!!!!!!!!

அடப்பாவிகளா? இப்பவே கண்ணை கட்டுதே.

சோஷியல் – ஷாவினிஸ்ட்


என்ன எழவுடா இது? சும்மா சண்டை, குத்து, வெட்டு, கொலை, உரிமை போராட்டம் என்று புலம்பிக் கொண்டு… “மனிஷனா பொறந்தமா நிம்மதியா வாழ்ந்தமா செத்தமான்னு இல்லாம உலகத்தை நாசப்படுத்தி நிம்மதியை கெடுத்து அதற்கு ´புரட்சி´ என்ற பெயரைக் கொடுத்து வன்முறையை தூண்டிக் கொண்டிருக்கிறார்களே.. இவர்களெல்லாம் மனிதர்கள் தானா..?” இப்படியொரு ஆதங்கத்துடன் யாராவது நம்மிடம் பேச ஆரம்பித்தால் என்ன நினைப்போம்?
“அடடா… நல்ல மனுஷன். நாட்டு நடப்பு குறித்து எவ்வளவு அக்கறை” என்பதோடு, நம்மையும் ஆமோதிக்க வைக்கும் கருத்தாக்கமாக அவை மாற்றிவிடும் தானே? அங்கேதான் தந்திரம் ஒளிந்துக் கொண்டிருக்கிறது… சோஷியல் ஷாவினிஸ்டுக்கள் போல் இந்த சோஷியல் – ஷாவினிஸ்டுகள் மார்க்ஸிட்டுகளில் இருந்து பிரிந்த போலி மார்க்ஸிட்டுகள். மற்ற இனத்தினர், பிற நாட்டார் மீதும் நிறவேற்றுமை பார்க்கும் பாஸிசம் குணம் கொண்டது சோஷியல் – ஷாவினிஸ்டு.
தங்கள் தேசியத்தின் பெயரால் அயல் தேசத்தினர் மற்றும் வேற்று இனத்தினர் மீது விரோதப் பிரச்சாரம் செய்வது, அப்பிரச்சாரங்களை தங்கள் ஆதிக்கத்தின் ஊடாக மக்கள் தொடர்புள்ள ஊடகங்கள் வழியாக சிறுகச்சிறுக மக்களிடம் பதிவு செய்வது. குறிப்பிட்ட காலத்திற்கு பின் தாக்குதல் தொடுப்பது. இதன் மூலம் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வதும் தன்னின முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வெறிக்கு ஆதரவாக இருப்பதும் சோஷியல் – ஷாவினிஸ்ட்டு கொள்கைளாகும்.
1940-இல் இட்லரின் நாஜி படைகள் பிரான்ஸ்சுக்குள் நுழைந்தபோது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சோஷியல் – ஷாவினிஸ்டுகள் தங்கள் புத்தியைக் காட்டினர். இட்லரின் ஐந்தாம் படையான பெட்டெயினை உதவி பிரதம மந்திரியாக்கி இனவெறிக்கு ஆதரவாக நின்றனர். தங்கள் சொந்த நாட்டு பிரஜைகளான பிரான்ஸ் கம்யூனிஸ்ட்டுக்கள் படுகொடூரமாக கொன்றனர் சோஷியல் – ஷாவினிஸ்டுகள்.
சோஷியல் – ஷாவினிஸ்ட், ´சோஷியல் – பாஸிச´மாக மாறியது…
வாய் முழுக்க சோஷியலிசம் பேசுவது. செயலோ பாஸிசத்துக்கு உதவியாக இருப்பது. பாட்டாளி மக்களின் வர்க்கப் போராட்டத்திற்கு ஆதரவளித்துக் கொண்டு முதலாளித்துவத்தை கடுமையாக எதிர்ப்பதுமாக ஜோடனை செய்வது. இதன் மூலம் பாட்டாளி மக்களின் உண்மையான போராட்ட அமைப்புகளையும், தொழிலாளர்களையும் திசை திருப்பி பிளவு ஏற்படுத்துவது. இதற்கான கூலியை முதலாளித்துவம் சோஷியல் – ஷாவினிஸ்ட்களுக்கு கொடுப்பது…
´ஐரோப்பிய சோஷியல் – டெமோக்ரடிக் கட்சி´களின் தலைமைகள் இப்போக்கிலேயே செயல்பட்டன. ´தலையிடா கொள்கை´ பேசிய இத்தாலியைச் சேர்ந்த மூசோலினி, பிராங்கோ போன்றவர்கள் இதற்கு சிறந்த உதாரணம். ஐரோப்பாவில் தொற்றிய ´சோஷியல் – டெமோக்ரடிக்´ அரசியல் தொற்று நோய் இன்று உலகம் முழுவதிலும் அக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
கிட்ட தட்ட ஒரு நூற்றாண்டு காலத்தை தொட்டுவிட்ட ´சோஷியல் – ஷாவினிஸ்டு´ உருவாக்கப்பட்டதில் இருந்து இன்றைய காலகட்டம் வரையில் தந்திரமாகவே செயல்படுகிறது.
வன்முறைகளை எதிர்ப்பதாக மக்களிடம் பிரச்சாரம் செய்து அதே வன்முறைகளை மக்கள் மீது நிகழ்த்துவது சோஷியல் ஷாவினிஸ்டு!உதாரணத்திற்கு ஈராக் மற்றும் ஈழத்தின் மீதும் நடத்தப்பட்ட வன்முறைகள்.
அரசியல்வாதிகளால் எப்படியெல்லாம் முட்டாளாக்கப்பட்டிருக்கிறோம் நாம்? இது எப்படி நடந்தது? மக்களிடம் ´சோஷியல் – ஷாவினிஸ்டு´, “வன்முறையால் வன்முறையை அடக்காதே. ஜனநாயக உரிமை உள்ள நாட்டில் உனக்கான உரிமையை அமைதியான முறையில் வென்றெடு. உங்களுக்கான பிரதிநிதிகள் நாங்கள். சட்டங்கள் மூலமாக நமது கோரிக்கைளை வென்றெடுப்போம்…”
இப்படித்தான் மக்களிடம் எழுச்சியை மழுங்கடிக்க ஆரம்பித்தது சோஷியல் ஷாவினிஸ்டு.
சோஷியல் ஷாவினிஸ்டு சித்தாந்தங்களை உருவாக்கியதில் முக்கியமான ´எட்வர்ட் பெர்ன்ஸ்டீன்´ 1899-இல் “சோஷியலிசத்தின் முன் தேவைகள்” என்ற நூலை எழுதிய போது உண்மையான மார்க்ஸியவாதிகளுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தனர்.
மார்க்ஸின் தத்துவங்கள் எல்லாவற்றையும் குத்தி குதறி குழப்பி வைத்திருந்த ஜனநாயக கொள்கைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான வர்க்கப்போராட்டங்கள் குறித்த தத்துவங்கள் எல்லாம் தலைக்கீழாய் போனது.
எட்வர்ட் பெர்ன்ஸ்டீனின் நூல் பிரசுரத்திற்கு பின் மற்ற போலி மார்க்ஸிட்டுக்களுக்கும் உதவியாக இருந்தது. ´எட்வர்ட் பெர்ன்ஸ்டீன்´ காலாவதியான மார்க்ஸியத்தின் பிழைகளை திருத்தி விஸ்தரித்திருப்பதாக கூறிக்கொண்டார்.
“போராடு! அப்பொழுதுதான் ஏதாவது வெற்றி அடைய முடியும்…” என்ற கார்ல் மார்க்சின் வர்க்கப்போராட்டம் குறித்த புகழ்பெற்ற தத்துவத்தையும் தந்திரமாக திசை திருப்பிவிட்டது சோஷியல் ஷாவினிஸ்டு.
“முதலாளித்துவத்திலிருநது சோஷியலிஸத்தை அடைய ஜனநாயம் உறுதி தருகிறது. ஆகவே தொழிலாளர்கள் போராட்டத்தில் உரிமைகளை வெல்வதைத் தவிர்த்து பேச்சுவார்த்தைகளின் மூலமே தங்கள் உரிமைகளை வென்றெடுக்கலாம். மார்க்ஸின் வர்க்கப் போராட்டம் இன்றைய கட்டத்திற்கு தேவையில்லாதது. மார்க்ஸியம் காலாவதியாகிய ஒன்று..”
போராட்ட குணத்தில் இருந்து சோஷலிஸம் திசை திருப்பி விட்டது….
இன்றைய காலத்திலும் இதுவே நடக்கிறது.. “நம்முடைய ஆட்சி, நாமே இந்நாட்டு மன்னர்கள்”
“மக்களால் நடைபெறும் அரசியலே ஜனநாயகம். இங்கே அனைவரும் சமம் உங்களுக்கான உரிமைகள் உங்களிடமே இருக்கிறது. எதற்கு போராட்டம்?” அழகாக சொல்கிறது சோஷியல் ஷாவினிஸ்டு!
“மனிஷனா பொறந்தமா நிம்மதியா வாழ்ந்தமா செத்தமான்னு இல்லாம உலகத்தை நாசப்படுத்தி நிம்மதியை கெடுத்து அதற்கு புரட்சி என்ற பெயரைக் கொடுத்து வன்முறையை தூண்டிக் கொண்டிருக்கிறார்களே.. இவர்களெல்லாம் மனிதர்கள் தானா?
நயவஞ்சகமாக பேசுகிறது மக்களிடம்… “ஜனநாயகம் என்பது போலியானது” கார்ல் மார்க்சில் இருந்து பெரியார் வரை மனித நேய சிந்தனைவாதிகள் எச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள்…
“போராடு! அப்பொழுதுதான் ஏதாவது வெற்றி அடைய முடியும்…” இதுவே நிதர்சனம்.
தமிழச்சி
04.04.2010

பிடல் காஸ்ட்ரோ…


பிடல் காஸ்ட்ரோ…
1926 ஆகஸ்டு 13 – கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ ருஸ் பிறப்பு
1945-50 – அவானா பல்கலைக் கழகத்தில் வழக்கறிஞராகப் பட்டம் பெறுகிறார். கொலம்பியாவில் புரட்சிகர அரசியலில் ஈடுபாடு கொள்கிறார்.
1952 – நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, ஜெனரல் குல்ஜெம்சியோ பத்திஸ்தா தலைமையிலான இராணுவக் கவிழ்ப்புக்குப் பின் தேர்தல் நீக்கம் செய்யப்படுகிறது.
1953 – சூலை 26 காஸ்ட்ரோ தலைமையில் சாந்தியாகோ டி கியூபாவில் மன்காடா பாசறை மீது நடைபெற்ற தாக்குதல் தோல்வி. காஸ்ட்ரோவும் தம்பி ரவுலும் சிறைப்பிடிக்கப்படுகின்றனர். ஈராண்டு கழித்து பொதுமன்னிப்பின் பகுதியாக விடுதலை.
1955 – சூலை 26 இயக்கத்தை கட்டுப்பாடுமிக்க கரந்தடிப் படையாகச் சீரமைக்க வேண்டி மெக்சிகோவுக்கு இடம் பெயர்கிறார்.
1956 திசம்பர் 2 – கிரான்மா என்ற கப்பலில் காஸ்ட்ரோவும் சிறிய புரட்சிக் குழுவினரும் கியூபா செல்கின்றனர். புரட்சிக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டுத் தப்பிப் பிழைத்தவர்களில் ரவுல், எர்னெஸ்டோ சே குவேரோ உள்ளிட்ட 12 பேர் கரந்தடிப் போர் நடத்துவதற்காக சியரா மேஸ்ட்ரா மலைகளுக்குச் செல்கின்றனர்.
1959 – காஸ்ட்ரோ தலைமையில் ஒன்பதாயிரம் வீரர் கொண்ட கரந்தடிப் படை அவானாவிற்குள் நுழைய, பத்திஸ்தா வேறு வழியின்றித் தப்பியோடுகிறார். காஸ்ட்ரோ தலைமை அமைச்சராகிறார்.
1960 – குருச்சேவ் தலைமையிலான சோவியத்து ஒன்றியத்தின் நெருக்கமான கூட்டாளியாகிறார். கியூபாவில் அமெரிக்க நலன்கள் அனைத்தையும் இழப்பீடின்றி நாட்டுடைமையாக்குகிறார். கியூபாவுடன் அரசநிலை உறவுகளை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது.
1061 – அமெரிக்க சி.ஐ.ஏ. பயிற்றுவித்த, 1,300 கியூப அகதிகள் அமெரிக்க ஆதரவுடன் பன்றிகள் விரிகுடாவில் நடத்திய படையெடுப்பு தோல்வி. காஸ்ட்ரோவுக்கு கியூப மக்கள் பேராதரவு.
1962 – கியூப ஏவுகணை நெருக்கடியால் அணுவாயுதப் போரின் விளம்பில் உலகம். துருக்கியிலிருந்து அமெரிக்க ஏவுகணைகள் விலக்கிக் கொள்ளப்படுவதற்குப் பதிலாக கியூபாவிலிருந்து ஏவுகணைகளை அகற்ற சோவியத்து நாடு ஒப்புக் கொண்டதால் நெருக்கடி தீர்வு.
1976 – கியூபப் பொதுமைக் கட்சி புதிய சோசலிச அரசமைப்புக்கு ஒப்புதல் அளிக்கிறது. காஸ்ட்ரோ அதிபராகத் தேர்வு.
1976-81 அங்கோலாவிலும் எத்தியோப்பியாவிலும் சோவியத்து ஆதரவுப் படைகளுக்கு கியூபா இராணுவ ஆதரவு.
1980 – அகதி நெருக்கடி – சுமார் 1,25,000 கியூபர்கள் மேரியல் துறைமுகம் வழியாக அமெரிக்காவுக்கு ஓட்டம்.
1991 – சோவியத்து ஒன்றியத்தின் வீழ்ச்சியினால் கியூபாவில் கடுமையான நிதி முடை.
1993 – கியூபா மீதான முப்பதாண்டு வணிகத் தடையை இறுக்குகிறது அமெரிக்கா. சரிந்து வரும் பொருளியலுக்கு முட்டுக் கொடுக்க காஸ்ட்ரோ அமெரிக்க டாலரை சட்டமுறைச் செல்லுபடியாக்குகிறார். வரம்புக்குட்பட்ட அளவில் தனியார் தொழில் முனைவை அனுமதிக்கிறார்.
1996 – கியூப அகதிகள் ஓட்டிச் சென்ற அமெரிக்க வானூர்திகள் இரண்டை கியூபா சுட்டு வீழ்த்தியபின் அமெரிக்க வணிகத் தடை நிரந்தரமாக்கப்படுகிறது.
2000 – ஆறு வயதான கியூப அகதி எல்லன் கோன்சாலஸ் புளோரிடாவிலிருந்து தாயகம் திரும்பச் செய்வதற்கான 7 மாத காலப் போராட்டத்தில் காஸ்ட்ரோவுக்கு வெற்றி!
2002 – ‘தீய நாடுகளின்’ அச்சில் கியூபாவையும் சேர்க்கிறது அமெரிக்கா.
2006 – சூலை – அவசர அறுவை சிகிச்சைக்குப் பின் காஸ்ட்ரோ இடைக்காலப் பொறுப்பை ரவுலிடம் கையளிக்கிறார்.
2008 – பிப்ரவரி 19. பொதுமைக் கட்சி ஏடு கிரான்மாவில் வெளியிடப்பட்ட கடிதத்தில் காஸ்ட்ரோ தமது பதவி விலகலை அறிவிக்கிறார்.



செ குவாரா ஒரு புரட்சிகரமான வாழ்வு -பகுதி

மனிதனின் சிந்தனைகளும், செயல்களும் அவன் இருக்கும் சமூக, பொருளாதார சூழ்நிலை, ஊடகங்கள் மூலம் உணரும் சூழ்நிலைகள் மற்றும் பிறருடனான தொடர்பு மூலமே பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஆண்டர்சன் எர்னெஸ்ட்டோவின் சிந்தனைகள்,செயல்கள் தூண்டப்படுவதற்கான அவன் இருக்கும் சூழ்நிலைகளையும், புத்தகங்கள், தகவல் தொடர்பு மூலம் அறியும் பிற நாட்டு சூழ்நிலைகளையும்-(குறிப்பாக க்யூபா), அவன் தொடர்புகொள்ளும் மனிதர்களையும்(உருசிய தூதரகத்தைச் சேர்ந்த லெனனோவ், அவன் காதலி - பிற்கால மனைவி, அவனது நண்பர்கள்) விவரிக்கிறார். இந்த விவரங்கள் எர்னெஸ்ட்டோவின் அக்காலத்தைய மனநிலையை நாம் அனுமானிக்க உதவுகிறது. 

சே குவாராவின் சிந்தனைகள் மார்க்ஸிஸம் சார்ந்த பொதுவுடமைக் கொள்கை சார்ந்தவை. சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருப்பவனின் வலிகளை உணர்ந்து, அவனுக்காகப் போராடத் தூண்டவேண்டியவை- வலியில் துடிப்பவன் யாராயிருப்பினும்.ஆனால், சே குவாராவின் சிந்தனைகளில் லத்தீன் அமெரிக்க மக்கள் (ஐரோப்பாவிலிருந்து குடியேறிய , குறிப்பாக ஹிஸ்பானிய மக்களின் வழிவந்தவர்கள்)மீதான வட அமெரிக்க நாட்டுச் அநியாயச் சுரண்டலே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெரு நாட்டில் மட்டுமே பழங்குடி மக்கள் மீதான அக்கிரமப் போக்கு , அதுவும் அமெரிக்க நாட்டு மக்களின் அலட்சியப்போக்கு மட்டுமே அவன் கண்களில் தெரிந்தன. பிற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், மெக்ஸிக்கோவிலும் பழங்குடி மக்களும், கறுப்பர்களும் அடக்குமுறை செய்யப்படுவதை அவன் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவன் மெக்ஸிகோவில் ஒரு நகரமே வெளளத்தில் மூழ்கியபோது எர்னெஸ்ட்டோ தன் அன்னைக்கு எழுதுகிறான் “ பாதி நகரம் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. ஆயின் பாதிக்கப்பட்ட மக்கள் எந்த ஒரு தரத்திலும் இல்லாத பழங்குடி இந்தியர்கள் மட்டுமே” . இக்காமாலைப் பார்வை, அவனது அர்ஜெண்டினிய வளர்ப்பு கொடுத்ததாக முன்னமே ஜோன் லி ஆண்டர்சன் குறிப்பிட்டிருக்கிறார். 

வசிக்கும் சூழ்நிலைகள் மட்டுமே எர்னெஸ்ட்டோவின் சிந்தனைகளைத் தாக்கியதென்றால், மெக்ஸிக்கோவில், கண்முன்னே,அப்பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் அவன் கொதித்திருக்கவேண்டும். மாறாக, கடல் கடந்து க்யூபாவில் அதிபர் பாட்டிஸ்டாவின் சர்வாதிகாரமும், அதனை எதிர்த்தான ஃபிடல் காஸ்ட்ரோவின் இயக்கமும் அவனை ஈர்த்தன. க்யூபா மக்கள் ஸ்பானிய வம்சாவழி மக்கள். 1950களில் க்யூபா, அமெரிக்கா 1901-ல் செய்துகொண்ட ப்ளாட்ட் ஒப்பந்தப்படி , அமெரிக்காவின் இஷ்டப்படி ஆட்டுவிக்கப்படும் கையிலாகாத அரசின் பிடியிலிருந்தது.க்யூபாவின் 40 ஆண்டுகால அரசியல் பின்னணி அதில் வெடிக்கவிருக்கும் புரட்சிக்கு சாதகமாக அமைவதை ஆண்டர்சன் காட்டுகிறார். எப்படி ஒரு மனிதன் தனது சுய வாழ்வில் அனுபவிக்கும் சுரண்டல்களை,அடக்குமுறைகளை, சமூக அநீதிகளின் வெளிப்பாடுகளாகக் காண்பித்து, சமூகப் புரட்சியாக வெடிக்க வைக்கிறான் என்பதற்கு மற்றுமோர் சான்று - ஃபிடல் காஸ்ட்ரோ. இந்தப் பின்னணி அழகாக விளக்கப்பட்டிருக்கிறது. ஃபிடல் காஸ்ட்ரோவைக் குறித்தான மூன்று பக்கங்கள் ,செ குவாராவை அறிவதற்கு அவசியம்.

ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்த குடும்பம் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தது. வேளாண்மையும் வியாபாரமும் செய்துவந்த அவனது தந்தை, தனது கரும்புத் தோட்டத்தில் விளைபவை அனைத்தையும் அடிமட்ட விலையில் யுனைட்டட் ப்ரூட்ஸுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலைக்கு விற்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இந்த வலுக்கட்டாய சுரண்டல்கள், லஞ்சம், அடக்குமுறையில் அத்துமீறும் காவல்படை, அட்டூழியங்களின் ஆணிவேராக, க்யூபாவின் அமெரிக்கக் கைப்பாவை அரசு, அதன் அரசியல் பின்னணி முதலியன ஃபிடலை அமெரிக்கா மற்றும் க்யூபாவின் அரசு மீது வெறுப்பு கொள்ள வைத்திருந்தது. க்யூபாவின் கலாச்சாரத்தையும், மக்களின் மென் உணர்வுகளையும் அவமதித்த அமெரிக்க கடற்படையினரின் செயல்கள், அமெரிக்கர்கள் க்யூபாவை விபச்சார விடுதிகளால் நிரப்பியது போன்றவை ,ஃபிடல் போன்ற இளைஞர்களை புரட்சிப்பாதையில் போகத் தூண்டியது. இந்தப் பின்னணி இன்றும் பல நாடுகளில் அமெரிக்காவால் தொடரப்படுவது கண்கூடு.

ஃபிடல் மற்றும் அவனது சகோதரன் ரவுல் காஸ்ட்ரோவை மெக்ஸிக்கோவில் சந்திக்கும் எர்னெஸ்ட்டோ அவர்களது கொள்கைகளாலும், பேச்சுக்களாலும் ஈர்க்கப்படுகிறான். க்யூபாவில் போர் புரிவது என்பதைத் தீர்மானிக்கிறான், அவன் காதலி,( தற்போது மனைவி) கர்ப்பமுற்றிருப்பதை அறிந்தபின்னும். ஏர்னெஸ்ட்டோவின் அகச்சிந்தனைகளுக்கும் அவனது வெளிப்பரிமாற்றங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை மெல்லிதாகக் கோடிட்டுக்காட்டுகிறார் ஆண்டர்சன். கர்ப்பமான மனைவியை அவள் கெஞ்சக் கெஞ்சப் பிடிவாதமாக பல மயன் இடிபாடுகளின் படிகளில் ஏறிவருமாறு வற்புறுத்தும் ஏர்னெஸ்ட்டோ, மிகவும் ஆபத்தான , தூக்கித் தூக்கிப்போடும் படகுச் சவாரியில் மனைவியைக் கொண்டுசெல்லும் ஏர்னெஸ்ட்டோ, படகில் தடுமாறும் மனிதர்களை எள்ளி நகையாடி, புகைப்படம் எடுக்கும் ஏர்னெஸ்ட்டோ என இரக்கம், அன்பு , நாகரீகம் போன்ற மென்னுணர்வு மனப்பாங்கு அறவே இவனுக்கு இல்லையோ? என்று ஐயப்படும் அளவுக்கு, ஆண்டர்ஸன் எர்னெஸ்ட்டோவை சித்தரிக்கிறார். மார்க்ஸிச பொதுவுடமைக் கொள்கைகளில் ஊறிய அவனது போராளி மனது, தனி மனித நேயம் இரக்கம், பாசம் போன்ற மென் உணர்வுகள் மரித்த , வறண்ட பாலைவனமாக இருக்கிறது என நாம் கருதும்வேளையில் , பிறந்து பத்து நாளான தனது குழந்தை குறித்து ஒரு கடிதத்தைத் தன் அன்னைக்கு எழுதுகிறான். “ பிற சிசுக்களைப் போலவே இவளும் தோல் உரிந்து அசிங்கமாக இருக்கிறாள். பிற குழந்தைகளுக்கும் இவளுக்க்கும் ஒரேயொரு வேறுபாடு. இவளது தந்தையின் பெயர் எர்னெஸ்ட்டோ குவாரா” 
வறண்ட பாலையிலும் பாசம் சிறிதாகக் கசிவதை உணரமுடிகிறது.