உண்மைசுடும்

Sunday, 19 February 2012

ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்!


FEB 12: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருடந்தோரும்"ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்" என்ற தலைப்பில் தேசிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்நிகழ்ச்சியில் ஆரோக்கியமான வாழ்விற்கு உடல்பயிற்சி இன்றியமையாதது  என்பதை  மக்களிடம் எடுத்து சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தி இலவசமாக யோகா,உடல்பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கிறார்கள். 

இதன் தமிழகத்தின்  துவக்க நிகழ்ச்சி கோவையில் நடை பெற்றது. இதில் கோவை மாநகர மேயர் செ. மா. வேலுச்சாமி அவர்களும், கோவை அரசு மருத்துவமனை சிவப்பிரகாசம்அவர்களும் பங்கு பெற்றனர். 


இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் ராஜா உசேன் வரவேற்புரை வழகினார் சிறப்பு விருதினரக மாநில தலைவர் இஸ்மாயில் அவர்கள் கலந்து கொண்டார். பெரும் திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.  இதில் யோகா வகுப்புகள் மற்றும் உடல்பயிற்சிகள் ஆகியவை பொதுமக்களுக்கு இலவசமாக கற்று கொடுக்கப்பட்டது.

சிந்திக்கவும்: யோகாசனம் என்கிற மக்கள் சொத்தை வைத்து ஒரு கூட்டம் காசு பார்க்கும் இந்த தருணத்தில் இதுபோல் இதை மக்களுக்கு இலவசமாக சொல்லிக்கொடுப்பது ஒரு சிறப்பான விடயம்தான். கார்பரேட் சாமியார்கள் யோகாசனத்தை வைத்து பலகோடிகள் சம்பாதித்துவெளிநாடுகளில் சொந்தமாக தீவும், ஹெலிஹாப்ட்டரும் வாங்கி இருக்கும் போது இந்த கலையை மக்களுக்கு இலவசமாக கற்று கொடுக்கும் இவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

கூடங்குளம் ஒரு சிங்கள அணு குண்டு!

FEB 19: ஈழத்தமிழர்களையும், இந்திய தமிழர்களையும் அழிக்கவல்ல அணு குண்டே கூடங்குளம் அணு மின்நிலயம். சிங்கள பேரினவாதமும், இந்திய ஹிந்தி அரசும் சேர்ந்து தமிழர்களை ஒடுக்கப்பட்ட  ஒரு இனமாக ஆக்கி எந்த உரிமையும் இல்லாத அடிமைகளாக ஆட்சி செய்து வருகின்றன. 

இந்த இரண்டு பேரினவாத அரக்கர்களின் இரத்த சாட்சியே ஈழத்து இன அழிப்பும், தமிழக மீனவர் படுகொலையும், முல்லை பெரியாரும், கூடங்குளம் அணு மின்னலயமும்ஆகும். ஏன் தமிழகத்து மின்சாரத்தை கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும், ஆந்திராவுக்கும் வாரி கொடுத்து விட்டு தமிழகத்தை இருளில் மூழ்கடிக்க வேண்டும்.

சுற்றுச்சூழலில் அக்கறையுள்ள பெங்களூரை சேர்ந்த அகமது என்பவர், சூரிய சக்தியால் இயங்கும் சிறு காரில், தென் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் தெரிவிக்கும் போது சூரிய சக்தி மூலம் எடுக்கப்படும் ஆற்றலை கொண்டு கார் மற்றும் மின் விளக்குகளை பயன்படுத்த முடியும். அதனால் இயற்க்கைக்கு பேராபத்தை உண்டாக்கும் அழிவு சக்திகள் தேவையில்லை என்று தெரிவித்தார் என்பது இதில் கவனிக்கத்தக்கது.

கூடங்குளம் அணு மின் நிலயத்திற்கு ஒரு கேடு உண்டானால் அதனால் பாதிக்கப்படப்போவது நாம் மட்டும் இல்லை ஈழத்து சொந்தங்கலுமே. இந்திய மற்றும் இலங்கை அரசு பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்ட ஒரு இனத்தை மீண்டும் ஒரு அழிவுக்குள் தள்ளும் வேலையே இது. அது மட்டும் அல்லாமல்  கடலை நம்பி வாழும் இலட்சக்கணக்கான் தமிழக மீனவர்களின் வாழ்வாதரங்களை அழிக்கும் ஒரு தீய சக்தியே கூடங்குளம் அணு மின்நிலையம். 

 கூடங்குளம் அணு மின்நிலையத்தை எதிர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை என்பதை மறக்க வேண்டாம். தமிழர்களே ஒன்று பட்டு ஒரே குரலாக கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்ப்போம்.