உண்மைசுடும்

Sunday, 12 February 2012

கொலவெறி காமவெறி கதாநாயகர்களுக்கு மன்னர் ஜவஹர் கண்டனம்!?


சென்னையில் நேற்று பள்ளி ஆசிரியை ஒன்பதாம் வகுப்பு மாணவனால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் நகரையே உலுக்கிவிட்டது. சினிமா, டி.வி.க்களில் வரும் வன்முறை காட்சிகளே இந்த கொலைக்கு காரணம் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர் வருத்தம் தெரிவித்தார்.

அவர் கூறும்போது, வகுப்பறையில் ஆசிரியை கொலை செய்யப்படும் சம்பவத்தை தமிழ்நாட்டில் கேள்விப்படுவது இதுதான் முதல்முறை. சினிமா, டி.வி.க்களில் வன்முறை தூண்டும் காட்சிகளால் மாணவன் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம்.

மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வி அவசியம் என்றார். புரசைவாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ், சினிமா பாடல்கள்மேல் சாடினார்.

'நல்லபேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே', 'திருடாதே பாப்பா திருடாதே', 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி', 'வாழ நினைத்தால் வாழலாம்' என பழைய பாடல்கள் குழந்தைகளை ஒழுக்க சீலர்களாக வளர்க்க பயன்பட்டன.

ஆனால் இப்போது 'ஒய்திஸ் கொலைவெறிடி' 'உதடா அவளா வெட்டுடா அவள', 'எவன்டி உன்ன பெத்தான் கையில கிடைச்சா செத்தான்', 'லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே' என்றெல்லாம் பாடல்கள் வருகின்றன. இவை மாணவர்கள், இளைஞர்கள் மனதில் வன்முறை தனமான வக்கிரங்களை பதிய வைக்கின்றன. ஆசிரியையை மாணவன் கொன்றத்திற்கு இது போன்ற பாடல்கள்தான் காரணம் என்றார்.

மயிலாப்பூரைச் சேர்ந்த கவுதம் கூறும்போது, 'சினிமா பாடல்கள் இப்போதைய தலைமுறையை ஒழுக்கமில்லாதவர்களாக மாற்றி வருகின்றன. சினிமாவில் இருப்பவர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்' என்றார்.

நன்றி  : http://dinaex.blogspot.com

நாளுக்கு நாள் வெளுக்கும் மோடியின் காவி சாயம்!? சஞ்சீவ் பட்?


ஆமதாபாத், பிப். 12: குஜராத் கலவரம் தொடர்பான ஆவணங்களை அந்த மாநில அரசும், சிறப்பு விசாரணைக்குழுவும் சேர்ந்து அழித்துவிட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் குற்றம்சாட்டியுள்ளார்.

குஜராத் கலவரம் தொடர்பாக விசாரிக்கும் நானாவதி கமிஷனுக்கு சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் பட் மேலும் கூறியிருப்பது: 2002-ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப்பின் குஜராத்தில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான முக்கிய ஆதாரங்களை மோடி தலைமையிலான மாநில அரசும், கலவரத்தை விசாரிக்க மாநில அரசு அமைத்த சிறப்பு விசாரணைக்குழுவும் அழித்துவிட்டன.

அதிகாரத்தில் உள்ள நபர்கள், சட்டத்துக்குமுன் விசாரணைக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக மிகவும் மோசமான இந்த காரியத்தை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக மாநில நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி, உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று சஞ்சீவ் பட் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக குஜராத்தில் கலவரம் நடந்தபோது, "ஹிந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிக்காட்டுவதைத் தடுக்க வேண்டாம்' என்று மோடி கூறியதாக, நானாவதி கமிஷன் முன்பு சஞ்சீவ் பட் சாட்சியம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி  : http://dinaex.blogspot.com

ராமனை எலக்க்ஷன் ஏஜன்டாக பயன்படுத்தும் ப ஜ க ?


அயோத்தி: ஜாதீய காரணிகள் முடிவை தீர்மானிக்கும் உ.பி மாநில தேர்தலில் வகுப்புவாத பிரிவினை மூலமாக வாக்குகளை கவர பா.ஜ.க நடத்திவரும் முயற்சிகள் தோல்வியை தழுவும் என கருதப்படுகிறது.

அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் புராண ராமனின் கோயிலை கட்டுவது, சிறுபான்மை இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பா.ஜ.கவின் பிரச்சாரம் போதுமான சலனத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை.

உமாபாரதியை கட்சியில் சேர்த்ததும், ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கிய பகுஜன் சமாஜ் தலைவர்களை கட்சியில் இணைத்ததும் முன்பு ஒருபோதும் இல்லாத அளவுக்கு பா.ஜ.கவில் உட்கட்சி பூசலை உருவாக்கியுள்ளது.

80 எம்.பிக்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் உ.பியில் பா.ஜ.கவின் நிலை பரிதாபமானால், 2014 ஆட்சி கனவு அதோகதிதான்! இதனை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தலைமை உ.பி.யில் முகாமிட்டுள்ளது.

முன்னாள் மத்தியபிரதேச முதல்வர் உமாபாரதியை உ.பி அரசியல் களத்தில் இறக்கியதன் நோக்கம் வகுப்புவாத வெறியை தூண்டுவதற்காகும்.முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொண்டு பெரும்பான்மை உணர்ச்சியை தூண்டுவதும் பா.ஜ.கவின் திட்டமாகும். மேலும் அயோத்தியில் ராமனுக்கு கோயில் போன்ற ஹிந்துத்துவா அஜண்டாக்களையும் தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க வெளியிட்டது. ஆனால், இவையெல்லாம் அயோத்தியில் கூட பா.ஜ.கவுக்கு போதிய ஆதரவை பெற்றுத் தரவில்லை.

அயோத்தியின் டீ கடை பெஞ்சுகளில் கூட பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை குறித்துதான் மக்கள் விவாதிக்கின்றனர். அயோத்தி அடங்கிய ஃபைஸாபாத் மக்களவை தொகுதியில் கடந்தமுறை காங்கிரஸ் கட்சி எதிர்பாராத வெற்றியை பெற்றது. ஹிந்துத்துவா உணர்வை தூண்டிய பிறகும், அடித்தளமே ஆட்டம் கண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஃபைஸாபாத் மக்களவை தொகுதியில் மக்கள் அக்கட்சிக்கு அளித்தது பா.ஜ.கவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அயோத்தியா சட்டப்பேரவை தொகுதியில் ஐந்து தடவை வெற்றிபெற்ற லல்லுசிங் என்பவர்தாம் இம்முறையும் போட்டியிடுகிறார். ஆனால், கடுமையான போட்டி நிலவும் அயோத்தியில் லல்லுசிங் வெற்றி கேள்விகுறிதான். பல சன்னியாசிகளும் பா.ஜ.கவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ’தேர்தல் வரும் வேளையில் மட்டும் பா.ஜ.க ராமர் கோயிலை கூறி நாடகமாடும். ராமனை வெறும் எலக்‌ஷன் ஏஜண்டாக தரம் தாழ்த்திவிட்டது பா.ஜ.க’- என கொதிக்கிறார் ஆல் இந்தியா அகாடா பரிஷத் சேர்மன் மஹந்த் க்யான்தாஸ்.

கல்யாண் சிங்கைப் போல பிற்பட்ட மக்களின் பல்ஸை அறியும் தலைவர்கள் பா.ஜ.கவில் இல்லாதது அக்கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாகும் என அயோத்தி மற்றும் அதன் சுற்று வட்டார பா.ஜ.க தொண்டர்கள் கருதுகின்றனர். கடந்த முறை 51 தொகுதிகள் மட்டுமே பா.ஜ.கவுக்கு கிடைத்தது. இம்முறை காங்கிரஸ் கட்சியை விட குறைவான இடங்களே கிடைக்கும் என்ற கவலை கட்சியை வாட்டுகிறது.

நன்றி  : http://dinaex.blogspot.com