உண்மைசுடும்

Monday, 6 February 2012

நடிகர் கமல்ஹாசன் திடீர் முடிவு.பின்னனி என்ன?முழு தகவல்.

சுயநலமே மேலோங்கிய இருள் மயமான மானுடவாழ்வில் அவ்வபோது ஒரு சில மனிதாபிமான வெளிச்சமான நம்பிக்கை ஒளிகீற்றுக்களாக வெளிப்படும் சில செயல்பாடுகளால் உலகில் தர்மம்,இரக்கம்,அன்பு,மனிதாபிமானம் ஆகியன இன்னும் பட்டுப்போகவில்லை என நாம் அடையும் சந்தோசத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் எச்ஐவி.யால்  பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ நடிகர் கமல்ஹாசன் புதிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார். 
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தத கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.
 
அப்போது அவர் பேசுகையில், "எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தகுந்த சரியான கல்வி, ஊட்டச் சத்தான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை. இம்மாதிரி குழந்தைகளுக்கு பொதுமக்கள் தரும் ஆதரவு அவர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தினை உருவாக்கும். ஒவ்வொரு குழந்தைக்கும் கனவுகள் உண்டு. அவர்களின் கனவுகளை நினைவாக்க நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். எச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கும் வாழ அனைத்து உரிமைகளும் உள்ளன. அந்த உரிமைகளை பாதுகாப்பது நமது கடமை என்பதை மறந்துவிடக் கூடாது.

இதுபோன்ற குழந்தைகளுக்காக உதவிகளை செய்ய வேண்டும் என்பதற்காக நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். 25 வருடமாக நான் செய்யாத ஒரு விஷயத்தை செய்யப்போகிறேன். நான் வேண்டாம் என்று ஒதுக்கி வந்த ஒன்று. விளம்பரப் படங்களில் நடிப்பதை இந்த குழந்தைகளுக்காக செய்யப்போகிறேன். நான் ஒரு பொருளை விற்பனை செய்ய வியாபாரி இல்லை. நான் நடிகன் அதனால் என்னுடைய நடிப்பு வேலையை செய்துவந்தேன். இப்போது எச்.ஐ.வி. குழந்தைகளின் நலனுக்காக விளம்பரப் படங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறேன். ஆனால் அதில் வரும் வருமானத்தை, நான் எனக்காக பயன்படுத்தப் போவதில்லை. அது என்னுடையது அல்ல. நம்முடையது. அந்தப் பணத்தை எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொடுப்பதாக முடிவு செய்துள்ளேன், என்றார். நான் தனி மனிதனாக கொடுக்கும் பணத்தைப் போல, இரண்டு மடங்கு பணத்தை இந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கு அரசாங்கம் கொடுக்குமேயானால் அது நன்றாக இருக்கும். அரசாங்கத்துக்கு இது ஒரு வேண்டுகோள்தான். கோரிக்கை அல்ல, 

சமுதாயத்திற்கு நல்லது நடக்குமேயானால் அடுத்தவர்களுக்கு உதவி கிடைக்குமெனில் தனது கொள்கைகளையேவிட்டு விலகுவதில் தவறு இல்லை எனும் ஓர் அருமையான உன்னதமான முடிவெடுத்த கமலுக்கு வாழ்த்துக்கள்.கமல் சார் உங்கள் பொது தொண்டு தொடர வாழ்த்துக்கள். உண்மையிலே நீங்கள் உலகம் போற்றும் உலக நாயகன் நீங்கள் தான். நிஜம் வேறு , நிழல் வேறு அல்ல என இரண்டும் ஒன்று என வாழ்பவர் நீங்கள்..
 உங்கள் சாதனைகள்தொடரவும் தமிழர்கள் சார்பாக நன்றி,வாழ்த்துக்கள்.மற்ற
 சினிமா பிரபலங்களும் இது பற்றி சிந்திப்பார்களா?
நன்றி: http://nagainthu.blogspot.com/2010/11/blog-post_29.html

நன்றி கொன்றவனாகவே விரும்புகிறேன் தமிழருவி மணியன் .



அன்பிற்கும் மதிப்பிற்கும் என்றும் உரிய ஐயா கலைஞர் அவர்களுக்கு...
வணங்கி மகிழ்கிறேன். உங்களுக்கு நான் வரைந்தஇரண்டு கடிதங்களை முரசொலிஇதழின் பக்கத்தில் வெளியிட்டுநன்றி’ மறந்த என்னை நயத்தகு நாகரிகத்துடன் வாழ்த்திஇருக்கிறீர்கள்.

நான் கேட்காமலே எனக்கு மாநிலத் திட்டக் குழு உறுப்பினர் பதவியும்பாரதி விருதும் மனமுவந்து அளித்து என்னைத் தாங்கள் பெருமைப்படுத்தியதையும்வீடற்ற எனக்கு வீட்டு வசதி வாரியத்தில் குறைந்த வாடகையில் ஒரு வீடு கொடுத்து என் பொருளாதாரச் சுமையைக் குறைத்ததையும் என் இறுதிநாள் வரை நன்றியுடன் நினைத்து தங்கள் அன்பைப் போற்றுவேன்’ என்று உங்களுக்குத் தீட்டிய கடிதத்தில் நான் குறிப்பிட்டு இருந்தது முற்றிலும் உண்மை.

ஆனால்ஒருவர் செய்த உதவியை நெஞ்சில் நிறுத்திஅவர் பின்னாளில் செய்து முடித்த தவறுகள் அனைத்துக்கும் உடந்தையாக இருப்பது தான் நன்றியின் நல் அடையாளம் என்று நீங்கள் நினைத்தால்அந்த நன்றியை நான் செலுத்தத் தவறியது உண்மைதான். அந்த வகையில் நன்றி கொன்றவனாகவேநீடிக்க விரும்புகிறேன்.

ஆயிரக்கணக்கில் அரிய புத்தகங்களை கவனத்துடன் சேர்த்து வைத்திருக்கும் நான்அவற்றை ஒழுங்காகப் பராமரித்துப் பாதுகாக்கவும் சாகும் வரை நிலையாக ஓர் இடத்தில் தங்கி வாழவும் வீட்டு வசதி வாரியத்தில் குறைந்த வாடகையில் வீடு ஒதுக்கித் தரும்படி உங்களிடம் விண்ணப்பித்தது உண்மை. நீங்களும் அன்புடன் என் கோரிக்கையை நிறைவேற்றியதும் உண்மை.

ஆனால்ஈழ மக்களின் ஆழ்ந்த நம்பிக்கைக்கு எதிராகவும்இந்திய அரசின் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் நீங்கள் நாற்காலி மனிதராய் மெளனத் தவம் இருந்தபோதுகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும்திட்டக் குழு உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகிஉங்களையும்,காங்கிரஸையும் விமர்சிக்க நான் எழுதுகோல் ஏந்தியதும்வாடகைக்கு வழங்கிய வீட்டில் இருந்து என்னை வெளியேற்றி வீதியில் நிறுத்த முனைந்தது உங்களது பெருந்தன்மை!

முல்லை-பெரியாறுகாவிரி நீர்ப் பிரச்னையில்கூட இவ்வளவு தீவிரத்தை நீங்கள் காட்டியது இல்லை.

ஒரு சாதாரண வாடகைதாரரை வெளியேற்றும் வழக்கில் ஆதி முதல் அந்தம் வரை மாநில அரசின் அடிஷனல் அட்வகேட் ஜெனரலை நிறுத்தி வாதாடச் செய்து பழிவாங்கும் படலத்தில் புதிய வரலாறு படைத்தீர்கள்.

நீதியரசர் மாண்புமிகு சந்துரு அவர்கள் நியாயத்தின் நிறம் அறிந்து எனக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடும் செய்தீர்கள்.

மதுரை வீதியில் பட்டப்பகலில் சொந்தக் கட்சிக்காரரான தா.கிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மேல்முறையீடு செய்யாத நீங்கள்,வீடற்ற ஓர் எளியவனை வீதியில் நிறுத்த இறுதி வரை களம் இறங்கினீர்கள்.

ஜனநாயகத்தின் உயிர்நாடியான கருத்து சுதந்திரத்துக்கு நீங்கள் நிர்ணயித்த வரையறை நன்றிக்குரியதுதான்.

இன்றும் அந்த வழக்கு நீதிமன்றத்தில்தான் இருக்கிறது. உங்கள் ஆட்சியின் தவறுகளுக்கு எதிராகஎழுத்திலும் பேச்சிலும் கருத்துப்போர் நிகழ்த்திய நான் அந்த வீட்டைக் காப்பாற்றிக்கொள்ள மனுப்போட்டு நிற்கவில்லை. அது என் வாழ்க்கை முறையும் இல்லை. 

 நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி நான் யாரையும் திட்டுபவன்’ இல்லை. தமிழாய்ந்தஉங்களுக்கு வசைபாடுபவனுக்கும்தவறுகளைத் தறுக்கண் ஆண்மையுடன்விமர்சிப்பவனுக்கும் இடையிலுள்ள வேற்றுமை விளங்காமற் போனது எனக்குவியப்பைத் தருகிறது.

கலைஞரே... இப்போது ஓய்வாக அமர்ந்து சிந்திப்பதற்கு உங்களுக்குக் காலத்தின் கருணையால் நிறைய நேரம் வாய்த்திருக்கிறது. பதவி நாற்காலியின் மீதிருந்த பற்றினால் ஈழப் பிரச்னையில் நீங்கள் நடந்துகொண்ட விதம் நியாயமா என்று யோசியுங்கள். அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டு உங்களைச் சார்ந்தவர்கள் கழகத்தின் மீது என்றும் நீங்காத களங்கச் சேற்றைப் பூசியது சரிதானா என்று சிந்தியுங்கள்.

உங்கள் குடும்ப அரசியலால் நேற்று ஆட்சியும் இன்று கட்சியும் நிலைகுலைந்தது எந்த வகையில் ஏற்கத்தக்கது என்று ஆய்ந்து பாருங்கள்.

உங்கள் ஆற்றலில் அணுவளவும் இல்லாதகழகத்தை வளர்க்க உங்களைப் போல் கடும் உழைப்பைத் தராதவாசக ஞானமும் சமுதாயப் பொறுப்பு உணர்வும் சிறிதும் இல்லாத மிகச்சாதாரண மனிதர்கள் உங்களுக்குத் துதிபாடி,உங்கள் கொற்றக் குடை நிழலில் இடம் பெற்ற ஒரே காரணத்தால்கடந்த ஐந்து ஆண்டுகளில் அடித்த கொள்கைகளின் அளவைக் கணக்கிட்டுப் பாருங்கள். உங்கள் வீழ்ச்சிக்கான காரணங்கள் அப்போது புரியும்.

தேவைக்கு மேல் பொருளும்திறமைக்கு மேல் புகழும் கிடைத்து விட்டால்,பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமானதாகத்தான் தோன்றும் கூட்டம் கூட்டுவதிலும்கூவி அழுவதிலுமே களத்தின் விடுதலை அடங்கிக்கிடப்பதாக நீங்கள் முடிவு கட்டிவிட்டீர்கள். நீங்கள் நூலேணி கட்டி ஆகாயம் போக முயன்றீர்கள்.

பெரியார் மண்ணில் மொழிப் போர்த் தியாகிகளுக்கு வீர வணக்கம் செய்வதற்கு நீங்கள் குஷ்புவை நியமித்திருப்பதைப் பார்க்கும்போதுஅன்று முதல் இன்று வரை உங்கள் அணுகுமுறையில் மாற்றமே நிகழவில்லை என்பது புரிகிறது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்துமுகவரியே இல்லாத திருக்குவளை என்னும் சாதாரண கிராமச் சூழலில் வளர்ந்துஏழ்மையின் பிடியில் உழன்றுதன் முயற்சியாலும் ஆற்றலாலும்உழைப்பாலும்,தமிழன்னை உறவாலும் புகழின் சிகரத்தை எட்டிய உங்கள் சாதனை என்றும் என் ஆராதனைக்கு உரியவை. 

உங்கள் சந்தர்ப்பவாத சாகசங்களும்சொல் ஒன்று செயல் ஒன்றாக நீங்கள் நடத்தி வரும் அரசியல் நாடகங்களும்எண்ணற்ற தொண்டர்களின் வியர்வை நீரில் விருட்சமாக வளர்ந்த கழகத்தை உங்கள் குடும்பச் சொத்தாக மாற்றிவிட்ட சுயநலமும்ஊழலைத் தமிழினத்தின் பொதுப் புத்தியாக்கிவிட்ட உங்கள் அறம் பிறழ்ந்த அரசியலும் என்றும் என் நேர்மையான 
விமர்சனத்துக்கு உரியவை.

கொடநாட்டில் 600 ஏக்கர்


ராவணனை தேடி காவல்படை பத்து நாட்கள் வலை வீசி அலைந்து பின்னர் அவரது மனைவி ஹேமலதாவுக்கு சம்மன் அனுப்பிய பின்னரே ராவணன் பிடிபட்டார். காவல் துறை விசாரணைக்கு முன் தோட்டத்தில் தனி விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.

அவரை பின்பு காவல் துறை கவனித்த கவனிப்பில் அவர் சொன்ன ஒரு விஷயம் இப்பொழுது சிந்திக்க வைக்கிறது. அம்மாவுக்கு தெரியாமல் அவர் வாங்கிய ஒரே சொத்து கொடநாட்டில் 600 ஏக்கர் நிலம் வாங்கியதாம். இந்த 600 என்ன ராசியோ தெரியவில்லை ஆட்சியை கவிழ்க்க 600 கோடி சதி என்கிறார்கள். கண்டெய்னரில் 600 கோடி அனுப்பப்பட்டது என்கிறார்கள். 6 கண்டெய்னர் என்கிறார்கள் ஆட்டைக்கும் க்கும் அப்படி என்ன ராசியோ. சரி நம் விஷயத்துக்கு வருவோம். அம்மாவுக்கு தெரியாமல் வாங்கியதே600 ஏக்கர் என்றால் தெரிந்து வாங்கியது எவ்வளவு? எத்தனை கோடி தேறும். இதெல்லாம் அம்மாவுக்கு தெரியும் என்றால் அவருடைய பங்களிப்பு என்ன?

ராவணன் போட்டுக் கொடுத்ததின் பேரில்தான் திவாகரனும் பிடிபட்டுருக்கிறார். அது கூட இரண்டு பேருக்கும் இருந்த பனிப்போர் தான் காரணமாம். மேற்படி தகவல் எல்லாம் கழுகு புட்டு வைக்கிறது. (ஜூ.வி). சசிகலா வாயை திறந்தால் இன்னும் என்ன என்னவோ வருமாம்.

இப்பொழுது களை எடுக்கிறேன் என்று சால்ஜாப்பு சொன்னாலும் நடந்தவைக்கு யார் பொறுப்பு? இதையெல்லாம் மறைக்கத்தான் எதிர் கட்சிகளை சட்டசபையில் சீண்டி உசுப்பியது திசை திருப்பும் நாடகமா?

உலக நாடுகளின் குப்பை தொட்டியா இந்தியா?


 FEB 03: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதி மலைகிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மா, கொய்யா உள்ளிட்ட மரக்கன்றுகளை பயிரிட்டுள்ளனர். 

சமவெளியாக இல்லாத இந்த மலை பகுதிகளில் மரங்களுக்கு  தண்ணீர் பாய்ச்ச நூதன முறையை கடைபிடித்து வருகின்றனர்.  

இவர்கள் வளர்க்கும் ஒவ்வொறு கன்றுகளுக்கு அருகில் ஒரு மண் பானையை வைத்து நீரை நிரப்புகின்றனர். பானையின் கீழ் பகுதியில் சிறு துவாரம் போட்டு விடுகின்றனர். 


இதன் மூலம் தண்ணீர் சொட்டு சொட்டாக மரக்கன்றுகளுக்கு செல்கிறது. இதனால் மரக்கன்று நடப்பட்ட இடம் எப்போதும் ஈரமாகி செடி வளர உதவுகிறது. சொட்டு நீர் பாசனம் போல் செயல்படும் இதற்கு குறைந்த அளவே பணம் செலவு ஆவதுடன் மின்சாரம் வசதி தேவையில்லாததால் விவசாயிகள் இந்த முறையை ஆர்வத்துடன் பின்பற்றி வருகின்றனர்.

சிந்திக்கவும்: இப்படி நாட்டை வளப்படுத்த விவசாயிகள் மரம் வளர்த்து, விவசாயம் செய்து மண்ணையும், வளங்களையும், சுகாதாரத்தையும் பாதுகாக்கிறார்கள். ஆனால் மன்மோகன் சிங் அரசோ நாட்டின் கனிமவளங்களை சுரண்டி இந்தியாவை அந்நிய முதலாளிகளின் குப்பை கூடையாக மாற்ற திட்டம் தீட்டுகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கனிமவளங்களை சுரண்ட காட்டு வேட்டை ஆடுகிறது. கூடங்குளத்தில் அணு மின்நிலையம் திறந்து கடலை நம்பி வாழும் மக்களின் வயிற்றி அடிக்க முயற்சி செய்கிறது. கூடங்குளம் அணு உலை ஒன்று மட்டும்தான் என்று எண்ணி விடாதீர்கள். இது முடிந்ததும் நாடு முழுவதும் 40 அனுவுலைகளை அமைக்க அந்நிய கார்பரேட் நிறுவனங்கள் ஒப்ந்தத்துடன் காத்துக்கிடக்கின்றன. இனி மாவட்டம் தோறும் அனுவுலைகள்தான். 

இந்தியாவுக்கு வந்திருப்பது வல்லரசு என்கிற தாகம். இந்த தாகம் எடுத்தவர்கள் தாகத்துக்கு அருந்துவது எல்லாம் மனித இரத்தங்களைத்தான். இந்த தாகத்தின் காரணமாக ஈழத்திலே ஒன்றரை இலட்சம் மக்களை கொன்று குவித்தார்கள். ஈழத்து இன அழிப்புக்கு சிங்கள காடையர்களுக்கு ஆயுதம் கொடுத்து உதவிய புண்ணிய ஆத்மாக்கல்தான் இந்த காந்திய வழி கதர் சட்டைக்காரர்கள். காஷ்மீரில் படர்வது பனிமட்டும் அல்ல இந்த கயவர்களின் அடக்குமுறையும் அழித்தொழிப்பும்தான். 

ஒருபுறம் ஹிந்துத்துவா உண்டாக்க நினைக்கும் மதவாதம் மறுபுறம் கார்பெரெட் முதலாளிகளின் சகவாசம் என்று நாட்டின் வளர்ச்சியை நாசம் செய்கிறார்கள். இந்தியா என்கிற பூஞ்ச்சோலை அணு உலைகளால் சோமாலியாவாக மாறப்போகிறது. உலக நாடுகளில் அனுமதி மறுக்கப்படும் அல்லது கழிவுகளை வெளியாக்க, அவைகளை சுத்திகரிப்பு செய்ய ஆகும் செலவுகளை சமாளிக்க கார்பரேட் நிறுவனங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் சொர்க்க பூமிதான் ( குப்பை கூடைதான்) இந்தியா.  உலக நாடுகளின் குப்பை தொட்டி இந்தியா என்று சொன்னால் மிகையாகாது.  

சத்தியராஜின் முள்ளமாரித்தனம்


தமிழ் உணர்வு ரீதியான படங்களில் நடிப்பதற்கு ஒரு போதும் சம்பளம் வாங்கியதில்லை..... என பேட்டிகளில் எல்லாம் பில்ட் அப் கொடுக்கும் அந்த தகடுதகடு நடிகர்., "வெங்காயம்" படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஈ.வெ.ரா., கொள்கைகளை பறைசாற்றும் பகுத்தறிவுவாதி வேடத்தில் ஆடப்பாடியிருந்தார்!

இதற்கு சம்பளமே வாங்கவில்லை தகடுதகடு என ஒரு பக்கம் பப்ளிசிட்டியை கிளப்பிவிட்டு விட்டு., நடிகர் சப்தமில்லாமல் வாங்கிய சம்பளம்., இந்த ஒரே ஒரு பாடலில் தோன்றி நடிக்க நான்கு லட்சங்கள் என்கிறது விவரமறிந்த வட்டாரம்!

அதே மாதிரி, தான் ஹீரோவாக நடித்த படங்கள் வெளிவர எந்தவித உதவியும் செய்யாத ஒரே ஹீரோ தமிழ் சினிமாவில் தகடுதகடு ஹீரோவாகத்தான் இருக்க முடியும் என்கிறது அதே விவரமறிந்த வட்டாரங்கள்! இவரது உதவி எந்தவிதத்திலும் இல்லாததால் தான் "வெங்காயம்", "உச்சிதனை முகர்ந்தால்" உள்ளிட்ட பகுத்தறிவு தமிழுணர்வு படங்கள் ரிலீஸ், ரீரிலீஸ் என்று பல்வேறு போராட்டங்களை சந்திப்பதாகவும் சொல்கிறார்கள். பாவம்!

இதுவே ஹீரோ உதவிக்கரம் நீட்டியிருந்தார் என்றால் ஒரே ரிலீஸில் மேற்படி படங்கள் செமகல்லா கட்டியிருக்கலாம் என்றும் தகவல்கள் கசிகின்றன! பகுத்தறிவும், தமிழ் உணர்வும் சம்பள உணர்விற்கும் உணவுக்கும் அப்புறம் தான் போலும் தகடு தகடு நடிகருக்கு?!

  நன்றி:  http://vizhiyepesu.blogspot.in/2012/02/blog-post_7852.html