FEB 08: டெல்லி: "2ஜி' ஸ்பெக்ட்ரம் என்கிற இந்தியாவின் மிகபெரிய ஊழலின் ஊற்று கண்ணே பாரதிய ஜனதா கட்சிதான் என்பது வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தொலைதொடர்பு அமைச்சராக மறைந்த பிரமோத் மகாஜன் இருந்தார்.பிரமோத் மகாஜன் அமைச்சராக இருந்த காலத்தில் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளில் இருந்துதான் முதலில் ஊழல் ஆரம்பித்துள்ளது.
இதனால் "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலின் தொடக்கம் பாரதிய ஜனதாகட்சியே. நம்ம ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் நொங்கு தின்றவன் ஓடிவிட்டான் கூந்தளை நக்கியவன் மாட்டிகிட்டான்.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா அடித்த கொள்ளையை விட பலமடங்கு பாரதிய ஜனதாவின் தொலை தொடர்பு அமைச்சர் பிரமோத் மகாஜன் நிகழ்த்தி இருப்பதாக நம்பப்படுகிறது. 2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகள் குறித்த விவகாரத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக BJP கூட்டணி ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகள் குறித்த விசாரணை, தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக BJPயின் பிரமோத் மகாஜன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளை விசாரிக்கும் பணி, விரைவுபடுத்தப் பட்டுள்ளது. கடந்த 2001-07ம் ஆண்டு காலத்தில், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களின் ஒப்பந்த ஆவணங்களை அளிக்கும்படி, மத்திய தொலைத் தொடர்புத் துறை ஆணையத்துக்கு சி.பி.ஐ., உத்தரவிட்டுள்ளது.
நன்றி :http://www.sinthikkavum.net
0 comments:
Post a Comment