உண்மைசுடும்

Friday, 24 February 2012

சென்னை மாநகர காவல்துறையின் குட்டு வெளியாகி உள்ளது.

Police Commissioner J.K. Tripathy briefing the media.வங்கிக் கொள்ளையர்களை சுட்டுப் பிடித்ததாகவும், அவர்கள் பீகாரைச் சேர்ந்த வினோத் குமார், சந்திரி காரே, வினய் பிரசாத் அபய் குமார் மற்றும் ஹரீஷ் குமார் என்று மாநகர காவல் ஆணையாளர் திரிபாதி இன்று அறிவித்தார்.  இவற்றில் பீகாரைச் சேர்ந்த சந்திரி காரே என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப் பட்டது.  இந்த சந்திரி காரே த/பெ திரிபாலி காரே, மஞ்சிபூர், பட்டோட் மாவட்டம், பாட்னா, பீஹார் என்பவர், பீகார் மாநிலத்தில் தற்போது லாரி ஓட்டிக் கொண்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்று திரிபாதி நேற்று கூறிய அபய் குமார் என்ற பெயரில் அந்த முகவரியில் ஒருவருமே இல்லை என்பதும் வெளியாகியிருக்கிறது.   யாரென்றே தெரியாமல் சுட்டு விட்டு தவறான அடையாளத்தையும் அளித்த திரிபாதி இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ? 

சென்னை மாநகர காவல்துறையின் துணிகர செயலா அல்லது துரித செயலா?


கடந்த ஒரு மாதமாக சென்னை மாநகர காவல்துறையினரை பிடித்து உலுக்கிக் கொண்டிருந்த வங்கிக் கொள்ளை வழக்கு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.   கொள்ளையடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப் பட்ட 5 இளைஞர்களை சென்னை மாநகர காவல்துறை இரவோடு இரவாக சுட்டுக் கொன்றிருக்கிறது.  அடிக்கடி சொல்லிக்கொள்வார்களே….   ஸ்காட்லாண்டு யார்டுக்கு இணையான காவல்துறை என்று…  அந்த ஸ்காட்லாண்டு யார்டு போலீசையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது சென்னை மாநகர காவல்துறை.
DSC_6427
சென்னையில் பட்டப்பகலில் இரண்டு வங்கிகள் கொள்ளையடிக்கப் பட்டபோதே, சென்னை காவல்துறை ஆடித்தான் போனது. இது ஏற்கனவே ஆடிப்போயிருக்கும் சென்னை மாநகர காவல் ஆணையாளர் திரிபாதியின் நாற்காலியை மேலும் ஆடச் செய்தது.  சென்னை மாநகர ஆணையாளர் பதவியை பிடிக்க எப்போதுமே இருந்து வரும் போட்டியை எப்படியாவது சமாளித்து, தனது நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நெருக்கடியும் திரிபாதிக்கு இருந்தது.
இந்தப் பின்னணியில்தான் இந்த என்கவுண்டரை பார்க்க வேண்டும். வேளச்சேரியில் உள்ள வண்டிக்காரன் தெரு என்ற குடியிருப்புப் பகுதியில் இந்த என்கவுண்டர் நடந்துள்ளது.    இரவு 1 மணிக்கு இந்த என்கவுண்டர் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இன்று சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய திரிபாதி “நள்ளிரவு 12.30 மணிக்கு காவல்துறையினருக்கு வங்கிக் கொள்ளையில் சம்பந்தப்பட்ட நபர்கள் அந்தப்பகுதியில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் இரவு ஒரு மணிக்கு அந்த இடத்திற்கு சென்றனர்.  போலீசார் அந்த வீட்டை வெளியிலிருந்து பூட்டி விட்டு, உள்ளே இருந்தவர்களை சரணடையச் சொல்லியிருக்கிறார்கள்.  அனால் உள்ளே இருந்தவர்கள் சராமாரியாக காவல்துறையினரைப் பார்த்து சுடத் தொடங்கி விட்டனர். சுற்றியிருந்த மக்களின் பாதுகாப்புக்காகவும், காவல்துறையினர் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் வேறு வழியில்லாமல் சுட்டனர்.  கொள்ளையர்கள் சுட்டதில், காவல்துறை ஆய்வாளர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டது.   சுடப்பட்டதில் ஐந்து நபர்கள் காயமடைந்தனர்.   காயமடைந்தவர்களை அவசரமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றபோது, அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்து போனவர்களை புகைப்படம் எடுத்து கொள்ளை போன வங்கிப் பணியாளர்களிடம் காண்பித்ததில், அவர்கள் வங்கியை கொள்ளையடித்தவர்கள்தான் என்று அவர்கள் அடையாளம் காண்பித்தனர்.   அந்த வீட்டிலிருந்து 5 பிஸ்டல், 2 ரிவால்வர் மற்றும் மொபைல் போன்கள் மற்றும் 14 லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப் பட்டன” என்று தெரிவித்தார்.
DSC_6571
மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் படி, “நீதித்துறை நடுவரின் விசாரணை நடைபெற்று வருவதால், மேற்கொண்டு இந்த விவகாரம் குறித்து பேச முடியாது” என்றும் தெரிவித்தார்.
இறந்து போன,  வினோத்குமார், வினாய்குமார், ஹரீஷ்பிரசாத், சசிகரே, அபேகுமார்  ஆகியோரில் நான்கு பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்தவர்.    திரிபாதி சொல்வதை வைத்துப் பார்த்தால், வேளச்சேரி வீட்டுக்கு விசாரணைக்காக சென்ற இடத்தில் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதால், வேறு வழியின்றி காவல்துறையினர் திருப்பிச் சுட்டுள்ளனர்.
DSC_5599
சம்பவம் நடந்த வீட்டின் அருகே உள்ள மக்கள், காவல்துறையினர் பெரும் எண்ணிக்கையில் இரவு 10 மணி முதலே அந்த இடத்தைச் சூழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.  பத்து மணி முதல் அந்த இடத்தில் குவிந்த போலீசார், அருகாமையில் உள்ள வீட்டில் இருந்தவர்களை வீட்டினுள் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.  இரவு 12.30 முதல் 1 மணிக்குள் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.   திரிபாதி சொல்வது போல வெறும் விசாரணைக்காக அந்த வீட்டுக்கு சென்றவர்கள் இது போல பெருமளவில் ஆயுதங்களோடு சென்றது ஏன் என்பது இயல்பான கேள்வி.  கொள்ளையர்கள் வங்கிகளை கொள்ளையடித்தபோது ஆயுதங்கள் வைத்திருந்ததால் காவல்துறையினரும் ஆயுதங்களை எடுத்துச் சென்றனர் என்று சொல்லும் திரிபாதி இத்தனை போலீசார் அங்கே ஏன் சென்றனர் என்பதை விளக்கவில்லை. சாதாரண விசாரணைக்காகத்தான் காவல்துறையினர் அங்கே சென்றார்கள் என்றால், “ஆபரேஷன் டீமின் ஹெட்” என்று அடையாறு துணை ஆணையரை குறிப்பிடுவது ஏன் ?  சாதாரண விசாரணையைத்தான் “ஆபரேஷன்” என்று அழைப்பார்களா ?  மேலும் சாதாரண விசாரணைக்கு துணை ஆணையரை நள்ளிரவில் அனுப்ப வேண்டிய காரணம் என்ன ?
DSC_0874
அருகாமையில் குடியிருந்த பொதுமக்கள் அத்தனை பேரையும் வீட்டுக்குள் செல்லுமாறு இரவு 10 மணியிலிருந்தே காவல்துறையினர் மிரட்டியதிலிருந்தே இது எப்படிப்பட்ட ஒரு மோசமான படுகொலை என்பது தெரிகிறது.  என்கவுண்டர் நடந்த உடனே ஒரு பத்திரிக்கையாளரிடம் பேசிய இணை ஆணையர் ஒருவர், இரண்டு காவல் அதிகாரிகளுக்கும் எப்படிக் காயம் ஏற்பட்டது என்று கேட்டதற்கு, அவர்கள் இருவரும் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது, உள்ளே இருந்தவர்கள் அரிவாளால் வெட்டியதால் காயம் ஏற்பட்டது என்றார்.   ஆனால் திரிபாதியோ, காயமடைந்த இரண்டு ஆய்வாளர்களும், கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் காயம் ஏற்பட்டது என்றார்.   இது போன்ற போலி என்கவுண்டர்களில் காவல் துறையினருக்கு ஏற்படும் காயம் அத்தனையுமே, வயிற்றிலோ, தோள்பட்டையிலோ தான் ஏற்படுகிறது.   இந்தச் சம்பவத்திலும் காயம் ஏற்பட்ட இரண்டு ஆய்வாளர்களுக்கும் தோள்பட்டையிலும், வயிற்றிலும், நெற்றியிலும் காயம் ஏற்பட்டிருக்கிறது.   இறந்து போன ஐந்து இளைஞர்களுக்கு மட்டும் நெஞ்சில் குண்டு பாய்ந்திருக்கிறது.   இந்த மர்மத்திற்கு காரணம் என்ன என்பதற்கு திரிபாதி விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.
DSC_5562a
DSC_5569
இந்த இளைஞர்களை இப்படி துணிச்சலாக கொன்றதற்கு மற்றொரு முக்கிய காரணம், இவர்கள் அத்தனை பேரும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள், இவர்களுக்காக வழக்கு போடவோ, மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கவோ யாரும் வர மாட்டார்கள் என்ற துணிச்சலே காரணம்.  இது போன்ற போலி மோதல் படுகொலைகளை நீதிமன்றங்களும் உரிய தீவிரத்தோடு அணுகுவதில்லை என்பதும், காவல்துறையினரின் துணிச்சலுக்கு மற்றொரு காரணம். சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும், 15க்கும் மேற்பட்ட வழக்குகள் போலி என்கவுண்டர்கள் தொடர்பாக 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கிறது.
இறந்து போன ஐந்து பேரும் கொள்ளையர்கள் என்றே வைத்துக் கொள்ளலாம்.  அவர்கள் கொள்ளையடிக்கும் போது, எந்தவிதமான வன்முறைச் சம்பவத்திலும் ஈடுபடவில்லை என்பதை பார்க்க வேண்டும்.    ஆளில்லாத வங்கிகளாகப் பார்த்து 30 லட்ச ரூபாயை கொள்ளையடித்திருக்கிறார்கள்.  இவர்கள் செய்தது இவ்வளவு பெரிய தவறென்றால், பல கோடி ரூபாய்களை கொள்ளையடித் தவர்கள்தானே நமக்கு ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள் ?  66.5 கோடியோடு ஒப்பிடும்போது 30 லட்ச ரூபாய் ஒன்றும் பெரிய தொகை இல்லையே….
DSC_6624
மனித சமுதாயம் தோன்றி பல்வேறு கட்டங்களில் வளர்ந்து, இன்று மனித உரிமைகளை மதிக்க வேண்டும், மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற ஒரு சிறப்பான வளர்ச்சிக்கட்டத்தில் இருக்கிறது.   நமது குற்றவியல் சட்டத்தின் அடிநாதமே, குற்றவாளிகளை திருத்தி சமுதாய நீரோட்டத்தில் கலக்கச் செய்ய வேண்டும் என்பதுதான்.    இசுலாமிய நாடுகளிலும், சீனாவிலும் இருப்பது போல, துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை சீவியும் மரணதண்டனை வழங்கும் கொடிய வழக்கம் இந்தியாவில் இல்லை.  மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நாகரீக நாடாகவே நாம் இதுவரை அறியப்பட்டிருக்கிறோம்.  அப்படித்தான் அறியப்படவும் வேண்டும்.
நேற்று இரவு நடந்தது போன்ற போலி மோதல் படுகொலைகள் நமது சமுதாயத்தை காட்டுமிராண்டிக்காலத்துக்கே இட்டுச் செல்லும்.   அந்த அறையில் தங்கியிருந்த ஐந்து இளைஞர்களில் ஒரே ஒருவர் அந்தக் கொள்ளையில் சம்பந்தப்படாமல் இருந்திருந்தால், பறிக்கப்பட்ட உயிருக்கு என்ன பதில் சொல்வார் திரிபாதி ?
DSC_5118
இந்தத் திரிபாதி என்கவுண்டருக்கு பெயர் போனவர்.   அவர் 2001 அதிமுக ஆட்சிக் காலத்தில், சென்னை மாநகரத்தின் இணை ஆணையராக இருந்தபோது, ராஜாராம், வீரமணி போன்றவர்களின் என்கவுண்டர்களை நேரடியாக முன்னின்று நடத்தியவர். தற்போது தனது கமிஷனர் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காகவே இந்த என்கவுண்டரை நடத்தியிருக்கிறார் என்ற சந்தேகமே மேலோங்குகிறது.   மேலும், இன்று பெங்களுரில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா இன்று இரண்டாவது நாளாக சாட்சியம் அளிக்கும் நிலையில், அந்தச் செய்தியை பின்னுக்குத் தள்ளுவதற்காகவும் இந்த என்கவுண்டர் நடந்துள்ளதோ என்ற சந்தேகத்தையும் வலுவாக எழுப்புகிறார்கள் சில பத்திரிக்கையாளர்கள்.
DSC_5136
DSC_5155
இந்த தாக்குதலில் காயம் அடைந்ததாக வேடமிட்டுக் கொண்டு மருத்துவமனையில் படுத்திருக்கும் இரண்டு காவல்துறை ஆய்வாளர்களையும், நேரில் சென்று பார்த்து இந்த போலி என்கவுண்டருக்கு ஜெயலலிதா வலு சேர்ப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.  மோரில் விஷம் வைத்து வீரப்பனைக் கொன்றவர்களுக்கு இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு க்ரவுண்டு நிலமும், ஒரு படி பதவி உயர்வும் வழங்கியவர்தானே இந்த ஜெயலலிதா.
நுகர்வுக் கலாச்சாரம் மேலோங்கி இருக்கும் இன்றைய  சமுதாயத்தில் குறுக்கு வழியில் பணக்காரராக வேண்டும் என்ற உந்துதலில் தவறு செய்த இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்றால், தனக்கு பிடிக்காத ஐஏஎஸ் அதிகாரி மீது ஆசிட் வீசச் சொன்னவருக்கும், ஒரு சர்வே வெளியிட்டதற்காக மூன்று இளைஞர்களை உயிரோடு கொளுத்தியவர்களுக்கும் என்ன தண்டனை தர வேண்டும் ?

நன்றி :http://savukku.net

Monday, 20 February 2012

மின் தடை. உண்மை நிலை?

தினசரி 8 மணிநேரம், 10 மணி நேரம் மின்வெட்டால் தமிழகம் கதிகலங்கி நிற்கிறது. திடீரென இவ்வளவு மின்வெட்டு ஏன் என எல்லோரும் கேட்கிறார்கள்.


உண்மை நிலவரத்தை அரசு சொல்வதில்லை. சொன்னால் அர சின் ‘ஓரவஞ்சகம்’ மக்களுக்குப் புரிந்து விடும் என்பதால் மூடி மறைக்கிறது. 
பிப். 16ஆம் தேதி நிலவரப்படி தமிழகம் முழுவதற்குமான மின் தேவை 11,522 மெகாவாட். உற்பத்தி 8,792 மெகாவாட். ஏறத்தாழ 25 விழுக்காட்டுக்கும் குறைவாகவே மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது (மின் உற்பத்தி நிலவரம் பட்டியலில் உள்ளது). அப்படியா னால், மொட்டையாகக் கணக்குப் போட்டாலும் சராசரி 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே எல் லோருக்கும் (பெரும் தொழிற் சாலைகள் உட்பட) மின்வெட்டு இருக்கவேண்டும். ஆனால் சென்னையில் ஒரு மணிநேரமும் பிற மாவட்டங்களில் 8 மணி முதல் 11 மணிநேரமும் மின்வெட்டு அநியாயம் ஏன்?
சிறு மற்றும் குறுந்தொழில், பஞ்சாலை முத லாளிகள் ஒரு விளம் பரத்தை அளித்துள்ளனர்.

அவர்கள் அதில் நியாயமான சில கேள்விகள் எழுப்பி உள்ளனர்.


“தமிழகத்தின் உயர்மின் அழுத்த மின்சாரப் பயன்பாடு 3800 மெகாவாட் ஆக இருந்தபோதி லும், குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவு, சிமெண்ட் தொழிற்சாலைகள், இரும்பு தொழிற்சாலைகள், மாவு அரைக்கும் ஆலைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலான தொழிற்சாலைகளுக்கு உண் டான பயன்பாடு 1800 மெகாவாட் ஆக உள்ளது. இவர்கள் தங் களுடைய பலத்தினை அரசாங் கத்திடம் காண்பித்து, இந்த மின்சார வெட்டிலிருந்து விலக்கு பெற்றதன் காரணமாக இவர்க ளின் சுமை தென் மற்றும் மேற்கு தமிழகத்திலுள்ள சிறு, குறு மற்றும் இதரத்தொழில்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்த விதி விலக்கு பெற்ற பெரிய தொழிற் சாலைகள் அவர்களுக்கென்று உள்ள தனிப்பட்ட மின்கடத்தி யினை (னுநுனுஐஊஹகூநுனு குநுநுனுநுசு) பயன்படுத்தி அவர்கள் தங்க ளுக்கு தேவையான மின்சாரத்தை வெளியிலிருந்து பெற்று பயன் பெற வாய்ப்பு இருந்தும் அரசாங் கத்திடமிருந்து தங்களது செல் வாக்கால் குறைந்த செலவில் தடையில்லா மின்சாரம் பெற்று வருகிறார்கள். இந்த நிலை நியாயமா? ”

இப்போது நமது கேள்வியும் அதுதான்.

முதலாவதாக, வெளியில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வசதி வாய்ப்பிருக்கிற பன்னாட்டு முதலாளிகள் மற்றும் பெரும் முதலாளிகளுக்கு 1800 மெகாவாட் தடையில்லா மின் சாரம் வழங்கவேண்டுமா? அவர் களுக்கும் எல்லோரையும் போல் சம அளவு மின்வெட்டு அமல் படுத்த எது தடை? யார் தடை? உள்ளே பொதிந்திருக்கும் ரகசியம் என்ன?


இரண்டாவதாக, 3600 மெகா வாட் மின்சாரத்தை தினசரி உற் பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் தமிழக தொழிற்சாலை முதலாளிக ளிடம் உண்டு. அவற்றை இயக்கச் செய்வதில் தமிழக அரசு ஏன் கவனம் செலுத்தவில்லை? டீசலுக்கு மானியமோ அல்லது குறைந்த விலையில் டீசலோ வழங்க தமி ழக அரசு முயற்சித்தால் கணிச மான அளவு மின் வெட்டை இதன் மூலம் ஈடு செய்ய முடியும் அல் லவா? இதை செய்ய எது தடை? யார் தடை? உள்ளே பொதிந்தி ருக்கும் ரகசியம் என்ன?

வடசென்னை, மேட்டூர், தூத் துக்குடி, நெய்வேலி மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்டுள்ள பழுதை விரைந்து சீர்செய்ய தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்? தானே புயலை விட வேகமாக செயல்பட்டதாக சட்டமன்றத் தில் சவால் விட்டு பேசிய முதல் வர், இந்த விஷயத்தில் குறட்டை விடுவது ஏன்? எது தடை? யார் தடை? உள்ளே பொதிந்திருக்கும் ரகசியம் என்ன?

25 விழுக்காடு மின் உற்பத்தி பாதிப்பை ஈடு செய்ய வழியும் வாசலும் மேலே சொல்லப்பட் டுள்ளது. இவற்றை உடனடியாக செய்தால் சொற்ப அளவு மின் வெட்டோடு தமிழகம் நிம்மதிப் பெருமூச்சு விடுமே! இதைச் செய்ய எது தடை? யார் தடை? உள்ளே பொதிந்திருக்கும் ரகசியம் என்ன?


மின்வெட்டால் யார்யாரெல் லாம் எப்படியெல்லாம் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் மாணவர்களுக்கு வந்த சோதனை தான் கொடுமையானது. ‘சமச்சீர் கல்வியில்’ முதல்வர் ஜெயலலிதா அர்த்தமற்ற வீம்புகாட்டியதால் கிட்டத்தட்ட 2 மாதம் மாணவர் கள் படிப்பு பாழானது. இப்போது தேர்வு நேரத்தில் மின்சாரத்தை நிறுத்தி மீண்டும் மாணவர்களை பழிவாங்குவது நியாயமா? அது மட்டுமல்ல. வேலைக்கு மற்றும் சில தேவைகளுக்கு கணினி மூலம் விண்ணப்பிக்கச் சொல்கிறார்கள். அவர்கள் மின்சாரம் இல்லாத தால் பெரும் பாதிப்புக்குள்ளா கிறார்கள். பலருக்கு பதிவுமூப்பு கூட பறிபோகிறது. இப்படி சொல் லிக்கொண்டே போகலாம்.

நிர்வாகப் புலி என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் முதல்வர்; சங்கரன்கோயில் இடைத்தேர்தலுக்கு 26 அமைச்சர்களையும் லாரி லாரி யாக மிக்ஸி, கிரைண்டர்களையும் அனுப்பும் முதல்வர் மின்வெட் டால் மக்களின் துயர் களைய எப்போது விழிப்பார்?




நன்றி:http://suransukumaran.blogspot.com

Sunday, 19 February 2012

ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்!


FEB 12: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருடந்தோரும்"ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்" என்ற தலைப்பில் தேசிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்நிகழ்ச்சியில் ஆரோக்கியமான வாழ்விற்கு உடல்பயிற்சி இன்றியமையாதது  என்பதை  மக்களிடம் எடுத்து சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தி இலவசமாக யோகா,உடல்பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கிறார்கள். 

இதன் தமிழகத்தின்  துவக்க நிகழ்ச்சி கோவையில் நடை பெற்றது. இதில் கோவை மாநகர மேயர் செ. மா. வேலுச்சாமி அவர்களும், கோவை அரசு மருத்துவமனை சிவப்பிரகாசம்அவர்களும் பங்கு பெற்றனர். 


இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் ராஜா உசேன் வரவேற்புரை வழகினார் சிறப்பு விருதினரக மாநில தலைவர் இஸ்மாயில் அவர்கள் கலந்து கொண்டார். பெரும் திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.  இதில் யோகா வகுப்புகள் மற்றும் உடல்பயிற்சிகள் ஆகியவை பொதுமக்களுக்கு இலவசமாக கற்று கொடுக்கப்பட்டது.

சிந்திக்கவும்: யோகாசனம் என்கிற மக்கள் சொத்தை வைத்து ஒரு கூட்டம் காசு பார்க்கும் இந்த தருணத்தில் இதுபோல் இதை மக்களுக்கு இலவசமாக சொல்லிக்கொடுப்பது ஒரு சிறப்பான விடயம்தான். கார்பரேட் சாமியார்கள் யோகாசனத்தை வைத்து பலகோடிகள் சம்பாதித்துவெளிநாடுகளில் சொந்தமாக தீவும், ஹெலிஹாப்ட்டரும் வாங்கி இருக்கும் போது இந்த கலையை மக்களுக்கு இலவசமாக கற்று கொடுக்கும் இவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

கூடங்குளம் ஒரு சிங்கள அணு குண்டு!

FEB 19: ஈழத்தமிழர்களையும், இந்திய தமிழர்களையும் அழிக்கவல்ல அணு குண்டே கூடங்குளம் அணு மின்நிலயம். சிங்கள பேரினவாதமும், இந்திய ஹிந்தி அரசும் சேர்ந்து தமிழர்களை ஒடுக்கப்பட்ட  ஒரு இனமாக ஆக்கி எந்த உரிமையும் இல்லாத அடிமைகளாக ஆட்சி செய்து வருகின்றன. 

இந்த இரண்டு பேரினவாத அரக்கர்களின் இரத்த சாட்சியே ஈழத்து இன அழிப்பும், தமிழக மீனவர் படுகொலையும், முல்லை பெரியாரும், கூடங்குளம் அணு மின்னலயமும்ஆகும். ஏன் தமிழகத்து மின்சாரத்தை கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும், ஆந்திராவுக்கும் வாரி கொடுத்து விட்டு தமிழகத்தை இருளில் மூழ்கடிக்க வேண்டும்.

சுற்றுச்சூழலில் அக்கறையுள்ள பெங்களூரை சேர்ந்த அகமது என்பவர், சூரிய சக்தியால் இயங்கும் சிறு காரில், தென் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் தெரிவிக்கும் போது சூரிய சக்தி மூலம் எடுக்கப்படும் ஆற்றலை கொண்டு கார் மற்றும் மின் விளக்குகளை பயன்படுத்த முடியும். அதனால் இயற்க்கைக்கு பேராபத்தை உண்டாக்கும் அழிவு சக்திகள் தேவையில்லை என்று தெரிவித்தார் என்பது இதில் கவனிக்கத்தக்கது.

கூடங்குளம் அணு மின் நிலயத்திற்கு ஒரு கேடு உண்டானால் அதனால் பாதிக்கப்படப்போவது நாம் மட்டும் இல்லை ஈழத்து சொந்தங்கலுமே. இந்திய மற்றும் இலங்கை அரசு பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்ட ஒரு இனத்தை மீண்டும் ஒரு அழிவுக்குள் தள்ளும் வேலையே இது. அது மட்டும் அல்லாமல்  கடலை நம்பி வாழும் இலட்சக்கணக்கான் தமிழக மீனவர்களின் வாழ்வாதரங்களை அழிக்கும் ஒரு தீய சக்தியே கூடங்குளம் அணு மின்நிலையம். 

 கூடங்குளம் அணு மின்நிலையத்தை எதிர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை என்பதை மறக்க வேண்டாம். தமிழர்களே ஒன்று பட்டு ஒரே குரலாக கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்ப்போம்.

Saturday, 18 February 2012

விந்தை மனிதர் - பாலம் கல்யாண சுந்தரம் (Palam Kalyanasundaram)


சமீபத்தில் கேள்வியுற்ற, விந்தை மனிதர் - பாலம் கல்யாண சுந்தரம்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் மனம்போல தேவைப்படுவோருக்கு தேடிச் சென்று உதவுவதில், தான் சம்பாதித்த பணத்தை மற்றவருக்கு கொடுத்து உதவும் "தர்மவான்" திரு. பாலம் கல்யாணசுந்தரம் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். இவரைப் பற்றி......

இவரின் சொந்த ஊர் ஏர்வாடியில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கருவேலங்குளம். இவரது தந்தை பெயர் பால்வண்ணன். அந்த ஊர் மக்களின் நாட்டாமை. இவர்

* "பாலம் ஐயா" அவர்கள் நெல்லை மாவட்டத்துக்காரர். ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் கலைக்கல்லூரியில் நூலகராக பணியாற்றியவர்.

* கற்பனை செய்துகூட பார்க்கவியலாத கனவு மனிதராக காணப்படுகிறார்.

* தனக்கு வந்த பென்ஷன் தொகை 11 லட்சம் ரூபாயை அப்படியே குழந்தைகள் நல நலநிதிக்காக தந்தவர்.

அமெரிக்கா வழங்கிய 30 கோடி ரூபாயை உலக குழந்தைகள் நலனுக்காக கொடுத்தவர்.

* ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து அதன் வருமானத்தை மற்ற நற்பணிகளுக்காக கொடுத்தவர்.

* சூப்பர் ஸ்டார் ரஜினி இவர் நற்பண்புகளை கண்டு "இவரை தந்தையாக" தத்து எடுத்து வீட்டில் வைத்திருந்தார். தன்னை சந்திக்க வரும் அறிஞர் பெருமக்களை சுதந்திரமாக சந்திக்க முடியவில்லை என்று ஒரு சிறிய அறையில் தங்கி உள்ளார்.

இவருடைய பொது சேவைகள்

1) ஏழை எளிய மாணவர்களை தத்து எடுத்து கொள்ளுதல்

2) மாணவ மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்குதல்

3) 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.

4) பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நல் ஒழுக்கம், பொது அறிவு, அதிக மதிப்பெண் ஆகியவற்றுடன் தேர்வு அடையும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.

பாலம் ஐயா அவர்கள் உரை: - (அல்லது வேண்டுகோள்)

தமிழக அரசு ஊழியர்கள் நிலுவை தொகை பெறுவோர் தொகை 1150 கோடி. தங்களது நிலுவை தொகையினை அரசு வழங்கும்போது அவர்கள் புதிய சம்பளத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு பைசா அளித்தாலே ஒரு ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி கிடைக்கும்.

மத்திய அரசு 6வது ஊதியக்குழு அமுலானது அவர்களும் 17 சதவீதம் கொடுத்தாலல் ரூ. 4,000 கோடி கிடைக்கும்.

இந்த 3000 கோடியை, மக்கள் வரிபணத்தின் மூலம்தான் அரசு ஊதியம் மற்றும் நிலுவை தொகை அளிக்கிறது. வரி செலுத்தும் கோடிக்கணக்கான ஏழை மக்கள் பிள்ளைகள் படிக்க நமது வருவாயில் ஒரு சிறு பகுதியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே, இதை முழுவதும் கல்விக்கு பயன்படுத்தினால் அனைவருக்கும் ஏற்ற தாழ்வு இல்லா கல்வி கிடைக்கும்.

கல்வியில் ஒரு நாடு தன்னிறைவு பெற்றால் எல்லா வளங்களும்தானே வந்து சேரும். இது அரசு ஊழியர்களின் காதில் ஏறுமா?

இவரை பற்றி அறிஞர்கள் கூறும் கருத்தை தெரிந்து கொள்ளலாமா?

மாண்புமிகு டாக்டர் சா. ஜெகத்ரட்சன் எம்.ஏ., டி. லிட்.,

பாலம் ஐயா அவர்களை போல் ஒரு மனிதரை காண்பது அரிது. அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்று பெருமை கொள்கிறேன். சாதனையாளர்களின் சாதனையாளர் அவர்.

பாரத ரத்னா ஏ.பி. ஜே. அப்துல்கலாம், முன்னாள் குடியரசு தலைவர்

தன்னலம் இல்லாமல் வாழ்வது சிறப்பான பெருவாழ்வாகும். இறைவன் பா. கல்யாண சுந்தரத்திற்கு அந்த அரும்பெறும் வாழ்க்கையை கொடுத்திருக்கிறார். அவர் நிழலில் பலர் சிறப்படைந்துள்ளனர்.

பெருந்தலைவர் முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்கள் - (1-5-1963)

இந்தியாவிலே தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை அளித்த முதல் மாணவன் என்ற வகையில் நமது நாட்டின் பாதுகாப்பு நிதிக்கு தங்கம் வழங்கிய மாணவர் கல்யாண சுந்தரம் தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார்.

ஆளுநர் பாத்திமா பீவி (முன்னாள் தமிழக ஆளுநர்) (15.8.99)

நீதி மிகுந்த உங்கள் வாழ்க்கை மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

 கலைஞர்:(முன்னாள் தமிழக முதல்வர்)

அறிவு பரப்பும் ஆக்க பணியில் அயராது உழைக்கும் திரு கல்யாண சுந்தரனாரின் கடமை உணர்வு பாராட்டுதற்குரியது.

நீதிபதி நடராஜன் (உச்சநீதிமன்ற நீதிபதி) (ஓய்வு)

நல்ல தலைமை பண்புகளுடன் ஏராளமான இளைஞர்களையும் மாணவ மாணவிகளையும் ஒருங்கினைத்து பா. க., செய்து வரும் சேவைகள் நிச்சயம் ஒரு சமுதாய மாறுதலை எற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

நீதிபதி மோகன் (உச்ச நீதிமன்ற நீதிபதி) - (ஓய்வு)

பிறப்பாலே தமிழன், தொழிலால் கொடை வள்ளல், இமயம் போன்ற உயர்ந்த உள்ளம் கொண்ட கல்யாண சுந்தரம் 21ம் நூற்றாண்டின் சாதனை சக்கரவர்த்தி என்றால் மிகையல்ல.

இப்படி பல அறிஞர் நீதியரசர்கள், அரும்பெரும் தலைவர்களால் பாராட்டு பெற்ற போதும், மிகவும் எளிமையாக, அடக்கமாக, ஊருக்கு உழைக்கும் உத்தமனாக, உயர்ந்து மற்றவருக்கு பாடமாக வாழும் பா. கல்யாண சுந்தரம் அவர்களை வாழ்த்துவோம்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் :

இவரை பற்றி, விக்கி பீடியா வில் வலைபதிவு செய்ய இன்னும் முழுமையான தகவல்கள் தேவைபடுகின்றன.

இவரின் தொலைபேசி/செல்பேசி அல்லது முகவரி கிடைப்பின் தயவு கூர்ந்து மின்னஞ்சல் செய்க.

மத வாத இயக்கமல்ல! தீவிரவாத இயக்கம்!! யெச்சூரி!?


புது தில்லி, பிப்.17: ஆர்எஸ்எஸ் இயக்கமானது மதவாத இயக்கம் மட்டுமல்ல, பயங்கரவாத இயக்கம் என்பது மீண்டும் நிரூபணமாகி யுள்ளது.

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த செüகான், நீண்ட காலமாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருப்பவர். இந்த அமைப்பின் பல்வேறு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

2008-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி மாலேகாவ்னில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல், ஹைதராபாத்தில் மெக்கா மஸ்ஜித்தில் 2007-ம் ஆண்டு மே 18-ம் தேதி நடைபெற்ற தாக்குதல் மற்றும் ஆஜ்மீர் தர்காவில் 2007-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு உள்ள தொடர்புகள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து இந்தியாவில் பரவிவரும் ஹிந்துத்வா பயங்கரவாதம் வெளி உலகுக்குத் தெரியவந்துள்ளது என்று யெச்சூரி கூறினார். பயங்கரவாதத்துக்கு ஜாதி,மத பேதம் இல்லை என்பது புலனாகியுள்ளது. 2008-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் கவுன்சில் கூட்டத்தில் நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தளம் அமைப்புகள் மேற்கொள்ள விருந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் பற்றிய தகவல் வெளியானது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிரவாதத் தன்மை, நாட்டின் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது குறைத்துக் காட்டப்பட்டது. நாட்டின் முக்கியப் பிரச்னைகள் கிடப்பில் போட்டப்பட்டன. தங்களது அரசு 5 ஆண்டுக்காலம் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக கூட்டணிக் கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டனர். 

2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறை போல நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். 2003-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரையான காலத்தில் பல்வேறு வழக்குகள் மீதான விசாரணை பாரபட்சமாக நடத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் நான்டெட், பார்பானி, ஜால்னா, ஜலேகாவ்ன் ஆகிய பகுதிகளிலும் உத்தரப் பிரதேச த்தில் மாவ் மற்றும் கான்பூரிலும், தமிழகத்தில் தென்காசியிலும் வழக்குகள் பாரபட்சமாக நடந்துள்ளன.

இத்தகைய மதவாத அமைப்புகளின் செயல்பாடுகளை சகித்துக்கொள்ளும் போக்கு ஏற்புடையதல்ல. தங்களது இயக்கத்தில் சிலரது செயல்பாடுகள் இயக்கக் கொள்கையிலிருந்து சற்று விலகிச் செல்வதாக ஆர்எஸ்எஸ் குறிப்பிடுகிறது. அதற்காக ஒட்டுமொத்த இயக்கத்தைக் குறைகூறாதீர்கள் என்றும் வலியுறுத்துகிறது. 

ஆனால் இவ்விதம் கூறுவதில் அர்த்தமில்லை. மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேயின் சகோதரர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தீவிர உறுப்பினர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பதையும் யெச்சூரி சுட்டிக்காட்டியுள்ளார். 

ஆர்எஸ்எஸ் இயக்க நிறுவனரான டாக்டர் ஹெக்டேவாருக்கு முன்னு தாரணாக விளங்கியவர் பி.எஸ் மூன்ஞ்சே. இவர் இத்தாலிக்கு சென்று பாசிச சர்வாதிகாரி முசோலினியை 1931-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி சந்தித்துப் பேசியுள்ளார். மூன்ஞ்சே தனது டைரியில், மார்ச் 20-ம் தேதி எழுதிய விவரத்தில், பாசிச இயக்கத்தால் தான் ஈர்க்கப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர் படையை உருவாக்குவதன் மூலம் இதை சாத்தியமாக்கமுடியும் என்ற முசோலினியின் கருத்தை அவர் ஏற்றார். இதையடுத்து நாடு திரும்பிய அவர் நாசிக்கில் 1935-ம் ஆண்டு மத்திய ஹிந்து ராணுவ கல்வி மையத்தை தொடங்கினார். இந்த மையம்தான் இப்போது ஹிந்துத்வா தீவிரவாத பயிற்சி மையமாக மாறிவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மதச்சார்பற்ற நாடாக திகழும் இந்தியாவை, ஹிந்துக்களின் நாடாக மாற்றும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தீவிரமாக உள்ளது என்று யெச்சூரி குறிப்பிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் சதியை முறியடிக்க வேண்டும் என்று கம்யூனிச தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நன்றி : http://dinaex.blogspot.com

Thursday, 16 February 2012

ஹிட்லரும் மோடியும் ஒன்றா?


FEB 09: ஆமாம்! நாங்கள் ஒட்டிப்பிறக்காத இரட்டையர்களே.  ஹிட்லரே எனது ரோல் மாடல். ஹிட்லரிடம் இருந்துதான் நான் பாசிசம் பயின்றேன். 

அவரிடம் இருந்துதான் வெறுப்பு தத்துவத்தை (HATE POLICY)  பயின்றேன்.  பெண்களையும், வயதானவர்களையும், சிறுவர்களையும் ஈவு இரக்கமில்லாமல் கொல்வது எப்படி என்றும் கற்றுக்கொண்டேன். 

சொந்த சமூகத்தின் மக்களை நாங்களே கொன்று விட்டுஅதை காரணமாக வைத்து கூட்டு படுகொலைகள் செய்வது எப்படி? அதை திட்ட மிட்டு மறைப்பது எப்படி? என்பதை எல்லாம் எனக்கு கற்று கொடுத்த ஆன்மீக குருவே ஹிட்லர்தான். 

காந்தியை கொன்ற கோட்சேயும் அவர் அங்கம் வகித்த ஆர்.எஸ்.எஸ். இயக்கமுமே என்கூட்டாளிகள். வரலாறு ஹிட்லரை தூற்றினாலும், கொலைகாரன், பயங்கரவாதி என்று சொன்னாலும் அவரே எங்களின் பேச்சு மூச்சு, சித்தாந்தம். வரலாறு அவரை மறந்தாலும் நாங்கள் அவரை மறக்கவில்லை.

ஜெர்மனியில் அவர் கடைபிடித்த கொள்கைகளையும், சித்தாந்தத்தையுமே நன் குஜராத்தில் கடை பிடிக்கிறேன். அவரை பின்பற்றியே நான் குஜராத் இன அழிப்பை நடத்தினேன். அவர் உலகை ஆட்சி செய்ய நாசி படை நடத்தினார். நான் இந்தியாவை பிடிக்க ஆர்.எஸ்.எஸ். பாசிச படைநடத்துகிறேன். காவல்துறை, உளவுத்துறை, நீதி துறை எல்லாம் என்கைகளில்.   

குஜராத் இனப்படுகொலை:2002 ஆண்டு  மோடி தலைமையில் நடத்தப்பட்ட இன படுகொலையில் சுமார் 5000 பேருக்கு அதிகமான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.தெஹல்கா பத்திரிக்கை நடத்தி இரகசிய பத்திரிகை புலனாய்வுகளில் கொலைகளை செய்த காவி பயங்கரவாதிகள் தாம் செய்தவற்றை பெருமையுடன் அவர்கள் நிருபர்கள் என்று தெரியாமல் கக்கியவைகள் தெஹல்கா வெளியிட்டது. இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முஸ்லிம் பெண்கள் பழங்கள் போல் இருந்தார்கள் அவர்களை நாங்கள் சளைக்காமல் ருசித்தோம், பின்னர் உயிருடன் எரித்தோம்’ என்றும், கிராமம் கிராமமாக சென்று ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை தொடரான கற்பழித்து பின்னர் மார்பகங்களை அறுத்து சித்திரவதை செய்து கொலைசெய்தோம் என்றும் மஸ்ஜிதுகளில் கூட்டம் கூட்டமாக முஸ்லிம்களை குவித்து கொலைசெய்து விட்டு பெட்ரோல் ஊற்றி  மஸ்ஜிதுகளுடன் எரித்தோம் என்றும் தமது வீர சாகசங்களை பெருமையுடன் கூறினர் காவி பயங்கரவாதிகள்.

தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முன்னாள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் இஹ்சான் ஜாஃப்ரியின் வீட்டுக்குள் தஞ்சமடைந்த முஸ்லிம் சிறுவர், சிறுமியர், பெண்கள் வயோதிபர் என்று 72 பேரை பயங்கரமான முறையில் இந்தியாவில் காவிபோலீஸ் படையின் உதவியுடன் வெட்டியும், குத்தியும் கொலை   கொலை செய்தனர் காவி பயங்கரவாதிகள். இவ்வினப் படுகொலைகளுக்கு நீதி வேண்டி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் சுப்ரீம் கோர்ட்  அதை உள்ளூர் கோர்ட்டே நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் குஜராத் கலவரத்தைப் பற்றி விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு, தன் இறுதிக்கட்ட அறிக்கையை உள்ளூர் கோர்ட்டில் சமர்ப்பித்தது. இவ்வழக்கில்,நரேந்திர மோடியை விசாரிக்கத் தேவையில்லை என, சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை அளித்துள்ளது.  இந்தியாவை உலுக்கிய மாபெரும் இனப்படுகொலையை நடத்திய நரேந்திர மோடி அதில் இருந்து தப்பித்து கொண்டான். நீதி செத்தது இனி, முஸ்லிம்கள் உயிர் வாழ்வது என்பது கேள்விக்குறியே. 


நன்றி : http://www.sinthikkavum.net/ 

Tuesday, 14 February 2012

காதலர் தின கொண்டாட்டம்- கலாச்சார சீர்கேடா? சமூக சீர்திருத்தமா?


காதலை நேசிப்போருக்கு மட்டுமே உரிய நாள் அல்ல பிப்ரவரி 14!
சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை அகற்ற “ஆதலினால் காதல் செய்வீர்” என்று மலர்க்கொடி தூக்குவோரும் “அய்யோ! சமூகக் கட்டுமானம் சரிந்து போகிறதே” என்று கலாச்சார காவலர்களாக அவதரிப்போரும் உச்சரிக்கும் நாளும்கூட!
காதலர் தினத்தின் பின்னனி
காதலர்களை இணைத்து வைத்ததற்காக மரித்துப் போன பாதிரியாரின் நினைவுநாள்தான் பிப்ரவரி 14. கி.பி. 3-ம் நூற்றாண்டில் ரோமப் பேரரசன் இரண்டாம் கிளாடியஸ் காலத்து காதல் கதை!
திருமணத்துக்கு தடைவிதித்து பேரரசன் பிறப்பித்த ஆணையை மீறி காதலர்களை இணைத்து வைத்ததற்காக மரணதண்டனைப் பெற்ற பாதிரியாரின் பெயர்தான் வேலன்டைன்ஸ்!
கி.பி.5-ம் நூற்றாண்டு வரை கிறித்துவர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு விடுமுறை நாளாக அனுசரிக்கப்பட்ட வரலாறும் இருந்திருக்கிறது. மேற்குலக நாடுகளில் மட்டுமே கடைபிடிக்கப்பட்ட பிப்ரவரி 14- காதலர் தினம் என்பது இந்தியாவின் தாராளமயப் பொருளாதாரக் கதவுகள் திறக்கப்பட்ட காலத்தில் குடியேறிவிட்டது.
ஆண்டுதோறும் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் புத்தாண்டு கொண்டாட்டத்தைப் போல் இளைஞர் பட்டாளம் கூத்தாடி மகிழ்கிற ஒரு நாளாகிவிட்டது.
காதல்
ஆதாம்-ஏவாள் காலத்திலிருந்து இன்றைய இளசுகள் வரை காதலை சுமக்காத தலைமுறையே இருந்தது இல்லை. சீர்திருத்தம், புரட்சி பேசிய போராளிகள் காதலை நேசிக்காமல் இருந்தது இல்லை. ஆன்மீகம், தத்துவம் பேசியவர்களும் காதலிலிருந்து விலக்குப் பெற்றுவிடவில்லை.
“‘தொடுதலும், புணர்தலும் காதலின் நெருங்கிய மொழிகள். அவற்றைப் பேசாதே எனச்சொல்லும் தத்துவங்கள் யாவும் பொய் பேசும்.’ -
“‘தருதலும் பெறுதலுமற்ற கருணைப் பெருவெளியில் சிறகுச்சிக்கலின்றிப் பறத்தலே காதல்! முழு விடுதலையை மூச்சிழுத்துப் பூப்பதுதான் காதல்.’ இவை கவிஞர் அறிவுமதியின் வரிகள்.
ரசிக்க வேண்டிய, அனுபவிக்க வேண்டிய ஒரு மென்தன்மையான காதலைக் கொண்டாடுவது என்பது இப்போது வன்முறை வெடிக்கும் ஒரு நாளாக விஸ்வரூபமெடுத்துவிட்டதுதான் காதலுக்கு நேர்ந்த சோகம்!
காதலர் தினத்தின் விஸ்வரூபம்
உலக நாடுகளிலேயே சாதிய ஏற்றத் தாழ்வுகளை ஆழப் பதிந்துகிடக்கும் ஆணிவேரில் சுமந்துகொண்டிருப்பது இந்திய சமூக அமைப்பு. இந்தியாவில் முளைத்த அல்லது கால்பதித்த எந்த மதத்தையும் இந்தப் பிரிவினை விட்டுவைக்கவில்லை. மதங்கள் சாதிய அமைப்புகளோடு பின்னிப் பிணைந்தே இருக்கிறது.
இதனால் சமூகம் பற்றி சிந்தித்த தந்தை பெரியார் இத்தகைய ஏற்றத் தாழ்வுக் கட்டுமானங்களை கலகலக்க காதல் திருமணங்கள் அவசியம் என்று வலியுறுத்தினார். பெரியாரைப் பின்பற்றுகிற இயக்கங்கள் காதலர் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்கின்றனர்.
ஆனால் இந்தியாவின் கலாசாரம் என்பது தனித்துவமானது. இதனை சீர்குலைக்கும் வகையில் மேற்குல நாடுகளைப் போல் நடுவீதியில் கட்டிப்பிடித்து பொது இடங்களில் கும்மாளமிட்டுக் கொண்டிருப்பது கலாசார சீர்கேடு என்பது எதிர்ப்பாளர்களின் கருத்து.
காதலர் தினத்தன்ரு காதலர்களை காயப்படுத்தும் விதமாக நாய்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கிற அளவுக்கு இறங்கிப் போகின்றனர் கலாசார காவலர்கள்! சமூகக் காவலர்களும் கலாசார காவலர்களும் மோதுகிற களமல்ல காதலர் தினம்..
விநாயகர் சதுர்த்தி நாள், பாபர் மசூதி இடிப்பு நாளுக்கு இணையாக பதட்டத்தை உருவாக்காதீர்கள்
கொள்கைகளைப் பேசலாம்! வெளிப்படுத்தலாம்!
காதலர் தினத்தைக் கொண்டாடுகிறோம் என்று கூறிக் கொண்டு எதிர்தரப்பை உசுப்பேற்றாமல் இருப்பதும் காதலர் தினத்தை எதிர்க்கிறோம் என்று கூறிக் கொண்டு காதலை கொச்சைப்படுத்தாமல் இருப்பதுமே அனைவரது எதிர்பார்ப்பு. காதலை அனுபவித்து கொண்டாட விழைவோரின் கனவுகளை கானல் நீராக்கிவிட வேண்டாம்!
நன்றி :http://yarlosai.com

காதலர் தினம் கூடுமா? காதலித்தால் பாவமா?

FEB 14: காதல் ஒரு பருவகால உந்தல். பருவ வயதை அடைந்த ஆண்,பெண் ஒருவேர்மேல் ஒருவர் கொள்ளும் ஈர்ப்பே காதல் ஆகும்.

 ஒருவர் மேல் காதல் உண்டாக அழகு என்கிற புற தோற்றங்களோ அல்லது அறிவு சார்ந்த கல்வி, வீரம், விவேகம், சமூக சிந்தனைகள் போன்ற அக தோற்றங்களோஒரு காரணமாக இருக்கலாம். 

தனது மனதுக்கு  பிடித்தவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் காதலின் கடைசி இலக்காக இருக்கிறது. அதாவது காதல் என்பதின் கடைசி இலக்கு திருமணமே. 

ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு காலத்தில், காதல் அனுபவம் வந்து சென்றிருக்கும். அது பருவ வயதில் ஏற்ப்படும் சுகமான அனுபவம். காதல் என்றால் செல்போன் காதல் என்று நினைத்து விடாதீர்கள். நாம் பருவ வயதை கடந்து வரும்போது யாரையாவது நமது மனதுக்கு பிடிக்கும்.

ஆனால் நீங்கள் அவர்களோடு பேசி இருக்க கூட மாட்டீர்கள். இயல்பாகவே உங்கள் மனதுக்குள் ஒரு எண்ணம் தோன்றும் இவரை திருமணம் செய்தால் நலமாக இருக்கும் என்று மனம் எண்ணும்.இதுபோல் உள்ள சிறு சிறு விஷயங்கள் தொடங்கி ஒருதலை காதல் முதல் ஒருதடவை பார்த்த காதல்வரை ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இந்த விஷயம் கடந்தே சென்றிருக்கும். 

சங்ககால காதல் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வதோடு முடிந்து விடும். கண்களாலேயே பேசிகொள்வது ஏதாவது திருமணம், பண்டிகைகள் என்று பொது விசயங்களில் சந்தித்து கொள்வது என்பதோடு சரி. அன்றைய காலத்தில் காதல் என்பது உடல் சார்ந்த ஒரு விசயமாக இல்லாமல் மனம் சார்ந்த விசயமாக இருந்தது. காதல் என்றால் அன்பு, நேசம், பாசம் என்று ஒரு வரையறைக்குள் இருந்தது. 

ஆனால் இன்றோ நிலைமை வேறு ஒரு  நாளைக்கு ஒரு காதல் என்று பாஸ்ட் புட் வேகத்தில்இருக்கிறது. இந்த காலத்து  காதல்களில் பெரும்பான்மை உடல் கவர்ச்சியாலே வருகிறது. இன்று காதல் என்பது முக கவர்ச்சியில் தொடங்கி காமத்தில் முடிந்து விடுகிறது. காதலித்து திருமணத்திற்கு பின்னால் நடக்க வேண்டிய விஷயங்கள்  திருமணத்திற்கு முன்னாள் நடப்பதால் பெருன்பான்மையான காதல்கள் கானல் நீராகிப்போகிறது.

இப்படிப்பட்ட காதல்கள் உருவாக ஒரு வகையில் தாய் தந்தையர்களும் ஒரு காரணம் என்றே சொல்லலாம். காதல் என்பதன் முடிவு திருமணம் என்றிருக்க சொந்தம் விட்டு போக கூடாது, பணம், புகழ் இவற்றுக்கு ஆசைப்பட்டு தகுதியில்லாத திருமணங்களை  பெற்றோர்கள் முடித்து வைப்பதின் விளைவே இந்த கண்டதும் காதலின் அஸ்திவாரம்.  இன்றைய இளைய தலைமுறையினர்  காதல் செய்து திருமணம் செய்து கொண்டால்தான் சந்தோசமாக வாழமுடியும் என்று எண்ணுவதற்குபெற்றோர்கள் அதிமுக்கிய காரணியாக அமைந்து விட்டார்கள்.

திருமணம் முடிக்கும் முன் மணமக்களிடம் சம்மதம் கேட்பது என்பது ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.  அந்த பையனின், பெண்ணின் மனதில் என்ன விருப்பம் இருக்கிறது என்று அறிந்து கொள்ள யாரும் தலைப்படுவதில்லை. பெற்றோர்களால் நிச்சயக்கப்படும் திருமணங்களில் ஏற்ப்பட்ட தோல்வியே இந்த கண்டதும் காதல் கலாச்சாரத்தை உருவாக்கியதுஇன்றைய பிள்ளைகள் பெற்றோர்களை இந்த விசயத்தில் நம்பத் தயாராக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. 

மற்றபடி பிப் 14  இல்  காதலர் தினம் கொண்டாட்டங்களை உருவாக்கியது  நமது கார்பெரெட் முதலாளிகளே. இப்படி ஒரு குறிப்பிட்ட தினத்தை மேலைநாடுகளில் உண்டாக்கி அதன் மூலம் மக்களின் பொருளாதாரத்தை சுரண்டுவதே இவர்கள் எண்ணம். காதலர் தினம் என்பது கார்பரேட் முதலாளிகளின் தினமே. உலகின் பலபகுதிகளில் மக்கள் உணவில்லாமல் பட்டினியில் சாகும் போது இதுபோன்ற கேளிக்கைகள் அவசியமற்றதே. மற்றபடி காதல் என்கிற ஒரு உணர்வுக்கு ஒரு தினம் எடுத்து (ஒரு விழா ) அதையும் செயற்கை ஆக்கவேண்டாமே.

Monday, 13 February 2012

கறுப்புப் பணம் பதுக்குவதில் உலகிலேயே முதலிடம் இந்தியர்களுக்குதான்!

ரூ 24.5 லட்சம் கோடி அளவுக்கு கறுப்புப் பணம பதுக்கி வைத்துள்ளதன் மூலம், இந்த விஷயத்தில் உலகிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளனர் இந்தியர்கள்.

இந்தத் தகவலை சிபிஐயின் இயக்குநரே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஊழல் ஒழிப்பு மற்றும் சொத்து மீட்பு பற்றிய சர்வதேச அளவிலான திட்டம் குறித்து சர்வதேச போலீஸ் அமைப்பின் முதலாவது மாநாடு நேற்று டெல்லியில் நடந்தது. 19 நாடுகளை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள், நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் சி.பி.ஐ. இயக்குனர் அமர் பிரதாப் சிங் பேசுகையில், "இந்தியர்கள் வரி ஏய்ப்பு செய்து, சுவிட்ஸர்லாந்து, மொரீஷியஸ், பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள் நாடு, லிச்டென்ஸ்டைன் போன்ற வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் ரூ.24றி லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. குறிப்பாக சுவிட்சர்லாந்து வங்கிகளில் அதிக அளவில் கறுப்பு பணம் பதுக்கியவர்களில் இந்தியர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

53 சதவீத நாடுகளில் மிக சொற்ப அளவிலேயே ஊழல் நடப்பதாகவும், அங்கு சர்வதேச பண பரிமாற்றம் வெளிப்படையாக நடப்பதாகவும் கூறுகின்றன. மிக, மிக குறைந்த ஊழல் நடக்கும் நாடுகளில் நிïசிலாந்து முதலிடத்திலும், சிங்கப்பூர் 5-வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 7-வது இடத்திலும் உள்ளன. ஆனால், அந்த நாடுகள்தான் சட்ட விரோதமாக கறுப்பு பணத்தையும், ஊழல் பணத்தையும் பதுக்கி வைக்க இந்தியர்களுக்கு புகலிடம் கொடுத்து ஆதரிக்கின்றன.

அந்த நாடுகளிடம் இருந்து இந்த சட்டவிரோத பணத்தை மீட்பது தொடர்பான தகவல்களை பெறுவதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது. அந்த நாடுகளுக்கு இடையே போதிய அரசியல் ஒத்துழைப்பு இல்லாததும், ஏழை நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களது கறுப்பு பணத்தை அங்கு பதுக்கி வைப்பதால், அதற்கு இடம் கொடுக்கும் நாடுகளின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதாலும் இந்த கால தாமதமும், சிரமும், வீண் செலவும் உண்டாகிறது.

மேலும், அந்த கறுப்பு பணத்தை கண்டுபிடிப்பதிலும், முடக்குவதிலும், பறிமுதல் செய்வதிலும், மீட்பதிலும் சட்ட ரீதியான சவால்கள் உள்ளன. சட்டவிரோத பணம் பற்றி விசாரிப்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. நீண்ட காலம் பிடிக்கிறது. மிக அதிக அளவில் செலவு பிடிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, நிபுணத்துவமும், அரசியல் உறுதியும் தேவைப்படுகிறது.

2ஜி ஊழல் பணம்
India
சி.பி.ஐ. சமீபத்தில் விசாரணை நடத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், மதுகோடா ஊழல் போன்ற வழக்குகளில் சட்ட விரோதமான பணம் துபாய், சிங்கப்பூர், மொரிஷியஸ் போன்ற நாடுகளுக்கு முதலில் சென்று, அங்கிருந்து சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு கொண்டு போய் பதுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

சட்ட விரோதமாக பணம் பதுக்கும் கிரிமினல்கள் குட்டி, குட்டி கம்பெனிகளை தொடங்கி, ஒரு கணக்கில் இருந்து இன்னொரு கணக்குக்கு ஒரு சில மணிகளிலேயே அந்த சட்ட விரோத பணத்தை மாற்றி, பதுக்கி விடுகிறார்கள். வங்கி பரிமாற்றத்துக்கு எல்லை கிடையாது என்பதால் இந்த சட்ட விரோத பண பரிமாற்றம் லகுவாக நடக்கிறது. நாடு விட்டு நாடு பணம் கொண்டு செல்லப்பட்டு பதுக்கப்படுகிறது.

கிரிமினல் நடவடிக்கைகள் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு சட்ட விரோதமாக ரூ.50.5 லட்சம் கோடி கொண்டு செல்லப்பட்டு பதுக்கப்படுவதாக உலக வங்கி மதிப்பிட்டு உள்ளது. இதற்காக வளரும் நாடுகளில் மட்டும் அரசு ஊழியர்களுக்கு ரூ.40 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டதாகவும் உலக வங்கி மதிப்பிட்டு உள்ளது. இந்த சட்ட விரோத பணத்தில் கடந்த 15 ஆண்டுகளில் 25 ஆயிரம் கோடி ரூபாய்தான் மீட்கப்பட்டு இருப்பதாகவும் உலக வங்கியின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது," என்றார்.

நன்றி :http://www.vivasaayi.com